கண்ணீர் விட்டழுத கண்ணன்!
மகாபாரத போரில் அர்ஜுனனின் மகன் அபிமன்யு இறந்ததை எண்ணி அர்ஜுனன் மிகவும் அழுது கண்ணீர் வடித்துக் கொண்டு "இனி நான் என் உயிர் வாழ வேண்டும்?' என்று அரற்றிக்கொண்டு இருந்தானாம். அப்பொழுது அவன் தலையில் எதோ நீர்த்துளிகள் விழவே மேலே நோக்கி பார்த்தால் அவனுக்கு கீதையை உபதேசித்த கண்ணன் அங்கு அழுதுகொண்டு நின்றாராம். அவர் கண்ணீர்தான் அர்ஜுனன் தலையில் விழுந்ததாம்.
அப்பொழுது அருஜுனன் கண்ணனை பார்த்து "நான்தான் சாதாரண மனிதன், மரணம் இன்பம் துன்பம் போன்ற உலக நிலைகளில் இருந்து விடுபடாதவன், எனதுமகனை இழந்ததால் அழுகிறேன்; ஆனால் நீர் தெய்வமாயிற்றே! இதை எல்லாம் கடந்தவர் அல்லவா? நீர் ஏன் அழுகிறீர்? என்று கேட்டாராம்.
அதற்க்கு கண்ணன் "இப்பொழுதுதான் உனக்கு பல மணிநேரம் செலவு செய்து கீதையை உபதேசம் பண்ணினேன். உலகில் உள்ள எல்லாமே மாயை, எதுவும் யாருக்கும் சொந்தமில்லை, இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொரு வருடையது ஆகும். எனவே எதற்க்காகவும், எந்த ஒரு இழப்பிற்க்காகவும் நாம் கண்ணீர் சிந்த வேண்டிய அவசியம் இல்லை என்று மிக சிரமபட்டு போதித்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் அது பயனற்று போய்விட்டதே. அனைத்தையும் நேரடியாக கேட்ட நீயே அதை உடனே மறந்துவிட்டு உன் மகனுக்காக இவ்வளவு கண்ணீர் வடிக்கிறாயே, இந்த மனுக்குலத்தை எப்படி திருத்த? என்பதை எண்ணித்தான் நான் அழுகிறேன்" என்றாராம்!
மனிதனுக்கு என்னதான் நல்ல கருத்துக்களை எடுத்து சொன்னாலும் அது மிக விரைவிலேயே மறந்து போய்விடும். "உங்களை சபிப்பைவரை ஆசீர்வதியுங்கள்" என்ற வசனத்தை எத்தனை முறை படித்தாலும் ஒருவர் சபித்தால் உடனே அவர்களை திருப்பி சபிக்கத்தான் மனிதன் முயல்வானே தவிர உடனே அவனை ஆசீர்வதிக்கும் அளவுக்கு அவனது மனது இடம்கொடுப்பதில்லை. ஆகினும் நாம் சிரத்தைஎடுத்து
முயன்று இறைவனின் கட்டளைகள்படி செய்ய பிரயாசப்பட வேண்டும்
"மாயை மாயை எல்லாம் மாயை" என்று பிரசங்கி சொன்னது போல இந்த உலகம் ஒரு மாயை, இது நிலையானது அல்ல, இங்குள்ளது எல்லாமே ஒருநாளில் அழிந்துவிடும், இங்குள்ள யாரும் நிலையானவர் அல்ல, என்பதை அனைவரும் அறிந்து உலகப் பற்றினை துறந்து தேவனின் மேல் பற்றுகொண்டு அவரின் சித்தம் ஒன்றை செய்வதுதான் நோக்கமாக கொண்டு வாழவேண்டும் என்பதை போதிக்கும் நல்ல கருத்தாக இதை எடுத்துகொள்ளலாம்!

No comments:
Post a Comment