ஞாயிலார் மதிற்றொண்டை நாட்டு மேன்மை
நண்ணுமயிலாபுரியின் வேளாண் டொன்மை
வாயிலார் மலைவில்லா னடியே போற்றி
மறவாமை தலைநின்ற மனமே செம்பொற்
கோயிலா வுயர்ஞானம் விளக்கா நீராக்
குலவியவா னந்தமன்பே யமுதாக் கொண்டு
தாயிலா னிருசரண நிகழ வேத்துந்
தன்மையா ரருள்சேர்ந்த நன்மை யாரே.
தொண்டை நாட்டிலே, திருமயிலாப்பூரிலே, வேளாளர் குலத்திலே, வாயிலார்நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனை ஒருபொழுதும் மறவாத மனமாகிய ஆலயத்துள் இருத்தி, ஞானமாகிய திருவிளக்கை ஏற்றி, ஆனந்தமாகிய திருமஞ்சனமாட்டி, அன்பாகிய திருவமுதை நிவேதித்தலாகிய ஞானபூசையை நெடுங்காலஞ்செய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்
No comments:
Post a Comment