ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். செல்லும் வழியில் சீதை அடையாளமாக தன் ஆபரணங்களை வழியில் வீசியெறிந்தாள். ராமன் லட்சுமணருடன் நாலாபுறமும் தேடி அலைந்தார். அப்போது கிஷ்கிந்தையில் ஒளிந்து வாழ்ந்த சுக்ரீவனையும், அவரது அமைச்சரான அனுமனையும் சந்தித்தார். ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். சுக்ரீவன் அப்பகுதியில் சிதறிக் கிடந்த சீதையின் காதணியான குண்டலம், பாதச்சிலம்பு ஆகியவற்றை ராமனிடம் கொடுத்தார். லட்சுமணரிடம் ராமர்,லட்சுமணா! இவற்றை அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டார். அவரோ, அண்ணா! அன்றாடம் நான் அண்ணியை வணங்கும் போது, அவரின் பாதச்சிலம்பை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால், அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்காததால் குண்டலத்தை அடையாளம் தெரியவில்லை , என்று பதிலளித்தார். சீதை மீது லட்சுமணன் வைத்திருந்த மரியாதையை அறிந்த ராமரின் மகிழ்ச்சி கலந்த வேதனை அடைந்தார்.
No comments:
Post a Comment