Thursday, August 22, 2013

பொறுமைசாலிகள் சக்தியில்லாதவர்களா!

படித்தால் மட்டும்ஒருவனை பண்டிதன் என்று சொல்ல முடியாது. பொறுமை, விடாமுயற்சி, தர்மத்தை பின்பற்றுதல் ஆகிய குணங்களைக் கொண்டவனே நல்ல பண்டிதன்.
*மனதில் ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதைஅடைவதற்கான தகுதியும், முயற்சியும் இருந்தால் மட்டுமே எண்ணியதை பெற முடியும்.
*பிறர் கேட்டால் மட்டுமே பதில் சொல்லுங்கள். தானாகப் போய் வலிய எதையும் பிறருக்குச் சொல்லாதீர்கள்.
*ஒரு செயலைச்செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அதை ஆரம்பித்த பிறகு தயக்கம் கூடாது. மனதை வசப்படுத்தி முழுமூச்சாக செயலில் ஈடுபடுங்கள்.
*யார் ஒருவர் எல்லாரது நன்மையையும் விரும்புகிறாரோ, அவர் பசியில் உணவாய்இருக்கிறார்.
*கலக்கம் இல்லாத மனம் உடையவனாக இருங்கள். போற்றிப் புகழ்ந்தாலும், பழி தூற்றினாலும் சமபாவத்தில் இருப்பவனே சிறந்தவன்.
*இழிந்த செயல் மூலம் செல்வம் ஈட்ட முயலாதீர்கள். எல்லாம் தனக்குத் தெரியும் என்று ஒருபோதும் கர்வப்படுவது கூடாது.
*தன்னுடைய கடமையைச் செய்யாமல், காட்டில் காயும்நிலவாகவும், கடலில் பெய்யும் மழையாகவும் இருக்கிறான். அவனால் யாருக்கும் லாபமில்லை.
*பகைவனிடம் நட்பு பாராட்டுவதோ, நண்பனைப் பகைத்துக் கொண்டு கோபம் கொள்வதோ புத்திசாலியின் செயல் ஆகாது.
*நம்முடைய பலம், பலவீனம் இரண்டையும் சீர்தூக்கிப் பார்ப்பதே அறிவுள்ள செயல். நற்செயல்களைச் செய்வதில் தாமதம் கூடாது.
*ஒருவன் தன்னைச்சேர்ந்தவர்களுக்காக பாவச் செயல் செய்தாலும், அதற்கான பாவத்தை முழுமையாக அவனே அனுபவித்தாக வேண்டும்.
*ஆயுதத்தை உபயோகித்தால் ஒருவன் மட்டுமே இறப்பான். ஆனால், வேண்டாதஆலோசனையை வழங்கினால் ஒரு நாடே அழிந்துவிடும்.
*உலகம் பொறுமையுள்ளவனை சக்தியில்லாதவன் என்று நினைக்கலாம். ஆனால், அதை ஒரு குறையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
*பிறரின் பொருளுக்கு ஆசைப்படுவது, அன்பு காட்டுபவரை அவமதிப்பது, வஞ்சகமாக பிறரை ஏமாற்றுவது ஆகிய குணங்களால் ஒருவன் நரகத்தை அடைவான்.
*அதிக தூக்கம்,பயம், சோம்பல், முயற்சியின்மை,பரபரப்பு, குரோத மனப்பான்மைஆகியவற்றால்ஒருவனிடமுள்ள செல்வம் அனைத்தும் கரைந்துவிடும்.
*நல்லெண்ணம், பேச்சில் இனிமை, இரக்கசிந்தனை, உள்ளத்தில் அமைதி கொண்ட மனிதராக வாழுங்கள்.
*இன்பதுன்பத்தை சமமாக கருதவேண்டும். இதனால், எதைக் கண்டும்சந்தோஷப்படவோ, துக்கப்படவோ வேண்டியிருக்காது.
*உலகில் வல்லவன் என்று கூட பெயர் எடுத்து விடலாம். ஆனால், நல்லவன் என்ற பேர் பெறுவது எளிதல்ல.  வல்லமையும், நற்குணமும்ஒரு சேர இருப்பதேஉயர்வானது.
-மகாபாரத விதுரர்

No comments:

Post a Comment