Sunday, July 29, 2012

பரதன்

< ஒரு பூனைக்குட்டியிடம் நம் குழந்தை விளையாடினால் கூட, ""டேய் பார்த்து...கையை கடிச்சுட போகுது,'' என்று எச்சரிக்கை செய்கிறோம். ஆனால், நம் பாரத தேசத்துக்கு அந்தப்பெயர் வரக்காரணமாக இருந்த அந்தச் சிறுவன் சிங்கக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு மகாராஜா...அங்கு வந்தார். அவரது பெயர் துஷ்யந்தன். துர்வாச முனிவரின் சாபத்தால், தன் மனைவி யாரென்று தெரியாமல் நினைவை இழந்தவர். கண்வமகரிஷியின் வளர்ப்பு பெண்ணான சகுந்தலையை மணம் செய்தவர். மாபெரும் வீரர். அசுரர்களுடன் போர் வரும் காலங்களில், அவரையும் உடனழைத்துச் செல்வான் தேவேந்திரன். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவர் அன்று, காட்டுவழியே விமானம் ஒன்றில் வந்த போது, சிங்கக்குட்டியுடன் விளையாடும் சிறுவனைக் கண்டார். ""ஆகா! எனக்கு வீரன் என்ற பட்டம் இருப்பதே தவறு. நான் பகைவர்களைத் தோற்கடித்திருக்கிறேன். ஆனால், இந்தச் சிறுவனைப் போல சிங்கத்துடன் விளையாடும் அளவுக்கு தைரியம் பெற்றிருக்கவில்லையே! இவன் யார்! விசாரித்து செல்லலாமே!'' விமானம் தரை இறங்கியது. ""தம்பி! நீ யார்! சிங்கத்துடன் விளையாடுகிறாயே! பயமாக இல்லையா! சிறுவன் கலகலவென சிரித்தான். ""நாம் மனிதர்கள். சிங்கத்தை விட ஓரறிவு அதிகமுள்ளவர்கள். நாம் பயப்படலாமா?'' சிறுவனின் பதில் மகாராஜாவை சிந்திக்க வைத்தது. ""இவன் வீரன் மட்டுமல்ல, புத்திசாலியும் கூட...யார் பெற்ற பிள்ளையோ! அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்போது சலங்கை சத்தம் பலமாகக் கேட்டது. சில பெண்கள் ஒரு சேர வந்தார்கள். ""பரதா! கிளம்பு! முனிவர் மரீசி உன்னை அழைக்கிறார்,''. ஆம்...அவனது பெயர் பரதன். ""சற்று பொறுத்து வருகிறேன். ஆமாம்... அம்மா எங்கே?'' ""அன்னையார் நீராடச் சென்றுள்ளார். சற்று நேரத்தில் வந்து விடுவார்...'' என்றவர்கள் அவனது கையைக் கவனித்தனர். ""பரதா! உன் கையில் கட்டியிருந்த ரøக்ஷ (மந்திரக்கயிறு) எங்கே?'' சிறுவனும் அப்போது தான் கவனித்தான். ""ஐயையோ! அதை எப்படியாவது தேடிப்பிடியுங்கள். ரøக்ஷயைத் தொலைத்தால், முனிவர் என்னைத் தொலைத்து விடுவார்,''. சிறுவன் பதட்டத்துடன் அங்கும் இங்கும் தேடினான். பணிப்பெண்களும் தேடினர். மன்னர் இதைக் கவனித்து, அவரும் தேடத் துவங்கினார். ஒரு செடியின் அடியில் கிடந்த ரøக்ஷயை எடுத்து பெண்களிடம் நீட்டி, ""இதுவா பாருங்கள்,'' என்றனர். அந்தப்பெண்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ""ஐயா! தாங்கள் யார்? இந்தக் கயிறை இந்தச் சிறுவனின் தந்தையும், தாயும் தவிர மற்றவர்கள் தொட்டால் பாம்பாகி விடும் என முனிவர் சொல்லியிருக்கிறார். அப்படியானால், நீங்கள் இவனது தந்தையா?'' இதற்குள் அவனது தாய் அங்கு வர, ராஜா அதிர்ச்சியுடன் பார்த்தார். ""சகுந்தலா''...அவளும் அதிர்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டாள். ""சில ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்த்த போது, நீ யாரென்றே தெரியவில்லை என்றீர்கள். இப்போது நினைவு வந்து விட்டதா?'' துர்வாசரின் சாபத்தால் ஏற்பட்ட விளைவுகளை சகுந்தலாவிடம் விளக்கினார். அந்த ராஜா தான் துஷ்யந்தன். அவருக்கும் சகுந்தலைக்கும் பிறந்த வீரத்திருமகனான பரதனே நம் ஆண்டை ஆண்ட மாபெரும் சக்கரவர்த்தி. அவரது பெயரால் தான் நம் தாய்த்திருநாடு "பாரதம்' எனப்படுகிறது.

No comments:

Post a Comment