மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது தங்கள்
வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர். தங்களுடன்
வந்துள்ள அனைவரும் உடனடியாக சாப்பிடச் சொல்லுங்கள். இங்கே உணவு வகை
கொட்டிக்கிடக்கிறது.
சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவாப போய் விடும் என்றனர். சிவன் அவர்களிடம் இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ என்று கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார் திகைத்தனர். மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே என வெட்கிநின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர்.
திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான் அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன்.
அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான். ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம் மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது. உடனே அங்கு பாய்ந்தோடு என கட்டளையிட்டார். குண்டோதரனிடம் நீர் வரும் திசை நோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள் என்றார்.
இதுவே வைகை ஆனது. கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால் வேகவதி எனப்பட்டது.

No comments:
Post a Comment