Friday, June 14, 2013

சப்தாவதாரம்'

விஷ்ணு "தசாவதாரம்' எடுத்திருக்கிறார் என்று தானே கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் "சப்தாவதாரம்' எப்போது எடுத்தார் என்று கேட்டால், அதற்கு வாயு புராணத்தில் பதில் இருக்கிறது.
"சப்தம்' என்றால் "ஏழு'. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறுதி வெற்றி தேவர்களுக்கே கிடைப்பதால், அசுரகுருவான சுக்கிராச்சாரியாருக்கு கோபம் ஏற்பட்டது. அசுரர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தேவகுருவுக்கு தெரிந்த சில போர் நுட்பங்கள், தனக்கும் தெரிந்தால் அசுரர்களின் பலம் கூடுமென தீர்மானித்தார். அந்த பலத்தை வேண்டி ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தார்.
இதையறிந்த தேவர்கள் அவரை தவம் செய்ய விடாமல் பலவகையிலும் துன்புறுத்தினர். இதையறிந்த சுக்கிராச்சாரியாரின் தாயும், பிருகு மகரிஷியின் மனைவியுமான அதிதி தேவர்களை ஒடுக்க எண்ணினாள். தேவர் தலைவன் இந்திரன், அவளது முயற்சிக்கு பல இடையூறுகளை செய்தான். மனம் கலங்காத அதிதி, இந்திரனின் முயற்சிகளை முறியடித்தாள். தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட, அவர் சக்ராயுதத்தால் அதிதியின் தலையைத் துண்டித்தார்.
கோபமடைந்த பிருகு மகரிஷி, ""ஒரு பெண்ணின் தலையை அறுத்த நீ, பூலோகத்தில் ஏழு முறை மனிதனாகப் பிறக்கக் கடவாய்' என சாபமிட்டார். இதையடுத்து தத்தாத்ரேயர், பரசுராமர், ரகுநாதன், வியாசர், கிருஷ்ணன், உபேந்திரன், கல்கி என்ற ஏழு அவதாரங்களை அவர் எடுத்தார். தசாவதாரங்களிலுள்ள இரண்டு அவதாரங்கள் சப்த அவதாரத்திலும் இடம் பெறுகின்றன

No comments:

Post a Comment