கருடபுராணம்
பதினெட்டு புராணங்களில் ஒன்று கருடபுராணம். எழுதியவர் வியாசர். பெயரைப் பார்த்ததும், விஷ்ணுவின் வாகனமான கருடனைப் பற்றிய வரலாறு இதில் இருக்கிறதோ என்று எண்ணி ஏமாந்து விட வேண்டாம். வாழ்வுக்குப் பின் உயிர்கள் எங்கே போகின்றன? சொர்க்கம் நரகம் உண்டா? அங்கே என்னென்ன சுகதுக்கத்தை உயிர் அனுபவிக்கிறது என்பது பற்றி விவரிப்பதே இந்நூல். அப்படியானால், கருடபுராணம் என்று பெயர் வைப்பானேன்! இந்த விஷயத்தை ஸ்ரீமன் நாராயணன், கருடனுக்கு முதலில் உபதேசம் செய்தார். கருடன் கேட்ட புராணம் என்பதால், அது கருட புராணமாயிற்று. அதை பவுராணிகரான (புராணக்கதை வல்லுநர்) சூதமுனிவர், மற்ற ரிஷிகளுக்கு உபதேசித்தார். பொதுவாக, இதை வீடுகளில் வாசிப்பதில்லை. ஆனால், துக்கவீட்டில் இதை வாசித்தால், கேட்பவர்கள் சொர்க்கம் செல்வர் என்பது ஐதீகம். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய நூல் இது என்பது மட்டும் நிஜம். தவறுகள் குறைய இந்த நூல் வழிவகுக்கும்.

No comments:
Post a Comment