புதுமணத் தம்பதிகள், பச்சிளம் குழந்தைக்கு ஆரத்தி எடுப்பது ஏன்?
ஆரத்தி எடுப்பதற்காக பயன்படுத்தும் பொருட்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர். ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும் போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்றுவிடும். இதனை நீர் வலம் விடுதல் என்று கூறுவர்.
பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர்.
புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும் காலத்தில் காத்து, கருப்பு உள்ளிட்ட தீவினைகள், சில கெட்ட சக்திகள், கண் திருஷ்டி உள்ளிட்டவையும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக அவர்களுடன் வந்திருக்கலாம் எனக் கருதப்படும் தீய சக்திகளை அகற்ற திருஷ்டி கழிக்கப்படுகிறது.
இதேபோல் வீட்டின் வாரிசை சுமந்து வரும் தாயின் மீதும், குழந்தையின் மீதும் கண் திருஷ்டி இருக்கும் என்பதால் அந்த குழந்தை முதன் முதலாக தந்தை வீட்டிற்கு வரும் போது ஆரத்தி எடுக்கின்றனர். இதனை கவுரவிக்கும் விதமாகவும் கருதலாம்.
ஆரத்தி எடுக்கும் போது பயன்படுத்தப்படும் நீர், நெருப்பு (கற்பூரம்), இலை (வெற்றிலை) ஆகியவற்றுக்கு எந்த தீய சக்தியையும் விரட்டும் ஆற்றல் உண்டு. திலகம் இடும் பழக்கமும் சங்க காலம் முதலே இருந்து வந்தததும் குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment