படுக்கையில் கிடந்த விவசாயி, தன் சோம்பேறி மகனை அழைத்தார். ""ராமு! சொல்றத கேளுடா! என் காலத்துக்கு அப்புறமா வயலை வித்துடாதே! அங்கே புதையல் வச்சுருக்கேன். எந்த மூலையில் இருக்குனு ஞாபகமில்லே. ஒரு இடம் பாக்கி இல்லாம கலப்பையால் நல்லா உழுதிடு. புதையலை எடுத்து புத்தியா பொழச்சுக்கோ'' என்று சொல்லி உயிர் விட்டார். மகன் இந்த ரகசியத்தை அம்மாவிடம் கூட சொல்லவில்லை.
ஒரு வாரத்தில் நல்ல மழை பெய்தது. ராமு கலப்பையுடன் வயலுக்குப் புறப்பட்டான். அவனைக் கண்ட ஊரார்,"" அப்பன் போனதும், புள்ளைக்கு நல்ல புத்தி வந்திடுச்சு போலிருக்கு'' என்று பேசிக் கொண்டனர். ஆனால், ராமுவோ புதையலைத் தேடிப் போகிறான் என அவர்களுக்கு தெரியாது.
ஒரு மண் கட்டியைக் கூட விட்டு வைக்கவில்லை. மூலை முடுக்கெல்லாம் ஆழமாக உழுது விட்டான். புதையல் கிடைத்த பாடில்லை. அப்பா மீது கோபம் வந்தது.
இருந்தாலும் அடக்கிக் கொண்டான்.
அடுத்தடுத்த வயல்களில் நெல் விதைக்க தொடங்கினர். உழுதது வீண் போகாமல்
இருக்க தானும் விதைத்தான். விதை முளை விட்டதைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தான். ஆர்வமுடன் பயிர்களைப் பாதுகாத்து நீர் பாய்ச்சினான். அறுவடை நெருங்கியது. எதிர்பார்த்ததை விட இருமடங்கு விளைச்சல் வந்தது. கிடைத்த வருமானத்தில் தங்கக்கட்டி வாங்கினான்.
"புத்தியா பொழச்சுக்கோ ராமு' என்று அப்பா சொன்னது உழைப்பின் உயர்வைக் குறிப்பிட்டு தான் என புரிந்து கொண்டான்.

No comments:
Post a Comment