எங்கு சென்றாலும் நல்ல செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் வல்லவராக ஆஞ்சநேயர்
விளங்கினார். அவரைப் பற்றி ஒருவர் பேசுகிறார் என்றாலே, அவருக்கு நல்லநேரம் பிறந்து
விட்டதாக அர்த்தம். முதன்முதலில் சுக்ரீவனுக்கு ராமனின் வரவைத் தெரிவித்ததன் மூலம்,
சுக்ரீவனின் மனைவி அவனுடன் சேரக் காரணமானார். அசோகவனத்தில் சிறை இருந்த சீதைக்கு
கணையாழியைக் கொடுத்து ஆறுதல் அளித்ததன் மூலம், ராமனுடன் அவள் சேரக் காரணமானார்.
கிஷ்கிந்தையில் இருந்த ராமருக்கு சீதையின் சூளாமணியை அளித்து நற்செய்தி சொன்னதன்
மூலம், அவரது உயிர் பிரியாமல் பாதுகாத்தார். அவர் வாயுவின் பிள்ளை என்பதால், பலரது
மூச்சுக்காற்று தொடரச் செய்வதில் சிரமமா என்ன! இந்திரஜித் விடுத்த நாகபாணத்தால்
லட்சுமணன் மயங்கிக் கிடந்தபோது, தக்கசமயத்தில் சஞ்சீவி மலையைத் தாங்கி வந்து உயிர்
கொடுத்தார். ராவண சம்ஹாரம் முடிந்தபின் "ஸ்ரீராமஜெயம்' என்னும் வெற்றிச் செய்தியை
சீதைக்கு எடுத்துச் சொல்லி மகிழ்ச்சிக்கடலில் திளைக்கச் செய்தார். ராமனைச் சகோதரனாக
ஏற்றுக் கொண்ட குகனிடம், ராமனின் வருகையை எடுத்துரைத்தார். அயோத்தின் எல்லையில்
நந்திக்கிராமத்தில் இருந்த பரதனிடம் வனவாசம் முடிந்து ராமன் நாடு திரும்புவதை
எடுத்துரைத்தார். இப்படி ராமாயணத்தில் ஆஞ்சநேயர் செல்லும் இடமெல்லாம் நல்லசெய்தியை
வழங்குவதைக் காணலாம்.
No comments:
Post a Comment