Thursday, May 28, 2015

வாழ்க்கை முழுமை அடைவது எப்போது?!


வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம் கிடைத்துவிட்டால், பிறகு நமக்குள் எல்லையற்ற ஆனந்தமும் முழுமையும் உணரப்பட வேண்டுமல்லவா?! ஆனால், எல்லாமும் கிடைத்த பலபேர் தங்கள் கடைசி நாட்களில் தாங்கள் எதையோ இழந்துவிட்டதகாவே உணர்கிறார்கள். ஏன் இப்படி நடக்கிறது? உங்கள் கடைசி நாட்களில் இப்படியில்லாமல் முழுமையை உணர்ந்திட சத்குருவின் வழிகாட்டுதல்கள் இங்கே! கேள்வி படித்து முடித்து கை நிறையச் சம்பாதித்தேன். என் குழந்தைகளையும் நன்றாகப் படிக்கவைத்து, திருமணமும் செய்துவைத்தேன். ஓய்வும் பெற்று போதுமான அளவு ஓய்வூதியமும் வருகிறது. எந்தக் குறையுமில்லாமல், எல்லாவற்றையும் நிறைவாகச் செய்து முடித்துவிட்டதாக ஒருபுறம் மூளை சொல்கிறது. ஆனால் என் மனதில் ஒரு நிறைவின்மையும் வெறுமையும் இருக்கிறது. இன்னும் எதையோ தேடுகிறது. எதை நான் கோட்டைவிட்டேன், எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா? சத்குரு: “ஒரு யோகி புதிதாக ஒரு கிராமத்துக்கு வந்தார். அவருடைய முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருந்தது. ஊர் மக்கள் அவரை வணங்கினார்கள். ‘சாமி, ஏதாவது கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்’ என்று கேட்டார்கள். ‘வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்’ என்றார் யோகி. மக்கள் அடுத்தநாளும் வந்தார்கள். பணிந்து, ‘அடுத்த போதனை என்ன?’ என்று கேட்டார்கள். மனித மனம் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கும். ‘வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்’ என்றார் மறுபடியும். அடுத்தடுத்த நாட்களிலும் அதையே அவர் சொல்லிக்கொண்டு இருந்தார். முதல் நாள் 1,000 பேர் வந்தார்கள். ஒரு வாரத்தில் அது பத்துப் பத்து பேராக குறைந்து, கடைசியில் எல்லோரும் வருவதையே நிறுத்திவிட்டனர். இப்போது யோகி தானாகவே ஒவ்வொரு வீடாகப் போய், அதே போதனையைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் எதிரே வந்தாலே, ‘ஐயோ, போதுமய்யா’ என்று மக்கள் ஓடி ஒளிந்துகொள்ள ஆரம்பித்தனர். ஊர்ப் பஞ்சாயத்து கூடியது. யோகியை அங்கே வரவழைத்தனர். ‘ஐயா, உங்கள் போதனை முதல் தடவை கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதே போதனையை எத்தனை முறை கேட்பது? வேறு போதனைகள் கொடுக்கலாமே?’ யோகி சொன்னார், ‘என்னிடம் இன்னும் நிறைய போதனைகள் இருக்கின்றன. ஆனால், முதல் போதனையையே நீங்கள் இன்னும் கடைப்பிடிக்கவில்லையே? உணர்வுபூர்வமாக அது உங்கள் வாழ்வின் முறையாக மாறிவிட்டால், நான் அடுத்த போதனையைக் கொடுக்கிறேன்!” அந்த யோகியின் நிலையில்தான் நான் இருக்கிறேன். பலநூறு முறை சொல்லிவிட்டேன். இன்னமும் மக்களுக்கு அதே கேள்வி இருக்கிறது. மனித மனம் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கும். எத்தனை கிடைத்தாலும் நிறைவின்மையைத்தான் உணரும். உங்கள் உள்நிலைக்கு எல்லை இல்லாமல் போகவேண்டும் என்று ஆசை. அதைப் பூர்த்தி செய்யாமல், வெளிச்சூழ்நிலைகளில் நீங்கள் மேலே மேலே கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறீர்கள். இந்த உடலின் கட்டுப்பாட்டிலும் மனதின் வளையத்திலும் சிக்கிக்கொண்டு, அது விடுதலை பெற ஏங்குகிறது. இப்போதாவது, எதற்கும் திருப்திப்படாமல் இருப்பது ஏன் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் வந்ததே இந்த உயிரின் அடிப்படை என்ன என்பதை உணராமல் வாழ முயற்சி செய்வதுதான் பெரிய பிரச்சினை. வாழ்க்கையின் நோக்கம் என்ன? புகழும் பெருமையும் பெறுவதா? அன்பையும் காதலையும் அனுபவிப்பதா? வளத்தையும் வசதிகளையும் பெருக்கிக்கொள்வதா? மதத்தையும் கடவுளையும் மதிப்பதா? இல்லை உங்கள் வாழ்க்கையின் அடிப்படை நோக்கமே எல்லை இல்லாமல் போகவேண்டும் என்பதுதான். ஆனால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் படிப்பு, பதவி, பணம், குழந்தைகள், சொத்து என்று ஏதேதோ குறுக்கிட்டுள்ளன. உங்கள் நோக்கத்தின் கவனத்தைத் திசை திருப்பியதில் அவற்றுக்கும் பங்கு உண்டு. அவை வாழ்க்கைக்கு நிறைவு தரும் தீர்வுகள் அல்ல என்பதால், எல்லாம் கிடைத்தும் அடுத்து என்ன என்று பதின் வயதில் ஏற்படும் தடுமாற்றம் உங்களுக்கு அறுபதில் வந்துவிட்டது. வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை. வாழ்க்கையின் முழு ஆழத்தையும் அகலத்தையும் வேர்வரை ஊடுருவி மனித மனம் எப்போதும் புரிந்துகொண்டது இல்லை. அதனால்தான், வாழ்க்கைக்கு மேலோட்டமான ஏதாவது நோக்கத்தை அது தேடிக்கொண்டே இருக்கிறது. ‘முழுமையான நிறைவு இல்லாமல், உள்ளுக்குள் ஓர் ஆசைத் தீ எப்போதுமே எரிந்துகொண்டு இருப்பதற்கு என்ன காரணம்?’ இந்தக் கேள்வி கேட்கும் மனதை சிறிது காலத்திற்குச் சமாதானம் செய்துவைக்க, மகான்களின் தத்துவங்கள், மதக் கோட்பாடுகள், புராண விளக்கங்கள், மறைநூல்களின் சொல்லாக்கம் எல்லாம் பயன்படலாம். ஆனால் அடிப்படைக் கேள்வி காணாமல் போய்விடாது. விரைவிலேயே மீண்டும் தலை நிமிர்த்தி தவிப்பு ஏற்படுத்தும். வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை. அளந்து பார்க்கக்கூடிய எதைக் கொடுத்தாலும், உங்களுக்கு நிறைவு வராது. எல்லை இல்லாத பிரபஞ்சத்தின் அங்கமாகிய நீங்கள், கவனம் இல்லாமல் உங்களை ஓர் எல்லைக்குள் அடையாளப்படுத்தி அடக்கப்பார்ப்பதால் வரும் விளைவு இது. விரிவடைந்து விரிவடைந்து எல்லையற்றதுடன் கலந்துவிடத் துடிப்பதால்தான் அந்த ஆசைத் தீ வேறு எதைக் கொடுத்தாலும், அடங்க மறுக்கிறது. வாழ்க்கையின் உண்மையான நோக்கம் முழுமையாக வாழ்வதுதான். அதை ஒழுங்காகச் செய்யவிடாமல், அதற்குப் பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டும்தான். உங்களை கரைத்துவிட்டால், வாழ்க்கை அதன் முழுமையை நோக்கித் தானாகவே மலரும். இந்தப் பிரபஞ்சமும் நீங்களும் ஒன்றே என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததும் ஆசை சட்டென்று அதன் தவிப்பை விட்டுவிடும். இந்த அறியாமையை எப்படிக் களைவது? முறையான யோகாவின் மூலம் குறுகிய எல்லைகளை உடைக்க முடியும். பேரானந்தத்தை ருசிக்க முடியும். உங்கள் உச்சபட்ச சக்தியை உயிர்ப்பித்துவிட்டால், அப்புறம் இந்த உலகில் எந்த விளையாட்டை வேண்டுமானாலும் வலி இல்லாமல் விளையாடிப் பார்க்க முடியும். எல்லாவற்றையும் மறந்து தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து இருக்கிறீர்கள். முழு கவனமும் அதில் பதிந்து இருக்கும்வரை பிரச்சினைகளைத் தற்காலிகமாக மறந்து போயிருப்பீர்கள். மனைவி வந்து தலை மேல் ‘டப்’ என்று கொடுத்ததும், காணாமல் போன பிரச்சினைகள் எல்லாம் கணத்தில் திரும்ப வந்து பூதாகரமாக நிற்கின்றன. உங்கள் வாழ்க்கையில் 40 வருடங்கள் தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தது போல் ஓடிவிட்டது. அந்த நிகழ்ச்சிகள் முடிந்துபோய், மறுபடியும் கேள்வி எழுந்துவிட்டது. இப்பவும் தாமதம் ஆகிவிடவில்லை. இந்தக் கணத்தில் இருந்துகூட வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முழுமையான ஈடுபாட்டுடன் முயற்சி செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே அளவு பணம், பதவி, அதிகாரம், வசதி கிடைப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் உள்ளுணர்வில் ஒரே அளவு ஆனந்தம் கிடைப்பதை யார் தடுக்க முடியும்?

Read more at : வாழ்க்கை முழுமை அடைவது எப்போது?!

கடவுள் இல்லாமல் சந்தோஷமாக வாழ முடியுமா?

மனம் என்றாலே அதிகம் கேள்விகள் தான்… சிலவற்றிற்கு விடை கிடைக்கலாம், பலவற்றிற்கு கிடைக்காமல் போகலாம். சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே… கேள்வி கடவுளில்லாமல் சந்தோஷமாக வாழ முடியுமா? சத்குரு: கோவிலிலிருந்து வெளி வருபவர்களை விட உணவகத்திலிருந்து வெளிவருபவர்கள் சந்தோஷமான முகத்துடன் வருவதை பார்க்க முடிகிறது. ஒரு தோசையும் இட்லியும் தெய்வீகத்துடன் போட்டியிட முடியுமா என்பது சிறு வயதில் எனக்குள் இருந்த ஆழமான கேள்வி. இதனால், நான் உணவகத்து வாயில்களிலும் கோவில் வாசல்களிலும் மக்கள் முகத்தைப் பார்ப்பதில் பொழுதை கழித்ததுண்டு. இது எதனால் என்று பார்த்தபோது, மக்களுக்குள் தெய்வீகம் என்பது ஓர் அனுபவமாக இல்லாது இருக்கிறது. தெய்வீகம் என்பது சமூகம், கலாச்சாரம் சார்ந்த ஓர் அடையாளம் என்றே மக்கள் நினைக்கின்றனர். சரி, “நாம் கடவுள் இல்லாமல் சந்தோஷமாக வாழ இயலுமா?” என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால், வாய்ப்பே இல்லை என்றே சொல்ல முடிகிறது. தெய்வம் என்று நீங்கள் அழைப்பது எதனை? படைப்பின் மூலத்தைத்தானே கடவுள் என அழைக்கிறீர்கள். இந்தப் படைப்பும், இந்தப் படைப்பின் மூலம் இல்லாமலும் நாம் வாழ முடியுமா என்ன? அது சாத்தியம்தானா? கேள்வி சத்குரு, நீங்கள் சேகுவேரா பற்றி பேசி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர் “நீங்கள் சீற்றத்தில் இருந்தால் எங்களுள் ஒருவர்,” என்று சொல்லி இருக்கிறார், அது பற்றி உங்கள் கருத்தென்ன? சத்குரு: சே வின் பேச்சுக்கள், செய்கைகள் மூலம் அவர் மிகப் பிரபலம் அடைந்தார். இன்றுகூட அவர் உருவம் பதித்த டிசர்டுகள் அதிகப்படியாய் விற்பனை ஆகின்றன. அவர் யாரென தெரியாமலே மக்கள் அந்த டிசர்டுகளை வாங்குகின்றனர். அவரை தீவிரவாதி என அழைக்கும் அளவிற்கு அவர் தீவிரமாய் இருந்தார். எங்கு அநீதியைக் கண்டாலும் அவர் பொங்கி எழுந்தார். “நீங்கள் சீற்றத்தில் இருந்தால், நீங்கள் எங்களில் ஒருவர்,” என்று அவர் சொன்னது அவர் சீற்றத்தில் சொன்ன வாசகம். என் பால்ய வயதுகளில் இந்த வாசகம் என்னை குடைந்தெடுத்தது. நான் அவரால் பெரிதும் தூண்டப்பட்டேன் என்று சொல்லலாம். அதனால் அநீதியைக் கண்டால் என் உள்ளம் துடிக்கும். எதைக் கண்டாலும் கோபம் வெடிக்கும். அதன்பின் எனக்குள் நடந்த உள்ளனுபவம், எனக்குள் பல மாற்றத்தை உண்டாக்கியது. சமீபத்தில் கூட, நீங்கள் கேட்டது போல, ஜவஹர்லால் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த சிலர் என்னிடம் இதே வாசகத்தைச் சொல்லி, “இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றனர். “நீங்கள் சீற்றத்தை கடந்தவராய் இருந்தால் நீங்கள் எங்களில் ஒருவர்” என்றேன் நான். கேள்வி என் திருமண உறவு மிக கசப்பாக உள்ளது, துறவறம் மேற்கொண்டு விடலாமா என்றுள்ளது. திருமணத்தில் இத்தனை கசப்பு ஏன்? சத்குரு: எங்கே தவறு நடக்கிறதோ, எங்கே செய்யக் கூடாததை செய்கிறீர்களோ அது துயரமயம் ஆகிவிடுகிறது. அதற்காகத் திருமணமே தவறு என்று பொருளல்ல. அது இரண்டு பேர் ஒருவிதமான பகிர்தலோடு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு. ஒருவர் விரும்பினால், விழைந்தால் இனிமையான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் போதிய மனமுதிர்ச்சி இல்லாதவர்கள் அளவுக்கதிகமான பற்றுதலை வளர்த்துக் கொண்டு, ஒருவரையொருவர் பயன்படுத்தி வாழப்பார்க்கிறார்கள். உங்களுக்கென்று ஒரு வாழ்க்கையிருந்தால் அதைப் பகிர்ந்துகொண்டு வாழ முடியும். ஆனால் ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொள்ள முனைந்தால் திருமணம் தோல்வியடையும். நீதிமன்றம் வரை போகாவிட்டாலும், தனி வாழ்க்கையிலாவது இந்தத் தோல்வி இரு

Read more at :

மனுதர்மமத்தைப் போதிக்கும் நூல்கள்

மனுதர்மமத்தைப் போதிக்கும் நூல்கள்;
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் - கிடைத்த விழி வீச்சில் உடைந்தது வில் - இராமாயணம்
கூனியின் சூழ்ச்சியால் அயோத்தியை ஆண்டது - செருப்பு - மாகாபாரதம்
கிழித்த கோட்டைத் தாண்டினாள் சீதை - கோட்டை இழந்தான் இராவணன் - இராமாயணம்
கணவன் இறந்தததால் மதுரையை எரித்தாள் கண்ணகி - பத்தினி அதர்மம் - சிலப்பதிகாரம்
சகோததர்களுக்கிடையில் மூண்ட போரில் அண்ணணை தம்பி கொல்வதற்கு போதித்தது - பகவத்கீதை
இந்துவானவன் புத்தசமயத்திற்கு மாறலாம் என மதமாற்றத்திற்கு வழிகாட்டியது - மணிமேகலை
தன் கணவனை கொன்ற பின் பொத்தமத கொள்கை பரப்பு துறவியானவள் - குண்டலகேசி
சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை கவர்ச்சியுடனும், கற்பனையுடனும் ஆக்கப்பட்டது - சீவகசிந்தாமணி

Wednesday, May 27, 2015

இந்த உலகம் நாகரீகமடைந்து கொண்டிருக்கிறதா?

இந்த உலகம் நாகரீகமடைந்து கொண்டிருக்கிறதா?
ராக்கெட்டுகளும், செயற்கை கோள்களும், ஏவுகணைகளும் வானில் பறக்கும் போது, வெற்றி என்று விஞ்ஞானிகள் ஒரு பூஜை அறையிலிருந்து துள்ளி குதிப்பதை தொலைக்காட்சிகள் ஓயாமல் ஒளிபரப்பும்போது, அதை தேசத்தின் பெருமிதம் என நம்மவர்கள் பூரித்துக்கொள்ளும் போது, என் நண்பர்களிடம் ஒன்று சொல்வதுண்டு..
இந்த கண்டுபிடிப்புகள் எதுவும் மக்களுக்கானதில்லை. இந்த வளர்ச்சி நம் போன்ற எளியவர்களுக்கானதில்லை. இதில் நாம் பெருமிதம் கொள்ள ஒன்றுமில்லை என்று.
ஏண்டா நீங்க வளர்ச்சிய ஆதரிக்கவே மாட்டீங்களா என்ற பதில் வழக்கமாக அவர்களிடமிருந்து கிடைக்கும்.
தென்ஆப்ரிக்காவில் நடக்கும் கிரிக்கெட்டில், ஒரு நொடியில் வீசப்படும் பந்து, எந்த வேகத்தில் வந்தது, எந்த திசையில் வளைந்தது என்றெல்லாம் எனக்கு காட்டிய செயற்கைக்கோள், ஈழத்தில் விழுந்த குண்டுகளையும், செத்து விழுந்த தமிழரின் குரல்களையும் காட்டாதது ஏன். அதுதான் நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் வளர்ச்சி என்றுமட்டும் சொல்லிவிட்டு நகர்வேன்.
"ஒரு நாட்டின் பாதுகாப்பு பெருமிதம் என விண்ணைக் கிழித்து பறக்கின்ற ஏவுகணைகள் முதலில் குறிவைப்பது என் குழந்தைகளைத்தான்.
உலகத்தையே சிறிய கிராமமாக மாற்றிய செயற்கைகோள்கள் 21ஆம் நூற்றாண்டில்கூட, ஈழத்தின் ரத்தங்களையும், பாலஸ்தீனத்தில் பாய்ந்த குண்டுகளையும், இன்று பர்மாவில் கொல்லப்படும் ரொஹீங்கியா முஸ்லீம்களின் கண்ணீரையும் ஒருபோதும் காட்டுவதில்லை.
கோடிகளைக் கொட்டி செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்ட தேசம், படுக்கையில் கிடக்கும் என் நோயாளி சித்தப்பன் மருத்துவமனைக்கு வந்து செல்ல இளிச்சவான்பட்டிக்கு ஒரு பேருந்தினை விடவில்லை.
இதுதான் விஞ்ஞானம் மற்றும் வளர்ச்சியின் யோக்கியதை"
விஞ்ஞானம் இரு வகையுண்டு. அரச விஞ்ஞானம், மக்கள் விஞ்ஞானம்.
அரச விஞ்ஞானிகள் வல்லரசுகளின் அறிவியல் லாப வெறிக்காக வேலை செய்பவர்கள். மக்கள் விஞ்ஞானிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான அறிவியலை பேசுபவர்கள்.
ஒபாமாக்களின், மோடிக்களின் வெற்றிக்காக அணுக்கழிவினை ஒடுக்கப்பட்ட மக்களின் தலையில் கொட்டும் விஞ்ஞானிகள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்.
இயற்கையை நேசிக்கும், மக்கள் உரிமைகளை மதிக்கும் மக்கள் விஞ்ஞானிகளை உருவாக்குவோம்...

நமக்கு ஏற்ற உணவு எது?

இன்று உலக சுகாதார தினம். உலகெங்கும் “உணவுப் பாதுகாப்பு” என்ற கோஷத்தை முன்வைத்து இந்த நாளைப் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது உலக சுகாதார நிறுவனம். ஆரோக்கியமாக இருக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது இக்கட்டுரை… சத்குரு: மனிதன் மேல் நிலைக்குச் செல்ல முற்படும்போது, அவன் உணர்வுக்கு பெரிய உறுதுணையாக இருக்கிற கருவி உடல், உடலைப் பேணிப் பாதுகாத்தல் என்பது, ஆன்ம வளர்ச்சிக்கான அடிப்படைகளில் ஒன்று. ஆரோக்கியம் என்பது இலட்சியமா? மேலை நாடுகளைப் பொறுத்தவரை ஆரோக்கியம் என்பது ஏதோ அடைய வேண்டிய விஷயம் என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் ஆரோக்கியம் நமக்குள்ளிருந்து இயல்பாக, எழுவது. அமெரிக்கர்கள் சிலர் தங்கள் ஊட்டச் சத்துக்கும், உற்சாகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மாத்திரைகளை நம்பி வாழ்க்கை நடத்துவதை நாம் பார்க்கிறோம். முழுமையாக பச்சைக் காய்கறிகளுக்குப் போவதன் மூலமாகவே, ஒருவர் யோகக்கலையில் சிறந்துவிட முடியாது. காலை, மதியம், இரவு உணவுகளில் வைட்டமின் மாத்திரைகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆனால், அதையே சரி என்று இந்தியர்கள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அமெரிக்க நாட்டில் வசிக்கிற, ஏராளமான இந்தியர்கள் நன்கு பணிபுரிகிறார்கள். வெற்றிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் மாத்திரைகளை நம்பி வாழ்பவர்கள் இல்லை. எனவே, மூன்று விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, மனித உடலமைப்புக்கு ஏற்ற உணவு எது? இரண்டாவது பிராண சக்தியை எடுக்கிற உணவு எது? பிராண சக்தியை தரவோ, பெறவோ செய்யாத சராசரி உணவு எது? மூன்றாவது, சமைத்த உணவு நல்லதா? பச்சைக் காய்கறிகள் நல்லதா? இவையெல்லாம் இன்றும் கூட விவாதத்திற்கு உரியவையாகவே விளங்குகின்றன. பொதுவாக, யோகம், தியானம் போன்ற துறைகளில் போகிறவர்கள் “நாங்களெல்லாம் பச்சைக்காய்கறிகள் தான் சாப்பிடுகிறோம்” என்று சொல்லிக் கொள்வதில் கொஞ்சம் பெருமை அடைவதும் உண்டு. ஆனால், முழுமையாக பச்சைக் காய்கறிகளுக்குப் போவதன் மூலமாகவே, ஒருவர் யோகக்கலையில் சிறந்துவிட முடியாது. பச்சைக் காய்கறிகள், தானியங்கள் போன்றவை உங்கள் உடலுக்கு வேண்டிய சக்திகளை முழுமையாகத் தருபவை. அவற்றை உங்கள் உணவில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, நாளொன்றுக்கு 1000 கிராம் உணவு உட்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 700 கிராம் சமைத்த உணவு, 300 கிராம் காய்கறிகள், மற்ற தானியங்களை பச்சையாக உட்கொள்ளுதல் என்றிருந்தால் அதிலே பயன் இருக்கும். பலபேர் வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு அதற்கு மேல் பழங்கள், காய்கறிகள் என்று சாப்பிடுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் இருக்காது. உணவை உட்கொள்கிற அளவைக் குறைப்பது பொதுவாகவே நல்லது. 100% சமைத்த உணவு சாப்பிடுகிற நீங்கள் அதை 70% குறைத்து 30% பச்சைக் காய்கறிகள் சாப்பிடாமல் இருந்தால் கூட, அந்த 30% உணவு குறைகிறபோது, உங்கள் உடல் நலம் முன்னேற்றம் அடைவதைக் காண்பீர்கள். முடிந்தால் இரவு உணவு மட்டும் 100% பச்சைக்காய்கறிகளாக, தானியங்களாக சாப்பிடுவது நல்லது. அதில் பழங்கள் சாப்பிடுவதே ஒரு தனிக்கலை. அசைவ உணவு முழுக்க செரிக்க ஏறக்குறைய 72 மணி நேரங்கள் ஆகும். சிலபேர் உணவு சாப்பிட்டதும் பழங்கள் சாப்பிடுகிறார்கள். பழங்கள் விரைவில் செரித்துவிடும். சமைத்த உணவு செரிப்பதற்கு தாமதமாகும். எனவே செரிமான முறையில் ஒரு சிறு குழப்பம் ஏற்படும். அத்துடன் இந்தப் பழத்தை சாப்பிட்ட பயனையும் நீங்கள் இழக்கிறீர்கள். சமைக்கப்படாத காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றிற்கு என்ன சிறப்பு என்றால், அவை ஒருதுளி கூட வீணாகாமல் அவற்றின் முழு சக்தியை உங்களுக்குத் தருகின்றன. அவற்றை பிற உணவு வகைகளோடு சேர்த்து சாப்பிடுகிறபோது, அதன் ஊட்டத்தை உங்களால் பெறமுடிவதில்லை. அப்படியானால் எப்படி பழங்களை சாப்பிட வேண்டும்? காலை உணவு அருந்திவிட்டு வருகிறீர்கள். முற்பகல் 11.00, 11.30 மணியளவில் லேசாக பசி எடுக்கிறது என்றால் அப்போது தேநீர் அருத்துவதை விட, காப்பி அருந்துவதைவிட, பழங்கள் சாப்பிடலாம். அந்தப் பழங்கள் நன்கு செரித்து மீண்டும் பசியெடுக்கிற நேரம் உங்கள் மதிய உணவுக்கான நேரமாக இருக்கும். இதுதான் பழங்களை சாப்பிடுகிற முறை. முழுக்க முழுக்க இயற்கை உணவுக்கு மாறி விட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நீங்கள் உட்கொள்கிற உணவில் எது உங்களுக்கு பிராண சக்தியைத் தரும், எது உங்கள் பிராண சக்தியை எடுத்துவிடும் என்பதையெல்லாம் உரியமுறையில் தெரிந்து வைத்துக் கொண்டு, அந்த விழிப்புணர்வோடு உண்பது நல்லது. மனித உடல், அசைவ உணவுக்கு ஏற்ற அமைப்பில் இல்லை. நீங்கள் உட்கொள்கிற அசைவ உணவு முழுக்க செரிக்க ஏறக்குறைய 72 மணி நேரங்கள் ஆகும். ஒரு துண்டு இறைச்சியை எடுத்து மேசை மேல் வைத்துவிட்டு போனால், ஒரு நாளைக்குள் அது எவ்வளவு அழுகி விடுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியானால் உங்கள் உடலின் உட்பகுதியில் இருக்கிற உஷ்ண நிலையில் செரிமானமாகாத இறைச்சி உணவு 72 மணிநேரம் இருந்தால், அது எந்தவிதமான பலன்களை ஏற்படுத்தும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். அரிசி உணவு நல்லதா? பலர் அரிசி உணவு சாப்பிடுகிறார்கள். இதில் பச்சரிசி நல்லதா? புழுங்கல் அரிசி நல்லதா? என்றெல்லாம் சந்தேகங்கள் வரும். அரிசியைப் புழுங்க வைப்பது, வேக வைப்பது என்பது ஒரு பாதுகாப்பு முறை. அவ்வளவுதான். புழுங்கலரிசியை நான்கு வருடங்களுக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும். பழைய காலங்களில் பஞ்சம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்தில் புழுங்கல் அரிசிகளை வைத்திருந்தார்கள். மற்றபடி இதில் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்கள் உட்கொள்கிற உணவின் அளவைப் பொறுத்துதான், அரிசி உணவிலிருந்து நன்மையோ, தீமையோ பெற முடியும். நன்மை தரும் கீரைகள் ஆரோக்கியமான மனிதருக்கு 3 லிருந்து 4 மணி நேர உறக்கமே போதிய ஓய்வைத் தந்துவிடும். கீரைவகைகள் நார்ச்சத்து கொண்டவை, அவற்றை அளவோடுதான் உட்கொள்ள முடியும். ஏனெனில் அவற்றில் இருக்கிற பச்சையம், அவ்வளவு விரைவாக செரிக்கக் கூடியது அல்ல. சமைக்கப்படாத நிலையில் பச்சையம், அவ்வளவு சீக்கிரம் செரிக்காது. கீரைவகைகளைப் பக்குவப்படுத்தித்தான் உண்ண வேண்டும். நீங்கள் பார்த்திருக்க முடியும். நாய்கள், பூனைகள் போன்றவையெல்லாம் சில நாட்களில் சில புல் வகைகளை சாப்பிட்டு விட்டு, சிறிதுநேரம் கழித்து அவற்றை வாயில் எடுக்கும். இது தங்களுக்குள் இருக்கிற சளி, கொழுப்பு போன்றவற்றை வெறியேற்ற அந்த பிராணிகளுக்கு இயற்கை கற்றுத் தந்திருக்கிற முறை. பாலும், தயிரும்… எதைச் சாப்பிடுகிறீர்கள் என்றாலும் அது உங்களுக்கு ஏற்றதா? என்கிற விழிப்புணர்வு முதலில் தேவை. பால், தயிர் போன்றவைப் பற்றி நான் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அது மிகவும் ஆரோக்கியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பசுவை “கோமாதா” என்று அழைக்கிறோம். பசுவை ஏன் மாதா என்று அழைக்கிறோம் என்றால் ஒரு குழந்தையை பெற்றுவிட்டு தாய் இறந்து விட்டாலும் கூட, அந்தக் குழந்தைக்கு பால் தருகிற தாயாக பசு இருக்கிறது. ஆனால் 2 அல்லது 2 1/2 வயது, வரையில் தான் பால் மற்றும் பால் சார்ந்த உணவு வகைகள் நமக்கு செரிக்கும். அதற்குப் பிறகு அவற்றை செரிப்பதற்கேற்ற ஆற்றலை உங்கள் உடல் இழந்து விடுகிறது. தொடர்ந்து பால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்கள், தயிர் அதிகமாக சாப்பிடுபவர்கள் ஒருவித மந்தமான நிலையில் இருப்பார்கள். எனவே இவற்றையெல்லாம் அனுபவப்பூர்வமாகப் பார்த்து, எந்த உணவு வகைகள் உங்களை விழிப்புணர்வோடு வைத்திருக்கின்றன. எந்த உணவு வகைகள் சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன என்பதை நீங்களே தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அமெரிக்க நாடுகளுக்கு நீங்கள் போனால், “மூன்றாவது கோப்பையை மறந்து விடாதீர்கள்” என்ற விளம்பரத்தை நீங்கள் பார்ப்பீர்கள். என்ன சொல்லுகிறார்கள், “எப்படியும் 2 கோப்பை பால் சாப்பிட்டு விடுவீர்கள். ஆனால் 3-வது கோப்பை பால் சாப்பிட வேண்டும். அதை மறந்து விடாதீர்கள்” என்பது அந்த விளம்பரத்தின் பொருள். எனவே, பால் சாப்பிடுவது உங்களை சுறுசுறுப்பாக வைததிருக்கிறதா அல்லது மந்தமாக வைத்திருக்கிறதா என்பதை நீங்கள் கண்டுணர வேண்டும். வயிற்றுப் போக்குக்கு பால் ஒரு நல்ல மருந்து என்று சொல்லுவார்கள். மருந்துதான். அந்த மருந்தே உணவாகிவிடாது. உறக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தும் உணவு பொதுவாக, நீங்கள் உட்கொள்ளும் இயற்கை உணவின் அளவு கூடக்கூட நீங்கள் உறங்குகிற நேரத்தின் அளவும் குறைந்து கொண்டே வரும். அதிக உறக்கம் என்பது நீங்கள் போதிய சக்தியில்லாமல் இருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளம். சிலபேர் 8 மணி நேரம் 10 மணி நேரம் உறங்குகிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு ஓய்வு தேவை என்பது பொருளல்ல. அவ்வளவு தூரம் சக்தியிழந்து இருக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். சிறிய செயல் செய்தாலும் உடனே தூக்கம் வருகிறதென்றால், போதிய சக்தி நிலை உடலில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான மனிதருக்கு 3 லிருந்து 4 மணி நேர உறக்கமே போதிய ஓய்வைத் தந்துவிடும். இயற்கை உணவுக்கு மாறுகிறபோதும், தியானம் புரிகிறபோதும் இயல்பாகவே உறங்கும் நேரம் குறைந்துவிடும். மனித உடலை அதற்குரிய நிலையில் வைத்திராமல், பொருளியலுக்கோ, ஆன்மீகத்திற்கோ மேற்கொள்கிற எந்த முயற்சியிலும் வெற்றி பெற இயலாது. உணவும் உணர்வும்! உணவுக்கும், உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை உற்சாகமாக வைத்திருக்கக்கூடிய உணவு வகைகளை மட்டுமே உட்கொள்ளுங்கள். சரியான விகிதத்தில் இயற்கை உணவை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடுகிற உணவு, உங்களுக்கு சக்தியை தருவதாக, செயல்களில் ஈடுபட உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தருவதாக இருக்கிறதா என்பதை கண்காணித்துக் கொள்ளுங்கள். இதுவும் ஒரு விழிப்புணர்வை பெறுவதற்கான அணுகுமுறைதான். நான் சொல்வது உணவுமுறை பற்றிய போதனை அல்ல. உணர்வு பற்றிய விழிப்புணர்வை நீங்கள் பெறுகிற வழி. சரி என்னென்ன உணவுகள் அன்றாடம் எடுத்துக்கொள்வது? எதை எதை எந்த விகிதத்தில் உட்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கமுடியும்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்… நாம் சாப்பிட வேண்டிய சரியான உணவு எது? “சரி… சத்குரு உணவுகளைப் பற்றி இவ்வளவும் சொல்லியுள்ளார், ஆனால் காபியைப் பற்றி சொல்லவே இல்லையே.?! காபி குடிக்கலாமா வேண்டாமா?” என்ற கேள்வி உள்ளவர்கள் இந்த கட்டுரையைப் படியுங்கள் காலை எழுந்தவுடன் காபி “அதிகமாகவும் தேவையற்றதையும் சாப்பிட்டு சாப்பிட்டு உடல் பெருத்து விட்டதே” என்று வருத்தப்படுபவரா நீங்கள்? உங்கள் கவலையை போக்கி ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம் என்பதை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்… உடற்பருமனைக் குறைக்க சில டிப்ஸ் “சாப்பிடும் முன் நாம் என்ன செய்ய வேண்டும்? தண்ணீரில் உள்ள நன்மைகள் என்ன? எந்த வித நோய்க்கு என்ன உணவு சாப்பிடலாம்?” – இவைகளுக்கெல்லாம் விடையாய் அமைகிறது இந்த தொடர் கட்டுரைகள்… அன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம் நாம் ஆரோக்கியம் பற்றி சிந்திக்க சரியான நேரம் எது, என்பதை வீடியோவில் இடம்பெறும் சத்குருவின் உரை உணர்த்துகிறது. மேலும், இயற்கையை நம் அனுபவத்தில் உணர்வதற்கு சத்குரு சொல்லும் வழியையும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்! ஆரோக்கியத்திற்கு ஒரு அலர்ட்

Read more at :

மண வாழ்க்கை சலித்துவிட்டதா?


நானும் என் மனைவியும் உயிருக்கு உயிராகக் காதலித்தோம். திருமணம் செய்துகொண்டோம். எட்டு வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் எங்களுக்குள் இருந்த ஆனந்தக் கிளர்ச்சி இப்போது இல்லை. ஒருவரைப் பார்த்து மற்றவருக்கு எழும் உற்சாகம் தோய்ந்துவிட்டது. எங்களுக்குள் அன்பு குறையவில்லை. ஆனால் இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. திருமணம் செய்துகொண்ட ஒரே கட்டாயத்துக்காகக் கடைசிவரை சலிப்புடன் சேர்ந்தே இருக்க வேண்டுமா? பரஸ்பரம் அன்புடன் இருக்கும்போதே விவாகரத்து வாங்கிப் பிரிந்துவிடலாமா? என்ன செய்வது சத்குரு? சத்குரு: உங்களுக்காவது எட்டு வருடங்களில் இதைப் பற்றிய கவனம் வந்துவிட்டது. இதுபற்றிய பிரக்ஞை இன்றி 40, 50 வருடங்கள் கட்டாயத்தின் பேரில் சேர்ந்து இருந்தே மரத்துப்போன வாழ்க்கையை வாழ்பவர்களைப் பார்க்கிறேன். கணவனோ, மனைவியோ அடுத்தவரை வெறும் கிளர்ச்சிப் பொருளாக மட்டுமே பார்த்து உறவை ஏற்படுத்திக்கொண்டு இருந்தால், இந்தப் பிரச்சினை வரத்தான் செய்யும். உங்கள் மனைவியை வெறும் கேளிக்கைக்காக மட்டுமே சேர்த்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால், இந்த உறவில் இருந்து அவரை விடுவிப்பது அவருக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும். காதல் என்பது திருமணத்திற்கு முந்தின கட்டம் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள். ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது அவளிடம் காட்டிய அதே நெருக்கமான, அர்ப்பணிப்பான உணர்வை, மனைவியாக அவளை ஆக்கிக்கொண்டபின் காட்டத்தேவை இல்லை என்று நீங்களாக முடிவு செய்துவிட்டீர்கள். இப்போது, உங்கள் காதலில் லயிப்பு இல்லை. கடமை உணர்வுதான் இருக்கிறது. அதனால்தான், காதல் உலர்ந்துவிட்டது. காதலித்த காலம் வேறு. திருமண வாழ்வில் ஈடுபட்டு இருக்கும் காலம் வேறு. நல்லதோ கெட்டதோ இருவரிடமும் சில மாற்றங்கள் நேர்ந்திருக்கும். அவற்றைப் புரிந்து ஏற்றுக்கொள்ளத் தவறியதால், இப்போது சலிப்பு, கட்டாயம் என்ற வார்த்தைகள் முளைத்துவிட்டன. உங்கள் காதலில் லயிப்பு இல்லை. கடமை உணர்வுதான் இருக்கிறது. அதனால்தான், காதல் உலர்ந்துவிட்டது. சங்கரன்பிள்ளை அடிக்கடி சோர்ந்து சோர்ந்து விழுந்தார். அவருடைய மனைவி டாக்டரிடம் அழைத்துப் போனாள். சங்கரன்பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர், அவர் மனைவியைத் தனியே அழைத்தார். ‘உங்கள் கணவர் மனஅழுத்தம் காரணமாக, மிக வித்தியாசமான உயிர்க்கொல்லி நோய்க்கு ஆளாகி இருக்கிறார். காலையில் நல்ல ஆரோக்கியமான சத்துள்ள உணவு, மதியத்தில் நிறைய பச்சைக் காய்கறிகள் சேர்த்த உணவு என்று தினமும் கொடுத்து வாருங்கள். குடிப்பதற்குக் காய்ச்சி ஆறவைத்த தண்ணீரையே கொடுங்கள். கடினமான வீட்டுவேலைகள் எதையும் அவரைச் செய்யவிடாதீர்கள். அவரிடம் கோபமே காட்டாமல், இன்முகத்துடன் பேசுங்கள். உங்கள் பிரச்சினைகளைச் சொல்லி, அவர் மனதில் பாரத்தை ஏற்றாதீர்கள். அது அவர் இதயத்தைப் பலவீனமாக்கிவிடும். எப்போதும் காதலுடன் நடந்துகொள்ளுங்கள். குழந்தையைப்போல் அவரை பார்த்துக்கொண்டால், நோய் பூரண குணமாகிவிட வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் இதையெல்லாம் செய்யத்தவறினால், அவர் உயிரை யாராலும் காப்பாற்றமுடியாது’. டாக்டர் சொன்னதை சங்கரன்பிள்ளையின் மனைவி மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டாள். வீட்டுக்குத் திரும்பும் வழியில் சங்கரன்பிள்ளை கேட்டார். உன்னைத் தனியே அழைத்துப்போய் டாக்டர் என்ன சொன்னார்? மனைவி அவரைத் திரும்பி பார்த்தாள், ‘உங்களை வித்தியாசமான உயிர்க்கொல்லி நோய் தாக்கியிருக்கிறது என்று ஆரம்பித்து, உங்களை யாராலும் காப்பாற்றமுடியாது என்று சொல்லி முடித்தார்’ என்றாள் அவள். எப்பேர்ப்பட்ட மனைவி, எப்பேர்ப்பட்ட உறவு. ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். காதல் தானாகச் சாகாது. நீங்கள் வலியக் கொன்றால்தான் அது உயிர்விடும். உடல்ரீதியாக அணுகாமல், உணர்வுரீதியாக அணுகி, முறையான பராமரிப்பைக் காதலுக்கு அளித்துப் பாருங்கள். அது உயிர்ப்போடு மீண்டும் உங்களுக்குள் பூத்துக் குலுங்கும். உங்கள் வாழ்க்கைத் துணையைச் சிறு இன்பங்களுக்காகவோ, கேளிக்கைக்காகவோ வந்தவர் என்று பார்க்காமல், உண்மையான அன்புடன் உங்களின் ஒரு பகுதியாக நீங்கள் சேர்த்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால், இன்றைக்கு இந்தக் குழப்பமே வந்திருக்காது. வாழ்க்கையின் ஆழங்களுக்குச் செல்லாமல், மேலோட்டமாக நழுவிச் செல்லப் பார்க்கையில்தான், இது பூதாகாரமான பிரச்சினையாகத் தெரியும். விவாகரத்து இதற்குத் தீர்வு இல்லை. இருக்கும் உறவை உடைப்பதிலோ, புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்வதிலோ, வாழ்க்கை மேம்பட்டுவிடாது. உடல்ரீதியான ஈர்ப்பு, உணர்ச்சிகளைத் தூண்டும் கிளர்ச்சி, இவற்றைத் தாண்டிப் பார்க்கவேண்டியது காதல்! சுவீடன் தேசத்தில் ஃபக்கின் (Fahkin) என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அங்கே சுரங்க வேலையில் ஈடுபட்டு இருந்தவர்கள் பூமிக்குள் புதைந்துகிடந்த ஓர் உடலைக் கண்டுபிடித்தனர். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்பு நேர்ந்த ஒரு நிலச்சரிவில் பூமிக்கு அடியில் சிக்கிக்கொண்ட இளைஞனுடைய உடல் அது. அங்கிருந்த குளிர்ந்த தன்மை காரணமாக அந்த உடல் அழுகிப்போகாமல், அதே இளமையுடன் இருந்தது. அடையாளம் காண்பதற்காக, அந்த உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கூடிய மக்களில் 70 வயதுக் கிழவி ஒருத்தி இருந்தாள். தன் ஊன்றுகோல்களைப் போட்டுவிட்டு, அவள் அந்த இளைஞனின் உடல்மீது விழுந்தாள். அணைத்துக்கொண்டு அழுதாள். இளமை மாறாமல் சிலையாகிப் போயிருந்த ஒருவனும், சுருக்கங்கள் விழுந்த சருமத்துடன் இருந்த கிழவியும் அரவணைத்துக் கிடந்தது எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. நிலச்சரிவில் சிக்கி மறைந்த தன் காதலனை 50 வருடங்களுக்குப் பின்பு பார்த்து, அவள் உணர்ச்சிவசப்பட்டு இருந்த நிலை, இதல்லவா உண்மையான அன்பு… இதல்லவா உண்மையான காதல் வாழ்க்கை என்பது பல கட்டங்களைக் கொண்டது. குழந்தையாக இருந்தபோது எது உற்சாகம் தந்ததோ, அது இளமையில் தொடர்வது இல்லை. இளமையில் எது கிளர்ச்சி தந்ததோ, அது அடுத்தகட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்துவது இல்லை. உங்கள் உறவில் அதே பழைய கிளர்ச்சியையும், பரபரப்பையும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், வாழ்க்கையில் நீங்கள் பயணப்படாமல் தேங்கி நின்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களை அனுபவித்து உணர, ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு ஆனந்தமாக, நேர்த்தியாக, விருப்பத்துடன் பயணம் செய்யவேண்டும். அதில்தான் சந்தோஷத்தின் சூட்சுமம் இருக்கிறது. வாழ்க்கையை ரசிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் காதல் சாகசங்களைவிட வேறு பல அம்சங்கள் இருக்கின்றன. இருவருக்குள்ளும் அன்பு விலகவில்லை என்கிறீர்கள். பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகவும் இருக்கிறீர்கள். அப்புறம் என்ன? உடல், மனம், உணர்ச்சி இவற்றைத் தாண்டிய ஒரு முக்கியமான பரிமாணம் வாழ்க்கைக்கு இருக்கிறது. வாழ்க்கையின் அந்த மூலத்தை உய்த்து உணர்வதையே நோக்கமாகக் கொண்டு, இருவரும் ஒன்றாக இணைந்தே பயணப்படலாம். உங்களுக்குள் இருக்கும் அந்த அடிப்படைச் சக்தியுடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டால், உயிர் உடலைப் பிரியும் கடைசித் தருணம்வரை, ஒவ்வொரு கணமும் ஆனந்தம்தான்… கொண்டாட்டம்தான்… உற்சாகம்தான். சலிப்பான தருணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை”. Email this article to a Friend இதையும் வாசியுங்கள் நீ...நான்...காதல் ! உறவை முறிக்கும் வெறுப்பு மோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா? அமெரிக்காவின் இந்திய தூதரகத்தில் சத்குருவின் உரை! நமக்கு ஏற்ற உணவு எது? மரணம் தரும் விழிப்புணர்வு!

புளித்துப் போன உறவை வீசிவிடலாமா?


ஆன்மீகப் பாதையில் படியெடுத்து வைத்தவுடன் எனது வாழ்க்கைத் துணை இனி எனக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது? சத்குரு: “அவரை உதறிவிட்டு அடுத்த ஆளை தேர்ந்தெடுங்கள்,” என்று நான் நிச்சயம் சொல்ல மாட்டேன். இந்த எண்ணம் தோன்றுவதற்கு ஆன்மீகம் என்றல்ல, பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.காதலுக்காக ஒருவர், ஆன்மீகத்திற்காக இன்னொருவர், இன்பத்திற்காக வேறொருவர் என தேவைக்கேற்ப மாற்றலாம். எப்போது மனிதர்களை வெறும் தேவைக்கு உதவும் பொருளாய் நீங்கள் நினைக்க ஆரம்பிக்கிறீர்களோ, வாழ்வின் அடிப்படையை நீங்கள் தவறவிட்டு விடுவீர்கள். இதற்கு ஒரு விலை உண்டு. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு. ஆன்மீகத்தின் பெயரில் பொறுப்பற்ற செயல்கள் நிறையவே நிகழ்ந்துவிட்டன. அதனால் உங்கள் வாழ்க்கைத் துணையை மாற்றிக் கொள்ள ஆன்மீகத்தை சாக்காக பயன்படுத்தாதீர்கள். நீங்கள் எத்தனை மாடர்னான ஆளாக இருந்தாலும், பொறாமையின் பிடியில் இருந்து, வேண்டிக் கிடைக்காதவற்றின் வலியில் இருந்து நீங்கள் தப்ப முடியவில்லை. சொல்லுங்கள்… கணவன் எங்கு சென்றாலும், மனைவி உங்களைவிட்டுப் பிரிந்து சென்றாலும், ‘அதனால் என்ன?’ என்று அதை அப்படியே ஏற்கிற பக்குவம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லை. இவையெல்லாம் உங்களை பாதிக்கின்றன. நீங்கள் பலரை வேண்டாம் என்று ஒதுக்கி இருப்பீர்கள், ஆனாலும் உங்களை ஒருவர் ஒதுக்கினாலோ, அல்லது குறைவாக எண்ணினாலோ உங்களால் பொறுக்க முடிவதில்லை. உலகம் முழுவதிலும் மக்கள் ஏதோ ஒருவிதமான திருமண அமைப்பிற்கு உடன்பட்டு இருக்கிறார்கள். வெவ்வேறு சமூகங்கள் இதனை வெவ்வேறு விதமாகக் கையாண்டிருந்தாலும்… பொறுப்பேற்பதும், நம்பிக்கை அளிப்பதும், உறுதியோடு உடன் இருப்பதும் அதன் அடிப்படைக் கட்டமைப்பாக இருந்திருக்கிறது. இரண்டு மனிதர்கள் அந்நியோன்யமாக, மிக நெருக்கமாக வாழவேண்டுமெனில், இருவருக்குமிடையே ஒரு நம்பிக்கையான சூழ்நிலை அவசியம். இந்த நம்பிக்கை உணர்வில்லாமல் நிகழும் நெருக்கங்கள் அம்மனிதரை நிலைகுலையச் செய்வதுடன், சமுதாயச் சீர்குலைவிற்கும் வித்திடும். 5000 வருடங்களுக்கு முன் கிருஷ்ணர் இதைப் பற்றி பேசினார். குழந்தைகள் மனநிலை குறித்து அவர் அற்புதமாய் கொடுத்த விளக்கம்: “நம்பிக்கையற்ற, உறுதியற்ற உறவுகளில் மனிதர்கள் வாழ்ந்து, அந்தச் சூழலில் பிள்ளைகள், ‘தன் தாய், தன் தந்தை’ என்று அடையாளம் கொண்டு, உரிமையோடு வளரமுடியாமல் போகும் போது, அக்குழந்தை அற்புதமான ஒரு மனிதனாய் வளர்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.” இது இப்படித்தான் என்று திட்டவட்டமாக சொல்லவில்லை என்றாலும், இது தான் பொதுப்படையான நிலை. அரவணைக்க பெற்றோர்கள் இல்லாத நிலையிலும், ஒரு குழந்தை தன்னிலேயே நேர்மையான, ஸ்திரமான குழந்தையாக இருந்தால், அது நல்லபடியாக வளரும் தான். ஆனால் வளரும் காலத்தில் இதுபோன்ற குழப்பத்தில் குழந்தைகள் உழன்றால், பின் அவர்கள் வாழ்க்கை முழுவதும் இந்தக் குழப்பம் தொடரும். ருனானு பந்தம் இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனித உடலுக்கென்று ஒரு நினைவாற்றல் இருக்கிறது. இதனை யோகத்தில் ‘ருனானு பந்தம்‘ என்போம். நீங்கள் உண்ணும் உணவோ, வாழும் சூழலோ எல்லாவற்றையும் உடல் ஞாபகத்தில் வைத்திருக்கிறது. ஒருவேளை நீங்கள் மற்றொரு ஜென்மம் எடுத்து வந்தால், உங்கள் உடலிற்கு அத்தனை ஞாபகமும் இருக்கும். அதிலும் குறிப்பாக, உடலளவில் மிக நெருக்கமான சம்பந்தங்கள் ஏற்பட்டிருந்தால், அவை ருனானு பந்தத்தில் மிக வலிதாய் பதிவாகி இருக்கும். இந்தக் கலாச்சாரத்தில், தாங்கள் வாழும் இடத்தைப் பற்றி மக்கள் அதிக கவனம் எடுத்துக் கொண்டனர். இதனாலேயே ஒரு நாளை எவ்வாறு துவங்குவது, வீட்டை எவ்வாறு பராமரிப்பது, வீட்டில் எப்போதும் ஒரு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று பல வழிமுறைகளை உருவாக்கி வைத்தனர். உங்களுக்கு சரியானவற்றை தேர்ந்தெடுக்கக் கூடிய அறிவு இல்லாவிட்டாலும்,உங்கள் உடலில் சரியான பதிவுகள் இருந்தால், அது உங்களை சரியான திசையில் செலுத்திடும். இதுவே தவறான பதிவுகளைக் கொண்டிருந்தால், உங்களையும் மீறி, வேறு வழியில் அது உங்களை இழுத்துச் சென்றிடும். இத்தனை ஏன், யாரோ ஒரு மனிதர் உங்களைத் தொடுவது கூட உங்கள் மீது ஒரு குறிப்பிட்ட பதிவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? ‘மரணம் நம்மைப் பிரிக்கும் வரை’ என்ற வாசகம் கேட்டிருப்பீர்கள்… இது ஏனெனில், இந்த அளவிற்கு நம்பிக்கையும், உறுதியும் இல்லாமல், உடலளவிலான நெருக்கங்கள் கூடாது. நவீனம் என்ற பெயரில் நாம் உருவாக்கி வைத்த அடிப்படைகளை தளர்த்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு பெருத்த விலை கொடுக்கப் போகிறோம் என்பது நிச்சயம். இதுபோன்ற சூழ்நிலை, உணர்வுநிலையிலான பாதுகாப்பின்மையை உண்டாக்கும். உங்களுக்குள் பாதுகாப்பின்மை மேலோங்கி நிற்கும்போது உங்கள் மனமும் உடலும் தன் முழு திறனிற்கு செயல்படாது. உங்கள் உறவு பல வழிகளிலும் முறிந்து, அதை ஒட்ட வைக்க நீங்கள் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டது என்றாலோ, அல்லது அதில் வன்முறையும் வக்கிரமும் அதிகரித்திட்டது என்றாலோ, அதை விட்டு வெளியேற உங்களுக்கு எல்லாவிதமான உரிமையும் உண்டு. ஆனால் இதுபோல் உறவை முறித்துக் கொண்டு நீங்கள் வெளிவந்தால், போதுமான அளவிற்கு அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். முறிந்த உறவில் எது தவறாகிப் போயிருந்தாலும், அதில் உங்களுக்கு நிச்சயம் 50% பங்கு உண்டு. அதனால் அந்த 50% சரி செய்து கொள்ள, குறைந்தது ஆறு மாதமோ ஒரு வருடமோ அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். தவறாகிப்போன ஓர் உறவில் இருந்து இப்போது தான் வெளி வந்திருக்கிறீர்கள்… அதே போன்று மற்றுமொரு தவறில் சிக்கவேண்டாம் எனில், அப்பழைய உறவு உடைவதற்குக் காரணமாக இருந்த உங்கள் பங்களிப்பை திருத்திக் கொள்ளுங்கள். இதுதான் வாழ்வை பொறுப்புடன் கையாளும் வழி. ஆன்மீகத்தின் பெயரில் பொறுப்பற்ற செயல்கள் நிறையவே நிகழ்ந்துவிட்டன. அதனால் உங்கள் வாழ்க்கைத் துணையை மாற்றிக் கொள்ள ஆன்மீகத்தை சாக்காக பயன்படுத்தாதீர்கள். உண்மையாகவே உங்களுக்கு வளர வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால், யாரைப் பிடிக்காதோ அவருடன் சேர்ந்து வாழ்வது மிக அவசியம். நம் ஆசிரமத்திலும், ஈஷாவின் பிற பணிகளிலும், ஒருவருக்கு ஒருவர் ஒவ்வாத மனிதர்களை ஒரு செயலில் சேர்ந்து ஈடுபடச் செய்வேன். இது பல சமயங்களில் அச்செயலை சிக்கலுக்கு உள்ளாக்கி விடுகிறது. இருந்தாலும் இதை நான் செய்யக் காரணம், என் நோக்கம் அதிக அளவு வேலையை சாதிப்பது அல்ல… மனிதர்களின் வாழ்வை சீரமைப்பது தான். நமக்கு வேலை நடக்கவேண்டும் தான். ஆனால் அதை விட முக்கியம், இந்த வேலைகளைச் செய்யும் போது, மனிதர்கள் வளர்கிறார்களா, அல்லது அவற்றோடு சிக்கிப் போகிறார்களா என்பது தான். இந்தவொரு விஷயம் கவனிக்கப்படவில்லை என்றால் மக்கள் எதற்காக ஈஷாவில் வேலை செய்ய வேண்டும்? அவர்கள் வேறேதோ ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்யலாமே, கை நிறைய ஊதியமாவது கிடைக்கும்! இங்கு நீங்gஅள் ஈடுபடும் செயல்கள், நீங்கள் வளர்வதற்குத்தானே அன்றி, வேலை செய்வதற்காக அல்ல. இங்கு செய்ய வேண்டிய வேலை நிறையவே இருக்கிறது. அடிப்படை வசதிகள் இன்றி வாழ்வில் முன்னேற சிரமப்படும் பலருக்கு, ஏதுவான சூழ்நிலைகளை அமைக்கவேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆனால் இது எல்லாவற்றையும் விட முக்கியம், நீங்கள் உங்கள் கட்டுப்பாடுகளைத் தாண்டி வளர்வது. “அவருள் சரியான சக்தி சூழ்நிலை இல்லை,” “அவர் அப்படித்தான்” என்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் மேல் குறைகளைப் பட்டியலிட்டாலும், இவை யாவும் உங்கள் திருமண உறவை முறிப்பதற்கு போதிய காரணங்கள் அல்ல. உறவு உண்மையிலேயே பொறுக்க முடியாத அளவிற்கு துன்பமாய் இருந்தால், அதைவிட்டு வெளிவர அனைவருக்கும் உரிமையுண்டு, ஆனால் புளித்த பழம் பிடிக்கவில்லை என்பது போல், ‘சரிவரவில்லை’ என்று உறவையும் தூக்கி எறிய வேண்டாம். அந்த மனிதர்களை நம் வழிக்கு மாற்ற வழிகள் நிறைய இருக்கிறது. மேற்கத்திய சமூகங்களில் பலரும் மனதளவில் ஆழமான வலியோடு வாழ்வதைக் காண்கிறேன். அங்கு வெகு சிலரே நம்பிக்கையான, உறுதியான உறவுகளில் சந்தோஷமாக வாழ்கின்றனர். மற்றவர்களிடம் எப்போதுமே ஒரு பாதுகாப்பின்மை நிலவுகிறது. ‘சுதந்திரம்’ என்று நினைத்து அவர்கள் ஆரம்பித்த இந்த வாழ்க்கைமுறை தீராத வலியில், ஒரு நம்பிக்கையற்ற சூழலில், ஒரு பாதுகாப்பின்மையை உண்டு செய்திருக்கிறது. இதை சுதந்திரமான வாழ்க்கை என்று சொல்லிக் கொள்ளமுடியாது. உணர்வுரீதியாக இப்படித் தடுமாற்றத்தில் தத்தளிப்பது கொடூரமான பிணைப்பு. பிரயோஜனமாய் ஏதோ ஒன்றை செய்யவேண்டும் என்றால், எப்போதும் திறமையாக, தெளிவாக வேலை செய்யவேண்டும் என்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் நிதானமான, நிலையான மனநிலை வேண்டும். உங்களுக்கு உறவு தேவையில்லை என்றால், உங்கள் கண்களை மூடி உங்களால் சுகமாக அமர முடியுமென்றால், அனைவரையும் விட்டுவிலக உங்களுக்கு பரிபூரண சுதந்திரம் உண்டு. ஆனால் இவர், அவர், அவர் என்று தேவைக்கேற்ப மனிதர்களை மாற்றிக் கொண்டே இருப்பது சரிவராது. நான் எவ்வித நெறிகளையும் போதிப்பதில்லை. இது சரி, அது தவறு என்றும் சொல்லவில்லை. நம் உயிரிற்கு எது வேலை செய்யுமோ, அதையே நாம் செய்யவேண்டும்

நீங்கள் வலக்கையாளரா? இடக்கையாளரா

கேள்வி இந்திய கலாச்சாரத்தில் வலது கையால் வாங்கிக் கொள்வதும், முக்கியமான விஷயங்களை வலக்கையால் மட்டுமே செய்வதும் வழக்கம். மேற்கத்திய நாடுகளிலும்கூட வலது கையால் செய்யுங்கள் என ஊக்குவிக்கின்றனர். எதற்காக இந்த வழக்கம்? சத்குரு: இருதய அமைப்பு இருதய அமைப்பு இடது பக்கமாக உள்ளது முக்கியமான ஒரு காரணம். வலது கையை பயன்படுத்தும் அளவிற்கு இடது கையை பயன்படுத்தக் கூடாத விதத்தில்தான் மனித உடல் உருவாக்கப்பட்டுள்ளது. பந்து எறிவது போன்ற செயல்களுக்கு இது பொருந்தும். ஆனால், வலது கையினால் பெற்றுக் கொள்வது எதனால்? இடது கை மற்றும் வலது கை வெவ்வேறான குணங்களைக் கொண்டுள்ளன. வலது கால் மீது இடது கால் அல்லது இடது கால் மீது வலது கால் வைத்து அமரும் நிலை இரண்டிற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. சித்துவேலை செய்வது போன்ற சூழ்நிலை தவிர, இடது காலினை உள்ளே வைத்து அமரும் வழக்கமே யோக கலாச்சாரத்தில் நிலவி வருகிறது. இடதுபுறத்தை மென்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்வதன் மூலம் நம்மைச் சுற்றி நடப்பதை சிறப்பாக உணரலாம். உடலின் இடப்பக்கம் பெண்தன்மை உடையது. அதனை பேணிக் காப்பது அவசியம். வலப்பக்கம் ஆண்தன்மை கொண்டது. வெளிப்புற செயல்கள் அனைத்தையும் வலக்கையை பயன்படுத்தி செய்ய வேண்டும். வலது திடமானது, இடது மெல்லுணர்வு உடையது. உங்களை உணர வேண்டும் என்று நான் விரும்பினால், என் இடக்கையையே நீட்டுவேன். ஏனெனில், அதற்கு உள்வாங்கும் திறனும் மெல்லுணர்வும் உண்டு. இடதுபுறத்தை மென்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்வதன் மூலம் நம்மைச் சுற்றி நடப்பதை சிறப்பாக உணரலாம். பிற செயல்களுக்கு அதைப் பயன்படுத்தினால் தன்னுடைய மெல்லுணர்வை அது இழந்துவிடும். ஏதோ ஒன்றுக்கு மென்மையான தொடுதல் தேவைப்படும்போது இடக்கையை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, கோல்ஃப் விளையாட்டு விளையாட உங்களுக்குள் இருக்கும் ஆண்தன்மையை மனத்திலிருந்து நீக்குவது அவசியம். இதனால் தான் கோல்ஃப் விளையாடும்போது, பெரும்பாலான சமயங்களில் நான் இடது கையை பயன்படுத்துகிறேன். இதனை இன்னும் ஆழமாய் பார்த்தால், கோல்ஃப் விளையாட சக்தி தேவையில்லை, மென்மையான ஒரு தொடுதலே போதும். பெண்மையின் குணம் இதுவே பெண்மையின் குணம், இடதுகை பெண்தன்மை உடையது. பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்குள் உள்ள பெண் தன்மையை கொன்று விட்டதால், இந்த வித்தியாசத்தை உணர்வதேயில்லை. பெண் தன்மையை உயிர்ப்புடன் வைத்திருந்தால் இதனை ஒருவரால் உணர முடியும். ஆனால், இன்றோ சம உரிமை என்ற பெயரில் அனைத்தையும் ஒரே மாதிரி ஆக்கிக் கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதிலும் ஆண் தன்மையையும் பெண் தன்மையையும் சமமாக மாற்றுவதற்கான தீவிரமான முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. இது துரதிருஷ்டவசமான, கொச்சையான உண்மை. பெண்களிடம் கூட இன்று பெண்தன்மை குறைந்து வருவது ஒரு பெருவிபத்து. நாம் முரடான ஒரு சில கருத்துக்களை கொண்டிருப்பதால், எங்கோ மனதின் ஒரு மூலையில் பெண்தன்மை பலவீனமானது என்று எண்ணத் துவங்கிவிட்டோம். ஆண்தன்மை அதிகமானால்… வெகுசிலருக்கு இருதயம் வலப்பக்கமாக அமைந்து விடுவதுபோல் ஒருசிலருக்கு பிறப்பிலேயே இடக்கைப் பழக்கம் அமைந்துவிடுகிறது. பொருளாதாரம் பிரதானமாய் போனால், ஆண்தன்மை மட்டுமே பிழைக்கும். அடிப்படையில் பார்த்தால், பொருளாதாரம் பிழைப்பு நடத்துவதற்கான ஒரு செயல்முறை. உலகில் இன்று வாழ்வு நடத்துவதற்கான பிழைத்தல் செயலுக்கு முக்கிய இடம் கொடுத்து உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இது முட்டாள்தனமான ஒரு வழி. இதுபோன்ற ஒரு முடிவெடுத்துவிட்ட பின் அங்கு பெண்தன்மை உயிர்ப்புடன் இருப்பதற்கான சாத்தியம் இல்லை. பெண்கள் பிழைப்பு நடத்த தெரியாதவர்கள் என்றில்லை, ஆனால் பெண்தன்மை என்னும் ஒரு குணத்தை முழுவதுமாக நாம் அழிக்கிறோம். அழித்துவிட்டு, இந்த உலகம் ஏன் இப்படி கரடுமுரடாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறோம். சமூகத்தில் இன்று நாம் உருவாக்கிக் கொண்டுவரும் மதிப்பீடுகளைப் பார்க்கையில் உலகம் வேறு விதத்தில் இருக்கவே முடியாது. பெண்தன்மை செயல்பட, இடதினை மென்மையாகவும் விழிப்பாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். வலதுகை இந்த உலகில் நாம் செய்யும் செயல்களைச் செய்ய. சம்பாதிக்க, பந்துவிளையாட அல்லது இதுபோன்ற செயல்களில் ஈடுபட வலது கையை பயன்படுத்த வேண்டும். பிழைப்பு சார்ந்த அத்தனை செயல்களுக்கும் வலது கையை பயன்படுத்த வேண்டும். சூட்சுமமான, மெல்லுணர்வுடைய விஷயங்களைச் செய்ய இடது கையை பயன்படுத்துவது அவசியம். வெகுசிலருக்கு இருதயம் வலப்பக்கமாக அமைந்து விடுவதுபோல் ஒருசிலருக்கு பிறப்பிலேயே இடக்கைப் பழக்கம் அமைந்துவிடுகிறது. அவர்களுடைய சக்தி அவ்விதத்தில் இருப்பதால் அவர்கள் தவிர்க்க இயலாமல் இடக்கையை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இயல்பாக பார்த்தால் வலக்கையால் உங்களால் அதிக செயல்களைச் செய்ய முடியும். இடக்கையை குறிப்பிட்ட விதத்தில் வைத்திருந்தால், அதனை வேறு விஷயத்திற்காக பயன்படுத்தலாம். இதனை சரியாய் புரிந்துகொள்ளாமல் வலது கையை மட்டுமே பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யக்கூடாது. உங்கள் வலக்கையினைப் பயன்படுத்துவது போல் இடக்கையை மூர்க்கமாக பயன்படுத்தக் கூடாது. அதனை உள்வாங்கிக் கொள்வதற்காக காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் உங்களிடம் உள்வாங்கும் தன்மை என்பது இருக்காது.
நீங்கள் வலக்கையாளரா? இடக்கையாளரா? 

ஒருவனுக்கு ஒருத்தி மட்டும்தானா?

ஒருவர் ஒரு துணையுடன் மட்டுமே வாழவேண்டும் என்பதே கடவுளின் விருப்பமா? அல்லது ஒரே ஒரு துணையுடன் மட்டும் வாழ்வதுதான் சிறந்ததா? சத்குரு: கடவுள் இதற்கெல்லாம் விருப்பப்படுவார் என்று தோன்றவில்லை. உங்கள் கேள்வியை இப்படிச் சொல்லலாம்… “அர்த்தமுள்ள செயல் எது?” இதற்கு இரு அம்சங்கள் உள்ளன. ஒன்று சமூகம் சார்ந்தது. “ஒருவனுக்கு ஒருத்தி” என்றுதானே நம் சமூகத்தில் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. சமூகத்தை கட்டுக்குள் வைப்பதற்காக சொல்லப்பட்ட செய்தி இது. “ஒருவனுக்கு பல பெண்கள்” என்று சொல்லப்பட்ட சமூகங்களில் எல்லாம் இரும்புக்கரம் கொண்டு ஆளவேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது. இதைப் பற்றி நான் மேற்கொண்டு பேச விரும்பவில்லை. இந்த விஷயத்திற்கு இன்னொரு பரிமாணம் இருக்கிறது… இந்தப் படைப்பில் உள்ள அத்தனைப் பொருட்களுக்கும் ஞாபகம் இருக்கிறது. பல கோடி வருடங்களுக்கு முன் நடந்தவை யாவற்றையும் உங்கள் உடல் இன்றும் ஞாபகத்தில் வைத்துள்ளது. மரபணு, வம்சாவளி என்று நாம் சொல்வது யாவும் ஞாபகம்தான். இந்தியப் பாரம்பரியத்தில் இந்த உடல்சார்ந்த பந்தத்தை ருனானு பந்தம் என்கிறோம். உங்கள் ஞாபகங்களே உங்களைச் சுற்றியுள்ளவற்றுடன் உங்களைப் பிணைக்கிறது. இது இரத்த பந்தத்தையோ அல்லது நீங்கள் கொண்டுள்ள அன்பைப் பற்றியதோ அல்ல, உங்களுக்குள் உள்ள நினைவுகளே உறவாகவும் பந்தமாகவும் ஆகிறது. ஞாபகங்களை இழந்தால் எந்தவொரு மனிதரும் அன்னியராய் தோன்றுவார். யாரோ ஒருவரது கரங்களை அன்யோன்யமாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பற்றினால் அந்த நினைவு மறக்கப்படாது. உங்கள் உடல் கொண்டுள்ள ஞாபகங்களுடன் ஒப்பிடுகையில் மனதின் ஞாபகங்கள் மிகச் சிறியதே. யாரோ ஒருவரை நீங்கள் ஒருமுறை தொட்டால் மனம் அதனை மறந்து போகலாம், ஆனால் உடலின் நினைவில் நிரந்தரமாய் அது பதிந்துவிடும். இருவர் உடலுறவு கொண்டால் மனம் அதனை மறந்துவிடலாம், உடல் அதனை மறக்காது. விவாகரத்தே பெற்றுவிட்டாலும், உங்கள் துணையை நீங்கள் எவ்வளவு வெறுத்தாலும் உடலளவில் உள்ள நினைவு நீங்காது. யாரோ ஒருவரது கரங்களை அன்யோன்யமாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பற்றினால் அந்த நினைவு மறக்கப்படாது. ஏனெனில், உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும் பெற்றுக் கொள்வதற்கு திறந்த நிலையில் இருக்கின்றன. நீங்கள் யாருடனாவது சிக்கிப் போகாமல் இருக்க விரும்பினால், அவர்களுடன் இருக்கையில் இரு கரங்களையும் இணைத்து “நமஸ்காரம்” செய்யுங்கள். இரண்டு கைகளையோ, இரண்டு கால் கட்டை விரல்களையோ சேர்த்து வைக்கையில், உடல் அதன் ஞாபகத்தில் ஊறிப் போவதை தடுக்கிறது. உடல் சார்ந்த ஞாபகங்களை குறைப்பதற்கான வழிமுறைகளாக இவற்றை நாம் பார்க்கிறோம். உடல் சார்ந்த ஞாபகங்கள் குறையாவிட்டால், ஆழமான அனுபவ நிலைகளுக்குள் உங்களை அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்படும். அளவுக்கதிகமான சுகத்தில் ஈடுபடுபவர்களின் முகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்பை காண முடியும். அதில் அற்பமான ஒரு ஆளுமையும் இருக்கும், ஆனால் சந்தோஷம் இருக்காது. அதனை அவர்களிடமிருந்து அகற்ற ஏராளமான வேலை செய்ய வேண்டி வரும். உங்கள் மனம் கண்டுணர முடியாத வகைகளில் உங்கள் உடல் ஞாபகங்கள் உங்களை பின்னிப் பிணைத்து விடும். அதனால், உங்கள் உடலை எதுபோன்ற விஷயங்களுக்கு நீங்கள் உட்படுத்துகிறீர்கள் என்பதில் விழிப்பாய் இருப்பது அவசியம். கொடுக்க வேண்டிய விலை இன்று எங்கு பார்த்தாலும் மிதமிஞ்சிய அன்யோன்யமான உறவுமுறைகளை பார்க்க முடிகிறது. உங்கள் உடலிடமிருந்து ஒரு தொலைவு ஏற்படுத்திக் கொள்வது எப்படி என்று உங்களுக்கு தெரியாவிட்டால், அதற்கு உண்டான விலையை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும். தன் உடலுடன் ஒரு தொலைவினை ஏற்படுத்திக் கொண்ட மனிதருக்கு அவர் என்ன செய்தாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. தன் உடலை அவர் ஒரு கருவியாகவே பயன்படுத்திக் கொள்கிறார். அப்படி அல்லாத பட்சத்தில், உடல் சார்ந்த சுகங்களை குறைப்பது நல்லது. அதனாலேயே, இந்தக் கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லி வந்திருக்கிறார்கள். அந்த ஒருவர் இறந்தாலே ஒழிய மற்றொருவர் மறுதிருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லாது இருந்தது. ஆனால், இன்று 25 வயதிற்குள் 25 துணைகளுடன் இருந்து விடுகின்றனர். இதற்கு உண்டான விலையை மக்கள் ஏற்கனவே கொடுத்து வருகிறார்கள். அமெரிக்காவில், 10 சதவிகித மக்கள் மனஅழுத்தத்திற்கான மருந்துகளை உண்டு வருகின்றனர். இதற்கு மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று அவர்களுடைய உடல் குழம்பிப் போயிருப்பதுதான். அவர்கள் எதற்கு உரியவர்கள் என்று அவர்களுடைய உடல் குழப்பம் அடைகிறது. உடலுக்கு ஸ்திரமான ஞாபகம் இருக்க வேண்டும், இதனை மக்களும் உணர்கின்றனர். ஒருவருடைய துணை அழகான உடல்வளம் இல்லாதவராய் இருக்கலாம், புத்திசாலியாக இல்லாமல் இருக்கலாம், மேல்மட்டத்தில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கலாம், இருந்தும் தன் துணைக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் துணிச்சல் ஒருவருக்கு ஏற்படுகிறது. தனக்குள் எங்கோ ஒரு மூலையில் இப்படி வாழ்வதில் சுகமும் வளமும் இருக்கிறது என்று அவர்களுக்கு புரிகிறது. உடல் சார்ந்த ஞாபகம், மனம் சார்ந்த ஞாபகங்களை விட உங்களை அதிகமாக ஆட்சி செய்வதே இதற்கு காரணம். தற்சமயம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது உங்கள் உடல் கொண்டுள்ள நினைவுகளால் நிர்ணயிக்கப்படுகிறது, மனதின் நினைவுகளால் அல்ல. நாளை காலையே உங்கள் மன நினைவுகளை வீசியெறிய முடியும், உடல் சார்ந்த நினைவுகளை அப்படி எறிய முடியாது. அதற்கு உங்களுக்குள் முற்றிலும் வித்தியாசமான ஆன்மீக வளர்ச்சி நிகழ்ந்திருக்க வேண்டும். உடல் ஞாபகங்களை குறைத்தல்… பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றிற்கு மிக உறுதியான ஞாபகம் இருக்கிறது என்று நவீன அறிவியல் இன்று சொல்கிறது. யோகாவில், பன்னெடுங்காலமாக இதனை அறிந்து வைத்திருக்கிறோம். சக்தி நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களுக்கு நான் செல்கையில், அங்குள்ள மக்களிடம் அவ்விடத்தைப் பற்றி நான் கேட்பதில்லை, அங்குள்ள ஒரு பாறையின் மீது நான் கை வைப்பேன். அதனுடன் இருப்பதன் மூலம் அந்த இடத்தைப் பற்றிய முழு கதையையும் அறிந்து கொள்வேன். மரத்திலுள்ள வளையங்களை வைத்து அவ்விடத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றையே நாம் சொல்வதில்லையா அதைப்போல, பாறைகளுக்கு மரங்களை விட சிறப்பான ஞாபக சக்தி இருக்கிறது. ஒரு பொருள் எத்தனை தடிமனாக இருக்கிறதோ அந்த அளவிற்கு ஞாபகத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் சக்தியும் அதற்கு கூடுதலாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அசைவற்ற பொருட்களுக்கு அசையும் பொருட்களை காட்டிலும் ஞாபகம் அதிகம். இன்றைய தொழில்நுட்பம் இதனை நிரூபித்து வருகிறது. கம்ப்யூட்டருக்கு உங்களை காட்டிலும் நினைவாற்றல் அதிகமாக உள்ளது. மனித மனம் நினைவாற்றலுக்காக உருவாக்கப்பட்டதல்ல, கிரகித்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. ஜடப் பொருட்களால் கிரகித்துக் கொள்ள முடியாது, அவற்றால் தன் நினைவில் மட்டுமே பதித்துக் கொள்ள முடியும். தெய்வச் சிலைகளும், பிற பிரதிஷ்டை செய்யப்பட்ட உருவங்களும் உருவாக்கப்படும் நோக்கமே அவை நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள சக்தி வாய்ந்த ரூபங்களாய் விளங்குவதாலேயே… ஒரு காலத்தில், இந்தியாவில், சிவன் கோவிலுக்குள் நிர்வாணமாக மட்டுமே நுழைய முடியும். ஆங்கிலேயர்கள் இந்த தேசத்திற்குள் நுழைந்த பின்னரே இதுபோன்ற பழக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நாம் போலித்தனமாக வெட்கப்பட ஆரம்பித்தோம். கோவிலில் உள்ள ஞாபகத்தை நாம் முழுமையாய் கிரகித்துக் கொள்வதற்காகவே நிர்வாணமாய் கோவிலுக்குள் செல்லும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. தீர்த்தத்தில் ஒரு முழுக்குப் போட்டு, தரையில் வெறும் உடலுடன் படுக்கும்போது, தெய்வீகத்தின் ஞாபகங்களை உங்களுக்குள் ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும். நடப்பதை வேடிக்கை பார்க்கும் குணம் மனதிற்கும், ஒரு இடத்தில் நிலவும் சக்தியை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை இந்த உடலிற்கும் உள்ளது. தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி வளாகத்தில் வணங்கிய நிலையிலுள்ள பக்தர்களின் சிற்பங்களை பார்க்க முடியும். மனதைவிட உடல், தெய்வீகத்தை சிறப்பாய் உள்வாங்கிக் கொள்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இது அமைந்துள்ளது. உடல் சார்ந்த ஞாபகங்களை அழிப்பது… ஆழமான பக்தியினால் உடல் சார்ந்த ஞாபகங்களை அழிக்கலாம் அல்லது வேறு சில ஆன்மீகப் பயிற்சிகளை செய்வதன் மூலமும் அதனை அழிக்க முடியும். அதிஅற்புதமான பக்தர்கள் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அதில் ஒரு மனிதர் எனக்குள் ஆழமாய் சென்றார்… உங்கள் உடல் சார்ந்த ஞாபங்களை நீங்கள் அழித்தால், உங்களுக்கு எது முக்கியமோ அதைப் போலவே உங்கள் உடல் வடிவமெடுக்கும். இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு ஒரு பெண் வந்து சேர்ந்தார். அவர் எங்கிருந்து வந்தார் என்று நமக்கு தெரியாது, ஆனால் அவரது அங்க அவயங்களை வைத்துப் பார்க்கும்போது அவர் நேபாள தேசத்தவராய் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். அவர் ஒரு வார்த்தைக்கூட உச்சரிக்காமல் வெறுமே நடந்து திரிந்தார். எப்பொழுதும் அவரை சில நாய்கள் பின் தொடர்ந்தன. நாய்களுக்கு உணவளிப்பதற்காக உணவை திருடவும் செய்வார் அவர். அதற்கு பலமுறை அடிவாங்கியும் இருக்கிறார். ஆனால், வேறு சில சமயங்களில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கடல் அலைகளில் அவர் மிதப்பதையும் மக்கள் பார்த்திருக்கின்றனர். கடலுக்குள் சென்று சம்மணமிட்டு தண்ணீரின் மேல் அமர்ந்து கொள்வார், மிதப்பார். அதன்பின், மக்கள் அவரை வழிபட துவங்கினர். அவர் கடைகளுக்கு வரும்போது, நாய்களுக்கு அவற்றை அவர் அளிக்காதவாறு உணவினை அவர்கள் பாதுகாத்துக் கொண்டனர். காலப்போக்கில், அவரை அடிக்க மக்களுக்கு துணிச்சலற்றுப் போனது. அவர் ஒரு சராசரி மனிதரைப் போல் அவர்களுக்கு தென்படவில்லை என்பதே காரணம். தன் முழு வாழ்க்கையையும் அவர் திறந்த வெளியிலேயே வாழ்ந்தார். தெருவோரத்திலும், கடலிலும் ஒரு சிறு கூரை கூட இல்லாமல் உறங்கினார். இதனால் அவரது முகம் இயற்கை மாற்றங்களால் பாதிப்புற்றிருந்தது. அவரது வாழ்வின் கடைசி நாட்களில், அவர் 70 வயதை கடந்த பின்பு, அவருடைய ஆத்மார்த்த சீடர் ஒருவர் அவரை சேலத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பின், பிரபல இசையமைப்பாளர் ஒருவர், அங்கு அவருக்கென ஒரு சிறு வீட்டினை கட்டிக் கொடுத்தார். அவரைச் சுற்றி பக்தர்கள் கூடினர். 15, 16 வருடங்களுக்கு முன் சேலத்திற்கு அருகில் இருக்கும் மலைப் பிரதேசத்திற்கு நான் செல்லும்படி நேர்ந்தபோது இந்த பெண்மணியைப் பற்றி என்னிடம் சிலர் சொன்னார்கள். அவர் பெயர் மாயம்மா என்றும் சொன்னார்கள். நான் சென்றபோது அவர் மரணம் அடைந்திருந்தார். அன்று பௌர்ணமி தினம். மாயம்மா சமாதியில் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது கலந்துகொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. என் மனைவி மகளுடன் அவ்விடத்திற்கு சென்றேன். மகளுக்கு 5, 6 வயதிருக்கும் என்று ஞாபகம். பார்ப்பதற்கு அத்தனை எழிலுடன் இல்லாத, ஒரு கான்கிரீட் சமாதி அது. நான் அங்கு நுழைந்தபோது, அங்கு நிலவிய சக்தி என் முகத்தில் அடித்தாற்போல் தீவிரமாய் இருந்தது. அத்தனை தீவிரம். நாங்கள் அங்கு அமர்ந்தோம், மணிக்கணக்கில் நேரம் சென்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. மாயம்மாவின் பக்தர் ஒருவர் அன்னத்தினை பரிமாறிக் கொண்டிருந்தார். அவரது முகத்தைப் பார்த்த என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. அவர் மாயம்மாவை வார்த்தெடுத்ததுப்போல் இருந்தார். இந்த மனிதரோ ஒரு தென்னிந்தியர், ஆனால் அவரது தோற்றம் ஒரு நேபாள முகத்தை ஒத்திருந்தது. அவரது ஆழ்ந்த பக்தியினால் மாயம்மாவின் முகம் போலவே அந்த பக்தரது முகம் மாறிப் போயிருந்தது. உங்கள் உடல் சார்ந்த ஞாபங்களை நீங்கள் அழித்தால், உங்களுக்கு எது முக்கியமோ அதைப் போலவே உங்கள் உடல் வடிவமெடுக்கும். உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் மாறிப்போகும். மரபு சார்ந்த கட்டாயங்களிலிருந்து நீங்கள் விடுபடுகிறீர்கள் என்று அர்த்தம். ஒருவர் சந்நியாசம் எடுக்கும்போது, தன் பெற்றோருக்கும், தன் மூதாதையர்களுக்கும் ஒரு சில சடங்குகளைச் செய்கிறார். இறந்தவர்களுக்குத்தான் இதுபோன்ற சடங்குகளை நாம் செய்து வருகிறோம். ஆனால், சந்நியாசிகளின் பெற்றோர் உயிருடன் இருக்கும் போதே அது செய்யப்படுகிறது. பெற்றோர் இறந்துவிட வேண்டும் என்ற நோக்கில் அவை செய்யப்படுவதல்ல, மாறாக ஒருவரது உடல் சார்ந்த நினைவுகளை கழுவ வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆன்மீகத்தில் தீவிரமாக இறங்கும்போது, முதல் படியாக உங்களது மரபு சார்ந்த ஞாபகங்களிலிருந்து தொலைவினை உருவாக்க வேண்டும். இதனைச் செய்யாமல் உங்கள் மூதாதையர் உருவாக்கிய கட்டாயங்களிலிருந்து நீங்கள் விடுபட முடியாது. அவர்கள் உங்கள் மூலம் வாழ்ந்து, உங்களை பல விதங்களிலும் ஆட்சி செய்வார்கள். உடல் சார்ந்த ஞாபகம் உங்களை இத்தனை தூரம் ஆட்டுவிக்கும்போது இந்தப் பிறப்பில் அதனை குறைத்துக் கொள்வது சிறந்தது. உங்கள் மூதாதையர்கள் விட்டுச்சென்ற கோடிக்கணக்கான வருட ஞாபகங்களை நீங்கள் விலக்க வேண்டும். ரெப்டீலியன் மூளை என்று அறிவியல் சொல்கிறதே, ஊரும் பாம்பு, பல்லி, தேள் இவையெல்லாம் இன்றும் உங்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மூளை மனதில் இருக்கிறது என்று எண்ண வேண்டாம், உடலே மூளை. குறைந்தது இந்த ஜென்மத்திலாவது உங்கள் உடல் மேல் ஏற்படக்கூடிய பதிவுகளை நீங்கள் குறைக்கலாம். அது குழப்பமடைவதை தவிர்க்கலாம். இதனை அறிந்தவர்கள், உடல் ஏற்கும் தன்மையுடையதாய் இருக்கும் வகையிலான ஆன்மீக முறைகளை உருவாக்கினார்கள். யாரோ ஒருவர் ஆன்மீகத்தில் தீவிரமடையும்போது அவர் செய்யும் முதல் காரியம் தன் உறவுகளை விலக்கி வைப்பது என்பது உலகம் முழுமைக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஏனெனில், அவர் உடல் சார்ந்த உறவுகளை அமைத்துக் கொள்ள விழைந்தால், சில விஷயங்களில் சிரமம் ஏற்படும். அந்த மனிதர் ஆழமான கட்டாயத்தில் இருக்கிறார், அவரை தற்சமயம் அந்தக் கட்டாயத்திலிருந்து விடுவிப்பது மிகச் சிரமமான விஷயம் என்று தெரிந்தாலோ அல்லது அந்த மனிதர் தன் உடலின் மீது முற்றிலும் அடையாளமற்று இருக்கிறார் என்று தெரிந்தாலே ஒழிய அவருக்கு உடல் சார்ந்த உறவுகள் அமைத்துக் கொடுக்கப் பெறுவதில்லை. ஆனால், ஒருவருக்கு உடலளவில் தேவை இருக்கும் பட்சத்தில், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதே சிறந்தது. அதிகமானோருடன் ஈடுபடுவது உடலுக்கு குழப்பத்தை விளைவிக்கும். அது தனிமனிதருக்கு நல்லதல்ல.

: ஒருவனுக்கு ஒருத்தி மட்டும்தானா?

என்ன வகை ஆடை? எப்போது அணிவது?

துணிக்கடைக்குச் சென்றால் நமக்கு பிடித்த நிறத்தில், டிசைனில் ஆடைகள் தேர்ந்தெடுப்பதே நம் வழக்கம். ஆனால் நாம் உடுத்தும் ஆடை கூட நம்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆடைகள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன…? என்ன வகை ஆடை, எப்போது அணிவது? இதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்…. சத்குரு: யார் எந்த வகை ஆடை அணிவது? இயற்கை முறையில் விளைந்த பருத்தியில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிவது பற்றி பலரும் இன்று பேசுகின்றனர். ஆனால், தொடக்கத்தில் மனிதர்கள் இத்தகைய ஆடைகளைத்தான் அணிந்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக, இந்தியாவில் தொன்மையான காலம் தொட்டே இந்த வழக்கம் இருந்து வந்திருக்கிறது. பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஒருவகையில் உங்கள் உடலின் தன்மைக்கு உறுதுணை செய்கின்றன. மிக சமீபத்தில் தான் சிலரின் வணிக நோக்கங்களுக்காக இந்த முறை மாற்றப்பட்டுவிட்டது. யார் என்ன வகையான ஆடைகளை அணியவேண்டுமென்று நான் வகைப்படுத்த முயலவில்லை. ஆனால், வாழ்க்கையை ஒரு வகையான சுதந்திரத்துடன் நீங்கள் கண்ணுற்று எவ்வித நிர்பந்தமுமின்றி சில தீர்மானங்களை எடுக்கவேண்டும். உங்கள் உடல்நலம், மனநலம், நலவாழ்வு ஆகியவற்றின் மீது நீங்கள் அணியும் ஆடைகளுக்கென ஒரு தாக்கம் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான மனிதர்களுக்கு தங்கள் நலவாழ்வு மீது எவ்வித அக்கறையும் இல்லை. இந்தியா போன்ற நாடுகளில் கூட நாற்பது டிகிரி வெயிலில் கனமான கரியநிற ஜாக்கெட்களும், கழுத்துப் பட்டிகளும் அணிந்து நடமாடுவதைப் பார்க்கிறோம். தாங்கள் எதை, எப்போது அணியவேண்டும் என்கிற தெளிவில்லாமல் தங்கள் மேல் திணிக்கப்படுவதை எல்லாம் மனிதர்கள் அணிந்து கொள்வது மிகவும் துரதிருஷ்டமானது. ஆர்கானிக்கா? சிந்தடிக்கா? ஆர்கானிக் முறையில் உருவான துணிகளை அணிவதற்கும், சிந்தடிக் ஆடைகளை அணிவதற்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், உங்கள் உடலின் இயக்கத்திலேயே அவை பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. மற்றவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டியதில்லை, உங்கள் அனுபவத்திலேயே இதை நீங்கள் உணரலாம். உள்ளாடை உட்பட அனைத்தையும் ஒரு வார காலம் பட்டிலும், பருத்தியிலும் உடுத்திப் பாருங்கள். உங்களுக்கு இந்த ஆடைகள் எத்தனை சௌகரியம் என்பதை உணர்வீர்கள். அதன்பின்னர், இறுக்கமான சிந்தடிக் ஆடைகளை அணிந்து பாருங்கள். அடிப்படை வசதியிலிருந்து உடல் செயல்படும் விதம் வரை மிகப் பெரிய வித்தியாசத்தை உணர்வீர்கள். ஏனென்றால், உங்கள் உடலை எது மூடியிருக்கிறதோ, அதற்கென்று சில தன்மைகள் உண்டு. நீங்கள் யார் என்கிற உங்களின் தேடலுக்குத் துணை செய்யவோ, தடை செய்யவோ சில பொருட்களால் முடியும். குறிப்பாக, பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஒருவகையில் உங்கள் உடலின் தன்மைக்கு உறுதுணை செய்கின்றன. அதற்காக, சிந்தடிக் ஆடைகளை அணிந்தால் செத்துவிடுவீர்கள் என்று பொருளல்ல. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சிந்தடிக் ஆடைகளை அணிந்து நீங்கள் தியானம் செய்தாலும், அதேவிதமான மனிதராக நீங்கள் இருக்கமுடியும். ஆனால், கூடுதலாக நீங்கள் முயற்சி செய்யவும் போராடவும் வேண்டிவரும். ஆர்கானிக் பருத்தியில் தயாரான ஆடைகளின் நன்மைகளை உணர்ந்து அந்தவிதமான ஆடைகளுக்கு மாறிக்கொள்கிற வாய்ப்பு அனைவருக்கும் அமைவதில்லை. ஏனென்றால், பத்து பிறவிகளுக்குத் தேவையான ஆடைகள் அவர்களிடம் இருக்கின்றன. ஆனால், எளிமையான சூழல் மற்றும் எட்டு ஜோடி ஆடைகள் போதும் என்று நீங்கள் நினைத்தால் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் தரத்தில் உங்களால் கவனம் செலுத்தமுடியும். எண்ணிக்கையா? தரமா? வாழ்வின் எல்லா நிலைகளிலும், எண்ணிக்கையின் அடிப்படையில் பாராமல், தரத்தின் அடிப்படையில் பார்க்க மனிதர்கள் பழகிவிட்டால், இந்த பூமியை நம்மால் காப்பாற்ற முடியும். இப்போது இருக்கும் சிக்கல் என்னவென்றால், மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் சிந்திக்கிறார்கள். ஆனால், நம்மிடம் போதுமான எண்ணிக்கை இல்லை. ஆனால், வேண்டிய அளவு தரமானவை இருக்கின்றன. எண்ணிக்கையை மறந்து தரத்திற்கு நீங்கள் முதலிடம் தரத் தொடங்கிவிட்டால், வாழ்க்கை மேலும் மேலும் மேம்படுவதோடு எல்லோரின் தேவைகளும் நிறைவேறும்.

:

இறந்த பின் பாலூற்றுவது எதற்காக?

கடைசியில ஒரு வாய் பால் ஊத்த வர மாட்டியா” என வெளிநாட்டிற்குச் செல்லும் பேரனின் கன்னத்தை தடவும் பாட்டிமார்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் பிறந்தவுடன் முதல் உணவாகும் பால், இறுதி வரை வாழ்கையில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இறப்பிலும் நம் வாழ்வுடன் ஒன்றிவிட்டது. இது குறித்து சத்குரு என்ன சொல்கிறார்? படியுங்கள். கேள்வி சத்குரு, ஒருவர் இறந்த மூன்றாவது நாளில், அவருக்கு பால் அல்லது நீர் ஊற்றுகிறோமே… எதற்காக? சத்குரு: இறப்பிற்குப் பின் வரும் மூன்றாவது நாளில் பால் அல்லது நீரை ஒருவரை புதைத்த இடத்திலோ, எரித்த இடத்திலோ அர்ப்பணிப்பது பாரம்பரியமாக நாம் செய்துவரும் சடங்காக உள்ளது. அவர்கள் இறந்துவிட்ட பின் உங்களால் ஏதும் செய்ய முடியாத நிலையிலும், அவர்களுக்கு உணவூட்ட வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உளவியல் ரீதியான தேவை உங்களுக்கு ஏற்படுகிறது. நீங்கள் நீர் ஊற்றினாலும், பால் ஊற்றினாலும் அல்லது உணவே கொடுத்தாலும் அதை நுகர்வதற்கு ஒரு உடலால் மட்டுமே முடியும். உடல் இல்லாத ஒருவரால் இவற்றையெல்லாம் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அந்த உயிருக்கு இதுபோன்ற அர்ப்பணிப்புகளை நாம் செய்யும்போது அவரது ஏக்கம் தணியக்கூடும். ஆனால் இது மரணமடையும் அத்தனை உயிர்களுக்கும் பொருந்தாது. ஆனால் இதுபோன்ற சடங்கு, உயிர் வாழ்பவர்களிடத்தில் ஒரு ஆழமான உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்றொரு விதத்தில் பார்க்கும்போது, தனது பிராரப்த கர்மவினை (வாழ்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட கர்மவினை) தீர்ந்து போவதற்கு முன்னதாக ஒருவர் இறக்கும்போது அல்லது நிராசையுடன் அவர் மரணமடையும்போது, அந்த உயிருக்கு இதுபோன்ற அர்ப்பணிப்புகளை நாம் செய்யும்போது அவரது ஏக்கம் தணியக்கூடும். ஆனால் இது மரணமடையும் அத்தனை உயிர்களுக்கும் பொருந்தாது. சில வகை மரணங்களில் இது நிச்சயமான உண்மை. அதனால் இதனை பொதுவான ஒரு சடங்காகச் செய்துவிட்டார்கள். அனைத்திற்கும் மேலாக, நீங்கள் பாசமும் பற்றும் கொண்டிருந்தவர் இறந்துவிட்ட பிறகும், அவருக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற உங்களது ஏக்கம் உளவியல் ரீதியாகத் தணிகிறது. ஒருவேளை, அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் கோபித்துக்கொண்டு, நீங்கள் அவருடன் பேசாமல் இருந்திருக்கலாம்; குடிப்பதற்கு ஒரு வாய் தண்ணீர் கேட்டபோது, கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நிச்சயமாக இறந்து போனவருக்கு நம்மால் ஏதாவது செய்ய இயலும். ஆனால் அதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல. இறந்தவரை தன் சொந்தமாக பார்க்காமல் ஒரு உயிராக உங்களால் பார்க்க முடிந்தாலே ஒழிய அவருக்கு உங்களால் எதுவும் செய்ய இயலாது. அதனால்தான் நாம் காலபைரவ கர்மா என்னும் ஒரு செயல்முறையை தொடங்கினோம். இறந்த 14 நாட்களில் நாம் அந்த உயிரைத் தொட முடியும். நம்மால் வேறு ஒரு பரிமாணத்தில் அந்த உயிருக்கு தேவையானதைச் செய்ய முடியும். இந்தக் கலாச்சாரத்தில் நாம் பிறப்பையும் இறப்பையும் மிகச் சரியாக புரிந்து கொண்டோம். அதனை சரியாக கையாளவும் செய்தோம். உணர்வு மேலோங்கி இருக்கும் மரண வீட்டில் உங்களால் ஒரு உயிரை சரியாக கையாள இயலுவதில்லை. இதுபோன்ற ஆன்மீக அறிவு சார்ந்த விஷயங்கள் அனைத்தும், உடல் கடந்த பரிமாணத்தில் வாழ்ந்த மனிதர்கள் அவர்களின் விழிப்புணர்வில் கண்டுணர்ந்து வழங்கிய ஒன்று. இதுபோன்ற முறைகளை உருவாக்கியவர்கள்தான் இந்தியக் கலாச்சாரத்தைக் கட்டமைத்தனர். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு மேல், இதுபோன்ற சடங்குகள் அனைத்தும் அவை கூறப்பட்ட காரணத்தின் புரிதலின்றி, திரிந்து உருமாறிவிட்டது. அதுபற்றிய அறிவு இல்லாமல் மக்கள் அற்பமான செயல்களைச் செய்யத் துவங்கிவிட்டனர். 

இறந்த பின் பாலூற்றுவது எதற்காக?

கொள்ளி போட வேண்டியது மூத்தவனா இளையவனா?

கேள்வி தாய் இறந்தால் இளைய பையன் ஈமக்கடன் செய்ய வேண்டும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. தந்தை இறந்தால் மூத்த மகன் ஈமக்கடன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள், இதைப் பற்றி விளக்க முடியுமா? சத்குரு: “ரூனானுபந்தம்” எனும் நினைவுப் பெட்டகம் நம் கலாச்சாரத்தில் ரூனானுபந்தம் என்றொரு வார்த்தை பயன்பாட்டில் இருக்கிறது. இந்த பந்தம் உடல் தொடர்பினால் ஏற்படும் பந்தம். மனதிற்கு நினைவாற்றல் இருப்பதுபோல், உடலிற்கும் நினைவாற்றல் இருக்கிறது. மனதின் ஞாபகத்திறனின் அளவிற்கு எல்லை இருக்கிறது, ஆனால் உடலின் நினைவாற்றலோ பிரமாதமானதாய் உள்ளது. உடல் விட்டுச் செல்லும் அந்த ஜீவன் சுகமாக செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இவற்றை அறிவியல் முறைப்படி உருவாக்கினர். எத்தனை எத்தனை தலைமுறைகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களும் இந்த உடல் ஞாபகத்தில் வைத்திருக்கிறது. இவை யாவும் உங்கள் மனதின் ஞாபகத்தில் இல்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் உங்களுடைய தாத்தாவின் மூக்கு உங்கள் முகத்திலும் உட்கார்ந்து கொண்டுதானே இருக்கிறது? ஏனெனில், உடலின் நினைவாற்றல் மிக ஆழமானதாய் உள்ளது. மற்றொரு தலைமுறையிடமிருந்து நமக்கு கடத்தப்பட்ட ஞாபகங்கள் மட்டுமல்ல நாம் எதைத் தொட்டாலும், எங்கு போனாலும் அந்த ஞாபகங்கள் இந்த உடலில் பதிந்துவிடுகின்றன. இந்த நினைவாற்றல் நம் உடலுடன் சிக்கிக் கொள்கிறது. மனதிற்கு இவைப் பற்றி புரியாவிட்டாலும் உடல் அதனை ஞாபகங்களாய் தனக்குள் பதித்துக் கொள்கிறது. இந்தப் பதிவுகள் ஏற்பட்டவுடன் அது உங்களுக்குள் வேறுவிதமாக வேலை செய்கிறது. இதனாலேயே நம் கலாச்சாரத்தில் ஒரு இடத்திற்கு போக வேண்டும், வேறு சில இடங்களுக்கு செல்லக்கூடாது என்று வரையறைகளை வகுத்து வைத்தனர். கோவிலுக்கு செல்லும் வழக்கமும் இவ்வாறான ஆழ்ந்த அறிவினால் உருவாக்கப்பட்டதுதான். அதனை சொல்லியும் கொடுத்தனர். நமக்கு தேவையான, பயனுள்ள ஞாபகங்களை மட்டும் நம் உடல் தக்க வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இவை. தேவையற்றதை கழித்துவிட வேண்டுமல்லவா? யார் கர்மா செய்வது? தாய், தந்தை, குழந்தை என்று உடல் தொடர்பால் ஏற்பட்ட ஞாபகங்களில் பல வகைகள் உண்டு. குடும்பம் என்றாலே உடல் தொடர்பால் ஏற்பட்ட பந்தம் என்றுதான் அர்த்தம். இதனாலேயே யாரோ ஒருவர் இறந்துபோனால் அவருக்கு உரிய கர்மங்களை செய்ய வேண்டும் என்று உருவாக்கி வைத்தனர். இறந்தவருடைய உடல் சார்ந்த ஞாபகம் யாருக்கு இருக்கிறதோ அவர் கர்மா செய்ய வேண்டும். உங்களுக்கு பெற்றோரை பிடிக்காமல் போனாலும் அவருக்கு கர்மம் செய்வதை நீங்கள் தட்டிக் கழிக்க முடியாது, அவருடைய மூக்கு உங்கள் முகத்தில் உட்கார்ந்திருக்கிறதே! அவருடைய தோல் உங்கள் மீது போர்த்தப்பட்டிருக்கிறது, இன்னும் அவருடைய பல குணங்கள் உங்களுக்குள் பதிந்திருக்கிறது. இவற்றையெல்லாம் நீங்கள் நினைத்தாலும் விட்டுவிட முடியாது. (சிரிக்கிறார்). அவரை நமக்கு பிடிக்காமல் போகலாம், அவரை பல ஆண்டு காலங்கள் கண்ணால் பார்க்காமல் போகலாம், ஆனால் அவர் உங்களுள் இருந்து வேலை செய்கிறார் அல்லவா? இதனால் அந்த ஒரு நபர் இறக்கும்போது அவர் சார்ந்த அத்தனை பந்தங்களையும் வெட்டிப் போடும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் நிலவி வருகிறது. இதனை மிகுந்த கவனத்துடன் கையாண்டனர். உடல் விட்டுச் செல்லும் அந்த ஜீவன் சுகமாக செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இவற்றை அறிவியல் முறைப்படி உருவாக்கினர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் நம் மனநிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஒருவர் இறந்தாலும் அவரை விடக்கூடாததற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் செய்கிறோம். இப்படி இறப்பை சரியாக கையாளாத ஒரு காரணத்தால் இன்றைய சமூகத்தில், பதின் பருவத்து சிறார்களின் மனங்களில் ஏற்படும் அதிகப்படியான குழப்பங்கள், மரணங்கள் யாவும் சம்பவிக்கின்றன. இறப்பை சரியாய் கையாள்வது மிக மிக அவசியம். இதுபோன்ற நிலைக்கு பல காரணங்கள் இருந்தாலும், இறப்பை சரியாக கையாளாததும் ஒரு முக்கிய காரணம். ஒருவர் இறந்த பிறகு… நம் கலாச்சாரத்தில், இறக்கும் உயிர் சும்மா போய் சேரட்டும் என்கிற நோக்கம் இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அவர் நம்முடனேயே தங்கிவிட வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டது. செத்தாலும் தந்தையின் குணம் மூத்த குழந்தையிடம் அதிகமாக இருப்பதைக் காண முடியும். விடக்கூடாது என்ற நிலையில் இருக்கிறோம். உயிர் இருக்கும் வரை நமக்கும் அவருக்கும் தொடர்புண்டு, அவர் இறந்துபோனால், அவருடனான சம்பந்தத்தை விட்டுவிட வேண்டும் என்று உணர்த்திச் சென்றனர். ஏனெனில், அந்த ஜீவன் போகும் இடத்திற்கும் உங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அந்த மனிதருக்கும் உங்களுக்கும் தொடர்பு இருந்தது, ஆனால் அந்த ஜீவனிற்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த உடலுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருந்தது, ஆனால் அந்த உயிருக்கும் உங்களுக்கும் தொடர்பேதும் இல்லை. அந்த நபருடைய எண்ணத்திற்கும் உணர்வுக்கும் உங்களுடன் தொடர்பு இருந்தது, ஆனால் இறந்த உயிருக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை. அதனால் எப்போது ஒரு மனிதர் உடலை நீக்கின்றாரோ அத்துடன் அவருடனான உறவையும் விடுத்து, முழுமையாய் அவரை விடுதலை செய்துவிட வேண்டும். அதனாலேயே அந்த மனிதரை எந்த வகையில் எல்லாம் விடுதலை செய்ய முடியுமோ, அவ்விதத்தில் எல்லாம் விடுதலை செய்தனர். இதை நீங்கள் சற்றே கவனித்துப் பார்க்க வேண்டும், நான் எதையோ சொல்லப் போக நீங்கள் தேவையில்லாத கற்பனை உலகிற்குள் பிரவேசித்துவிடுவீர்கள். அது பிரச்சனை! உங்கள் வீட்டில் 5 பிள்ளைகள் இருந்தால் இதனை நீங்கள் நிச்சயமாக கவனிக்க முடியும். ஒன்றிரண்டு என்றால் கவனிப்பது சற்று சிரமம்தான். தந்தையின் குணம் மூத்த குழந்தையிடம் அதிகமாக இருப்பதைக் காண முடியும். அதுவே மேலும் குழந்தைகள் வர வர குறைந்துவிடும். இப்படியே செல்லச் செல்ல கடைசி மகன் தாய் போல் ஆகிவிடுவான். அதிக பிள்ளைகள் உள்ள வீட்டில் இதனை நீங்கள் தெளிவாகக் காணலாம். அதற்காக அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு கவனிக்கத் துவங்க வேண்டாம் (சிரிக்கிறார்கள்). தந்தையுடைய தன்மை முதல் குழந்தையிடம் சற்றே அதிகமாக இருக்கும், போகப் போக அது குறைந்து போகும். யார் கொள்ளிபோடுவது? இதனாலேயே தந்தைக்கு முதல் மகனும், தாய்க்கு கடைசி மகனும் ஈமக்கடன் செய்ய வேண்டும் என்னும் வழக்கத்தை உருவாக்கி வைத்தனர். இளையவனுக்கு தாயின் தன்மை அதிகமாக இருக்கும், மூத்தவனுக்கு தந்தையின் தன்மை அதிகமாக இருக்கும். இது 90 சதவிகிதிம் உண்மை. பத்து சதவிகிதத்தாருக்கு இதுபோல் அமையப்பெறாமல் இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் மூத்த மகன் என்று வரும்போது தந்தையின் பற்று சற்று அதிகமாகவே இருக்கும். அதுவே சின்னவன் மேல் தாய்க்கு அபிரிமிதமான பாசம் மிகும். முதல் குழந்தை உருவாகும்போது தந்தையின் ஈடுபாடு மிக அதிகமாய் இருக்கும், புதிதல்லவா? இரண்டாம் குழந்தை பிறப்பதற்குள் அவனுக்குள் அது முடிந்துபோய்விடுகிறது (சிரிக்கிறார்கள்). இதனால் ஒரு தந்தைக்கு மூத்த பிள்ளையுடன் அதிகப்படியான பிணைப்பு ஏற்படுகிறது. மாறாக ஒரு தாய்க்கோ இளைய பிள்ளையுடன் பிணைப்பு ஏற்படுகிறது. அதனாலேயே இந்தக் கலாச்சாரத்தில் இதுபோன்ற ஒரு முறையை உருவாக்கி வைத்தனர்.

 கொள்ளி போட வேண்டியது மூத்தவனா இளையவனா? 

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்?

ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்? சத்குரு: இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும். மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல. இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல. எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது. மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

 இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்? /

யாளி

யாளி
ஒரு விசித்திரமான மிருகம்..
இந்தியாவின் தென்னக கோயில்களில் மட்டுமே சிலைவடிவில் காணக்கிடைக்கின்ற மிருகம் அது. கோயில்களில் பெரும்பாலும் கல் தூண்களில் எழும்பி நின்ற கோலத்தில் காணப்பெறும். யானையுமல்ல. சிங்கமும் அல்ல. பறவையைப் போன்றும் தெரியவில்லை.
கண்கள் உருண்டு திரண்டும், நீண்ட துதிக்கையும், கோரப்பற்களும், யானையைப் போன்ற அகன்ற காதுகளாயில்லாமல் சிறிய காதுகளை உடைத்ததாயும், நான்ற வாயும், கால்கள் கனமாகவும் அவற்றில் வலிமையான நகங்களும், வாலும் காணப்படும். இந்த விசித்திர சிற்பங்களை உற்றுப் பார்த்திருக்கிறீர்களா? இவ்வகைத் தூண்களில் தன் முன்னிரு கால்களை தூக்கி எழுந்து நின்றிருக்கும் யாளிகளின் பிடியில் யானையும், சிங்கமும் சிக்கியிருக்கும்.
அதாவது, யானையை விட உருவத்தில் மிகப்பெரிதும், சிங்கத்தை விட உருவத்திலும் வலிமையிலும் மிகுந்து தெரிகின்றன இந்த யாளிகள்.
ஒரு வேளை அப்படியொரு விலங்கு இருந்திருந்தால்..அது எவ்வாறு நடந்திருக்கும்? ஓடியிருக்கும்? கத்தியிருக்கும்? அதன் கத்தலுக்கு யானைகளும் சிங்கங்களும் ஏனைய விலங்குககளும் எப்படி பயந்திருக்கும்? அதன் உணவு என்னவாக இருந்திருக்கக்கூடும்? சிங்கங்களையும் யானைகளையும் ஒரே அடியில் வீழ்த்திவிடும் போல் உள்ளதே அதன் தோற்றம் !!?. அந்தச்சிலைகளின் மீது ஒரு மனிதன் அமர்ந்து, கடிவாளம் கொண்டு அதை வழிநடத்துவது போன்றுள்ளதே!!? அப்படியென்றால், யானைகளைப் போல் அவை மனிதனுக்கு கட்டுப்பட்டனவா ?!!.
போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்டனவா?
மகாபாரதக் காலத்தில் கூட ரத, கஜ, துரக, பதாதிகளின் படை வரிசைகள் தானே குறிப்பிடப் பெற்றிருக்கின்றன !! ?.
டைனசர்கள் போன்ற இனங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாய், அவற்றின் படிமங்கள் நமக்கு கிடைத்த பிறகே, அப்படிச் சில மிருகங்கள் வாழ்ந்திருக்குமென நாம் நம்பினோம். இல்லையா?
அதுபோல், நம் யாளிகள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. இல்லாமலா நம் நாட்டுச் சிற்பக்கலைஞர்கள் செதுக்கி வைத்தனர்? அல்லது யாளிகள் என்பன அச்சிற்பிகளின் அழகான கற்பனையா? இணையத்தில் தேடினால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 'லெமூரியா கண்டத்தில்' வாழ்ந்திருக்கலாம் என்று அநுமானமாய் சொல்கின்றன தகவல்கள். 
சரிங்க,
இவ்விலங்குகளுக்கு ஆதாரமாக திருமுறைகளுள் ஒன்றில் யாளியைப்பற்றிய வரிகள் வருகிறதே..!!
அந்தப்பாடல்...
"வகைதகு முத்தமிழ் ஆகரன் 
மறைபயில் திப்பிய வாசகன்
வலகலை வித்தகன் வானவில் மதிஅணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புக லிக்கர சாகிய
திருவளர் விப்ர சிகாமணி செழுமல யத்தமிழ்க் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரணம் மிடைவரு டைக்குலம் "யாளிகள்"
விரவிரு ளில்தனி நீள்நெறி வினைதுயர் மொய்த்துள வே மணி
நகைஎழி லிற்குற மா துன தருமை நினைக்கிலள் நீ இவள்
நசையின் முழுப்பழி ஆதல்முன் நணுகல் இனிக்கிரி வாணனே".
- பதினோராம் திருமுறை ( ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்)
மேலும் திருமுறைகளில் நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த திருஈங்கோய்மலைஎழுபது என்ற பாடல்களில்
"அரியும், உழுவையும், 'ஆளியுமே' ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் - சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே, கூற்றம்
திரியாமற் செற்றான் சிலம்பு".
"ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடுதொடரும் மாக்குறவர் - கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே, நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று".
இங்கு..முதல் பாடலில் அரி என்பது சிங்கத்தையும், உழுவை என்பது புலியையும் குறிக்கிறது. அதன் பின்னால் வரும் 'ஆளியுமே' என்பது எதைக்குறிக்கின்றது?
"ஆளி தொடர அரி தொடர" என்று துவங்கும் இரண்டாவது பாடலில் குறிக்கப்பெறும் ஆளி எது?
நம் மகாககவி சுப்ரமணிய பாரதி காளி மீது பாடிய தன் பாடல் ஒன்றில்...
" காளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும், 
வேளை யொத்த விறலும் - பாரில் - வெந்த ரேத்து புகழும், 
யாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும், 
வாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே ".
( * பாரதியார் யாளியை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் திருமுறைகளிலும் சங்க இலக்கியங்களிலும் வருவது..!!? ).
இவற்றின் மூலம் நாம் அவ்விசித்திர விலங்கு வாழ்ந்து மடிந்த இனம் என்று கொள்ளலாகுமா?
உலகில் ஆங்காங்கே பல நாடுகளில் சில விசித்திர மிருகங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அவைகளில் சில....
' சீனாவின் பறக்கும் பாம்பு போன்றும் முதலையின் முகம் போன்றும் நான்கு அல்லது ஆறு கால்களுடனும் நெருப்பினை கக்குவதாயும் காணப்படும் (ட்ராகன்) " Dragon " ..இதையே ஜப்பானில் 'டாட்டஸ்' என்கின்றனர்.
' அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில்...நெருப்பில் இருந்து உயிர்த்து எழும் ( ஃபீனிக்ஸ் ) " phoenix " பறவை.
' ஒற்றைக் கொம்புடன் கூடிய தெய்வீக பறக்கும் குதிரை " Unicorn ".
' நம்நாட்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் பாலிலிருந்து நீரை தவிர்த்துவிட்டு பாலை மட்டும் பருகும் " அன்னப்பட்சி " இப்படியாக மேலும் சில மிருகங்கள், உயிரினங்கள்.
அந்த வரிசையில் நமது யாளிகள் அழகோ அழகு. அவற்றை அடித்துக்கொள்ள வேறெதுவும் இல்லையென்பது என் அபிப்ராயம்.
யாளிகளிலும் சில வகைகள் உள்ளன. 
* யானையைப் போன்ற துதிக்கையுடனுள்ள "யானை யாளி".
* ஆடு போன்ற முகம் கொண்ட " மகர யாளி " .
* சிங்கத்தின் முகத்தினைக் கொண்ட " சிம்ம யாளி " .
* நமது கடவுளர்களின் பிரபைகளில் காணப்படும் பறவைகள் போன்று இரண்டு கால்களுடன், அழகிய சிறு இறக்கைகள் மற்றும் தோகையுடனும் காணப்படுகின்றன சில வகைகள்.
* எலிகளைப் போன்று குள்ள அளவிலும் காணப்படும் யாளிகளும் உண்டு.

'யாளி' என்ற பெயரில் தமிழில் ஒரு நாவல் வெளிவந்துள்ளதாக கூட தெரிகிறது. சொல்ல முடியாது.. ஒருவேளை வருங்காலத்தில் யாளியின் படிமங்கள் இங்கே கிடைத்தன..அங்கே கிடைத்தன என்று தகவல்கள் தெரியவரும்போது...?
அதுவரை..கற்பனையோ.!...வாழ்ந்து காணாமல் போன மிருகமோ.. !....
காலகாலத்துக்கும் நாம்போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் அந்தக் கற்சிலைகள். தெய்வீகங்கள் பொங்கி நிற்கும் கலைகள்.
அவையனைத்தும் அற்புதங்கள். ஆச்சரியங்கள்.

Tuesday, May 26, 2015

ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாம வரலாறு,

ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாம வரலாறு,
திரிலோக சஞ்சாரியும் தமிழ் மொழியை உண்டு பண்ணித் தமிழ் வளர்த்தவரும் சிறந்த சித்தரும் ஆகிய அகத்திய முனிவர் ஒருமுறை இமயமலைக்குச் சென்றார். அங்கு ஒரு இடத்தில் சில ரிஷிகள் தலைக்கீழாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டார்.
அகத்தியர் அவர்களை பார்த்து "ரிஷிகளே தாங்கள் ஏன் இவளவு கடுமையான தவத்தைச் செய்து கொண்டு இருக்கீர்கள் ? காரணம் என்ன? " என்று வினவினார்.அதற்க்கு அந்த ரிஷிகள் பூலோகத்தில் எங்கள் பரம்பரையில் அகத்தியன் என்று ஒருவன் இருக்கிறான். அவனுடைய மூதாதையர் நாங்கள்.
அவனது ஊழ்வினை (ப்ராப்தம்) அவன் திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகா வேண்டும். இல்லறத்தால் உண்டாகும் கஷ்டங்களையும் இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பதாகும். அனால் அவனோ பிரமச்சரிய விரதம் பூண்டு திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறான்.
அவன் அனுபவிக்க வேண்டிய கஷ்ட நஷ்டங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் என்றனர். உடனே அகத்தியர் அந்த ரிஷிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி, அந்த அகத்தியன் என்பவன் நான் தான். எனக்காக தாங்கள் துன்புற வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்கிறேன், ஒரு குழந்தைக்குத் தந்தையும் ஆகிறேன், இது சத்தியம் என்று வாக்குறுதி அளித்தார். உடனே அந்த ரிஷிகள் தவத்தை விட்டு விட்டு அகத்தியருக்கு ஆசி வழங்கினர். பின்னர் மகிழ்ச்சியுடம் பிதுர் லோகம் சென்றனர்.
அன்றிலிருந்து அகத்தியர் தனது பிரமச்சரிய விரதத்திற்கு குந்தகம் விளைவிக்காத, தன்னை அனுசரித்து நடக்ககூடிய பெண் எங்கு இருக்கிறாள் என மூவுலகையும் சுற்றி தேடி வந்தார். அப்படித் தேடி வரும்போது பிரம்ம லோகத்திற்கும் சென்றார். அங்கு பிரம்ம தேவர் விஷ்ணு மாயையை ஓர் அழகிய கன்னிகையாக ஆக்கி வைத்திருந்ததைப் பார்த்தார். பிரம்மாவை வணங்கி விட்டுப் பூலோகத்திற்கு வந்து விட்டார். இது இப்படி இருக்க.......
விதர்ப்ப தேசத்தில் கவேரன் என்னும் அரசன் குழந்தை வேண்டிப் பல ஆண்டுகள் 
தவம் செய்தார். பலன் இல்லை. கடைசியாக மனைவியுடன் சேர்ந்து சிவ பெருமானைக் குறித்து கடுமையாகத் தவம் செய்தார். சிவபெருமான் அவர்முன் தோன்றி "இப்பிறவியில் உனக்கு புத்திர பாக்கியம் 
இல்லை. ஆதலால் வீணாக உன் உடலை வருத்திக் கொண்டிருக்காதே.
தவத்தை விட்டுவிடு" என்றார். கவேரரும் தவத்தை விட்டுவிட்டு மனச் சோர்வுடன் வாழ்ந்து வந்தார். வயதும் ஆகிவிட்டது. இந்நிலையில் அகத்தியர் பெண் தேடிக்கொண்டு விதர்ப்ப மன்னன் கவேர ரிஷியிடம் வந்தார். கவேரரும் அவரது மனைவியும் அகத்தியர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்போது அவர்களது சோகத்தைத் தனது சித்தியினால் அறிந்த அகத்தியர் "புத்திர பாக்கியம் உண்டாவதாக!" என்று ஆசீர்வதித்தார். இருவரும் திடுக்கிட்டு "ஸ்வாமி, எங்களுக்கு இப்பிறவியில் புத்திர பாக்கியம் கிடையாது என்று சிவபெருமானே கூறிவிட்டார், அப்படி இருக்க தாங்கள் புத்திர பாக்கியம் பெருக என ஆசீர்வதித்து உள்ளீர்கள்.
இது நடக்க கூடியதா,? நாங்களும் மிகுந்த வயோதிகர்கள் ஆகிவிட்டோம் , தங்கள் வார்த்தை பொயிக்கலாமா? என்று கண்ணீர் மல்க வினவினர்..அகத்தியர் புன்முறுவலித்து கூறுகிறார். "தாங்கள் கூறியது அனைத்தும் 
உண்மை. ஆனால் எனது தபோ வலிமையால் நான் இப்போது ஒரு பெண் குழந்தையை கொடுக்கின்றேன்.
இவளைத் தக்க வயதில் எனக்கே திருமணம் செய்து தர வேண்டும்" என்று கூறி தனது இரு கரங்களையும் முன் நீட்டி கண்மூடி, பிரம்ம லோகத்தில் விஷ்ணு மாயையாக உள்ள கன்னிகையைத் தனது தவ வலிமையால் அப்போது பிறந்த குழந்தையைப் போல் ஆக்கி கவேர அரச-அரசியின் கையில் கொடுத்தார். இவ்விஷயத்தை தெரிந்துக்கொண்டு தேவர்கள் அக்கொழந்தையைப் பார்க்க வந்தனர்.
அக்குழந்தை பெண்ணிற்குரிய 64 லக்ஷணங்களும் நிறைந்து மிக அழகாகத் திகழ்வதைப் பார்த்து லோபாமுத்ரா (அறுபத்து நான்கு லட்சணங்களும் குறையாதவளே) எனப் பெயரிட்டு அழைத்தனர். கவேர அரசரின் மகளானதால் மக்கள் அவளைக் காவேரி என்று அழைத்தனர். காவேரி நாளொரு மேனியும் பொழுதொரு 
வண்ணமுமாக வளர்ந்து வந்தால். இது நாள் வரையும் குழந்தை இல்லாததால் சோகமாக இருந்த கவேரரும் அவரது மனைவியும் மிக்க சந்தோஷத்துடன் அவளது மழலையையும், தவழ்ந்து நடப்பதையும் கேட்டும் பார்த்தும் ரசித்தனர்.
விஷ்ணு மாயையே பிறந்து இருப்பதால் மிக விரைவிலேயே மழலை மாறி மிகத் தெளிவாக பேச ஆரம்பித்தாள், காவேரி.காவேரிக்கு ஏழு வயதாயிற்று. விதர்ப்ப நாடும் வளம் கொழிந்து விளங்கிற்று. ஒரு நாள் ஸ்ரீ சர்யானந்தநாதர் என்னும் ஸ்ரீவித்யா குருவானவர் வந்து அரசனிடம் " நான் சாதுர்மாஸ்ய விரதம் இருக்க விரும்புகிறேன், ஆதலால் உன்னுடைய நந்தவனத்தில் ஒரு குடிசையமைத்து என் கருத்தறிந்து பணிகள் செய்ய ஒரு பணியாளையும் ஏற்படுத்தி தருவாயாக!" என்று கூறினார். அரசர் சிந்தித்தார்.
சர்யனந்தநாதரோ மிகவும் கோபக்காரர். நந்தவனத்தில் பர்ணகசாலை அமைத்து கொடுத்துவிடலாம். இம்முனிவர் கருத்துணர்ந்து பணி செய்ய ஆட்களுக்கு என்ன செய்யலாம்? நாமே செய்யலாம் என்றால் அதிக வயசாகிவிட்டது. அரசிக்கும் வயதாகி விட்டது. இக்கட்டில் மாட்டிக் 
கொண்டோமே என்ன செய்வது என மனவருத்தத்துடன் மிகவும் சோகமாக இருந்தார்.
இவ்வாறு தாய் தந்தையர் சோகமே உருவாக இருப்பதைப் பார்த்த லோபாமுத்திரை அவர்களைப் பார்த்து ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்? இது நாள் வரை தங்களை நான் இவ்வாறு பார்த்தது இல்லையே ? என்ன காரணம்? என வினவினாள்.அரசர் "காவேரி! கண்மணி! நமது நந்தவனத்தில் தவம் இயற்ற ஒரு முனிவர் வந்துள்ளார். அவரது மனம் அறிந்து பணியாற்ற ஒரு பணியாளும் கிடைக்கவில்லை.
வயோதிகர்களாகிய எங்களாலும் இயலாது. என்ன செய்வது? அவருக்கோ சீக்கிரம் கோபம் வந்து சாபமிட்டுவிடுவார். அதுதான் பயமாக உள்ளது " என்றார்.உடனே லோபாமுத்திரை "நான் உள்ளேன், ஏன் கவலைப் படுகிறீர்கள்? நான் அவர் மனமறிந்து பணிவிடைகள் செய்து அவரை மகிழ்விப்பேன் " என்றால். "எங்களுக்குத் தெரியும், நீ மற்ற குழந்தைகள் போல அல்ல. தெய்வ குழந்தை, இருந்தாலும் இவ்வளவு காலம் குழந்தை இல்லாதிருந்து 
இப்போதுதான் உன்னால் அக்குறை நீங்கி மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
நீ அவருக்கு பணி செய்யும் பொது சிறு பிள்ளைத் தனமாக ஏதாவது தவறு செய்து விட்டால் அவர் சபித்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது" என்றனர்.ஒரு குறையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியவாரே இரண்டு சேடியருடன் முனிவரின் தவச் சாலைக்கு சென்று அவர் பாதம் பணிந்து நல்ல பணி செய்ய என்னை வாழ்த்தி அருள்செய்வீர் என்று பணிகள் செய்ய ஆரம்பித்தால்.
காவேரிதேவியின் பணிவிடையால் மனம் மிக மகிழ்ந்த சர்யானந்தநாதர் லோபமுத்திரைக்கு ஸ்ரீவித்தையை உபதேசித்து இவ்வித்தையை செபித்து வந்தால் உனக்கு எல்லா சிரேயசும் உண்டாகும், எல்லா சித்திகளும் பெற்று நினைத்த உருவம் பெறலாம். இவ்வித்தை ஞானத்தை அளிக்கக்கூடியது என்று ஸ்ரீவித்தையின் பெருமையைச் சொல்லி ஆசீர்வதித்து சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்து அரசன் அரசியை ஆசீர்வதித்து சென்றார். அன்றிலிருந்து லோபாமுத்திரை ஸ்ரீவித்தையை இடைவிடாது ஜெபித்து சகல சித்திகளையும் ஞானத்தையும் பெற்றுச் சிறந்து விளங்கினாள்.
காவேரி தேவிக்கு 16 வயது ஆயிற்று. அகத்தியர் விதர்ப்ப தேசத்து கவேர அரசரிடம் வந்து உனது பெண்ணைக் கன்னிகா தானம் செய்து கொடு என்று கேட்டார். அரசனும் அரசியும் மகளைப் பிரிந்து இருக்க வேண்டுமே, பதினாறு வருடம் வளர்த்துக் காடும் மழையும் சுற்றித் திரியும் இம்முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தால் இது நாள் வரையும் ஒரு துன்பமும் சிறிதும் அறியாத இவள் கஷ்டப்பட வேண்டுமே என்று மனம் வருந்தினர்.காவேரி அவர்கள் மனதைத் தேத்தி என்னைத் திருமணம் செய்துக்கொள்ளதானே குழந்தை இல்லாத உங்களுக்கு அக்குறையை போக்கி என்னைக் குழந்தையாகக் கொடுத்தார்? அப்போது சம்மதித்து விட்டு இன்று மனவருத்தம் அடைந்து கண்ணீர் விடுவது சரியல்ல. எனக்கு ஒரு குறையும் வராது.
தாங்கள் அவருக்கு வாகளிதபடி என்னைக் கன்னிகாதானம் செய்து கொடுங்கள் என்று கூறி அவர்கள் மனதைத் தேற்றினாள். அகத்தியர் லோபாமுத்திரை திருமணம் சிறப்பாக நடந்தேறியது. ஆடை ஆபரணங்களைக் களைந்து மர உரி தரித்து அகத்தியருடன் லோபாமுத்திரை புறப்பட்டாள். கண்களில் நீர்மல்க கவேரரும் அவரது மனைவியும் சேடியரும் நாட்டு மக்களும் வழியனுப்பி வைத்தனர்.
அவ்விருவரும் பாரத நாடு முழுவதும் உள்ள தளங்களுக்கு சென்று மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவற்றை தரிசித்து நீராடிக் கடைசியாக காஞ்சிபுரம் வந்தடைந்தனர். காஞ்சிபுரத்தில் பகவன் ஹயக்ரீவர் சாட்சாத் காமேஸ்வர-காமேஸ்வரியிடம் ஸ்ரீவித்தை உபதேசம் பெற்று காமட்சியம்மனுக்கு ஸ்ரீவித்யா உபாசனை முறைப்படி நவாவரண பூஜை ஸ்ரீவித்யா ஜபம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம த்ரிசதீ நாம அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்து கடைசியில் லோபாமுத்திரையையே சுவாசினி பூஜா செய்து 
வந்தார்.
இது அநேக வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஹயக்ரீவர் செய்யும் பூஜையைத் தரிசிக்க முப்பது முக்கோடி தேவர்களும் வருவார்கள்.காஞ்சிபுரத்திற்கு வந்த அகத்தியர் காமாட்சியாம்மனைத் தரிசிக்க சென்றார். வழியில் வந்த தேவர்கள் அவரைப் பார்த்து நீங்கள் எவ்வளவுக் பாகியவான்.
உங்கள் மனைவி லோபாமுத்திரையை சாட்சாத் விஷ்ணு பகவானாகிய ஹயக்ரீவர் தினந்தோறும் தான் செய்யும் பூஜையின் கடைசியில் அம்பிகையாகப் பாவித்து பூஜை செய்கிறார். அவரும் அப்பூசையை ஏற்று அவரை ஆசீர்வதிக்கின்றார். என்ன அதிசயம்? பூஜையின் முடிவில் மனைப் பலகையைப் போட்டதும் லோபாமுத்திரை வருகிறார். பூஜை முடிந்ததும் மறைந்துவிடுகிறார் என்றனர்.
அகத்தியர் இல்லை இல்லை. அது என் மனைவி இல்லை. நீங்கள் வேறு யாரையோ பார்த்து என் மனைவி லோபாமுத்திரை என்று தவறாக எண்ணி உள்ளீர்கள். எனது மனைவி திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து ஒரு நிமிடம் கூட என்னைப் பிரிந்து இருந்தது கிடையாது. அவள், ஒரு மனைவி கணவனின் சொல்லைத் தட்டாமல் கணவன் குறிப்பறிந்து எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டுமோ அவ்வாறே நடந்து கொள்கிறாள். நீங்கள் கூறுவது தவறு என்று மறுத்தார்.
தேவர்கள் இல்லை இல்லை நாங்கள் கூறுவது சரிதான். தாங்களே நேரில் வந்து பாருங்கள் என்று கூறினார். என்ன ஆச்சரியம் !!!! தேவர்கள் கூறியது போலவே பூஜையின் முடிவில் சாட்சாத் லோபாமுத்திரையே நேரில் வந்து ஹயக்ரீவரால் கொடுக்கப்பட்ட குலாம்ருதத்தை சிறிது பருகிவிட்டு மீதத்தை கொடுக்க, அதை ஹயக்ரீவர் பய பக்தியுடன் வாங்கி அருந்தி, எல்லோருக்கும் பிரசாதமாக கொடுத்தார். அதை அகத்தியர் உற்று உற்று பார்த்து "ஆமாம் லோபாமுத்திரையேதான்".
இது அநேக வருடங்களாக நடைபெறுவதாக தேவர்கள் கூறினார்கள். ஆனால் அவளோ நம்மை விட்டு ஒரு நிமிடம் கூடல் பிரியாமல் கூடவே தான் இருந்தால். சித்தி பெறுவதற்காக ஜபமோ, தவமோ செய்து நான் ஒரு நாளும் பார்க்கவில்லையே? இது எப்படி முடியும்? என ஆச்சரியப்பட்டார்.
பரணக சாலைக்கு வந்து லோபாமுத்திரையிடம் நீ ஹயக்ரீவர் செய்யும் சுவாசிநீ பூஜைக்கு போகிறாயா? சித்தி எப்படி உண்டாயிற்று ? நீ தவமோ, த்யானமோ, ஜெபமோ செய்து நான் பார்க்கவே இல்லையே ? என்று கேட்டார். அதற்க்கு லோபாமுத்திரை "எனக்கு 7 வயது இருக்கும் போது எங்கள் நாட்டிற்கு சர்யானந்த நாதர் என்னும் முனிவர் சாதுர்மாஸ்ய விரதத்திற்கு வந்தார். அவருக்கு மனம் குளிரப் பணிவிடைகள் செய்தேன்.
அதனால் மகிழ்ந்த அவர் ஸ்ரீவித்யா மந்திரத்தை உபதேசித்தார். அன்றிலிருந்து இடைவிடாது அம்மந்திரத்தை ஜெபித்து வருகிறேன். அம்மந்திர மகிமையால் எனக்கு நினைத்த உருவம் எடுக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது என்றார். நானும் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். படித்துள்ளேன். எல்லா மந்திரங்களையும் விட மிக உன்னதமான மந்திரம் ஸ்ரீவித்தையே என்ரும் .
ஆனால் நீ அம்மந்திரத்தின் மகிமையால் எம் முயற்சியும் இன்றி சித்திகளையும், மேன்மைகளையும் பெற்றுள்ளாய் என்பதை நேரடியாகக் காண்கிறேன். எனக்கு அந்த மந்திரத்தை உபதேசிக்கிறாயா? என கேட்டார். மனைவியிடத்தில் கணவன் உபதேசம் பெறுவது சரியல்ல. மனைவிதானே சொன்னாள் என்று சிரத்தை இருக்காது. அது மட்டுமல்ல.
தங்களுக்கு உபதேசிப்பதர்க்காகவே இங்கு ஹயக்ரீவர் காத்துக்கொண்டிருக்கிறார். அம்பிகை கட்டளை. தங்களுக்கு உபதேசித்த பிறகுதான் அவருடைய இவ்வுருவம் மறைந்து வைகுண்டத்திருக்குச் செல்ல வேண்டும் என்பது. ஆகவே அவரிடம் சென்று உபதேசம் பெறுங்கள் என்று சொல்லிவிட்டார். சில நாட்கள் கழிந்தன. லோபாமுத்திரை அகத்தியரைப் பார்த்து "என்ன? உபதேசம் பெற்றுக் கொண்டீர்களா? என்ன என்ன உபதேசம் செய்துள்ளார்? இன்னும் எவ்வளவு பாக்கி உள்ளது?" என்று கேட்டார். என்ன? உபதேசமா? கூட்ட நெரிசலில் அவர் சமீபம் செல்லவே முடியவில்லை. நான் வேறு குள்ளன்.
எல்லோரும் வணங்கியதும் கை அசைத்து உட்கார சொல்லிவிடுகிறார். அவ்வளவுதான். கிட்டவே போக முடியவில்லை என்றார் அகத்தியர். நாளை நீங்கள் சென்று எல்லோரும் அமர்ந்த பின்னரும் நின்று கொண்டே இருங்கள். ஹயக்ரீவர் ஏன் நிற்குரீர்கள் என கேட்பார். அப்போது லோபாமுத்திரை அனுப்பினாள் என்று கூறுங்கள் என்று உபதேசம் பெற வழி சொல்லி அனுப்பினாள் காவேரி.
லோபாமுத்திரை சொல்லியவாரே அகத்தியரும் தேவர்கள் எல்லோரும் அமர்ந்த பின்னரும் நின்றுக்கொண்டே இருந்தார். ஹயக்ரீவர் பார்த்து ஏன் நிற்கின்றீர்? உட்காரும் எனக் கூறியபோது, லோபாமுத்திரை அனுப்பினாள் என்றார். அப்படியா? வாரும் வாரும், உங்களுக்காகத்தானே இத்தனை நாட்கள் காத்துக் கொண்டுள்ளேன்.
முதலிலேயே சொல்லி இருந்தால் இதற்குள் எல்லாவற்றையும் உபதேசித்து விட்டு வைகுண்டம் சென்றிருப்பேனே? பரவாயில்லை இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன் என்று கூறி உபதேசிக்க ஆரம்பித்தார். என்ன என்ன உபதேசித்தார் என்பதை அகத்தியர் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மகாத்மியம் என்ற வரலாற்றில் பட்டியலிட்டுக் கூறுகின்றார்