Thursday, August 22, 2013

வாழும் மகான்களின் படங்களை வழிபடலாமா?

ஸ்ரீராமன் இல்லாத நிலையில், தசரதரின் ஈமச்சடங்கை நிறைவேற்ற, மாமன் வீட்டுக்குச் சென்றிருந்த பரதனை வரவழைத்தார்கள். அவன் வரும் வழியில், நகர எல்லையில் இருந்த ஒரு மண்டபத்தில் தங்க வேண்டியிருந்தது. புறப்படுவதற்குத் தாமதமாகும் என்று அறிந்ததால், மண்டபத்தைச் சுற்றிப் பார்க்க உள்ளே நுழைந்தான் பரதன். அங்கு அவனது முன்னோரான அரச பரம்பரையினரின் சிலைகள் இருந்தன. பார்த்துக் கொண்டே வந்தவன், கடைசியில் தசரதரின் பதுமையைப் பார்த்தான். அவன் மனம் திக்கென்றது. அருகில் இருந்த காவலாளியிடம், இங்கிருக்கும் சிலைகள், இறந்தவர்களுக்கு மட்டும்தானா? உயிரோடு இருப்பவருக்கும் உண்டா? என்று விசாரித்தான்.
இளவரசே! இறந்தவர்களுக்கு மட்டும்தான் சிலை எழுப்பப்படும் என்று பதில் வந்தது. ஆகையால், பண்டைய மரபில்... வாழ்ந்து கொண்டிருப்பவருக்குப் படங்கள் இருக்காது! சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறியவன், வளர்ந்து பெரியவனான பிறகு, வீட்டுக்குத் திரும்புகிறான். வீட்டில் நுழைந்ததும், மாலையால் அலங்கரிக்கப்பட்டு சுவரில் தொங்க விடப்பட்டிருக்கும் தந்தையின் படத்தைப் பார்த்ததும், அவர் இறந்துவிட்டதாகவே அவன் மனம் எண்ணும். வாழ்ந்து கொண்டிருப்பவரைப் படம் எடுத்து மாலை அணிவித்து வழிபடும் முறை, புது நாகரிகத்தின் வெளிப்பாடு. கடவுளின் அவதார வடிவங்களை வழிபட்டனர், நம் முன்னோர். பிற்காலத்தில், வாழ்ந்துகொண்டிருக்கும் மகான்களையும் இறைவடிவமாகப் பாவித்து வழிபடுகிறார்கள். மாறுபட்ட மனித சிந்தனை, மரபை மீறி எதையும் செய்யும். அதற்கு வரம்பு கிடையாது.

No comments:

Post a Comment