Monday, September 23, 2013

ஸ்ரீ ஆஞ்சநேயரை பஞ்ச பூதங்களை வென்றவர் என்று சொல்வது ஏன்?


ஸ்ரீ ஆஞ்சநேயரை பஞ்ச பூதங்களை வென்றவர் என்று சொல்வது ஏன்?

* அவர் வாயுகுமாரன் என்பதனால் காற்றை வென்றவர் ஆனார்.
* இராம நாம சக்தியால் சமுத்திரத்தை தாண்டியதனால் நீரை வென்றவர் ஆனார்.
* பூமாதேவியான சீதாபிராட்டியின் பூரண அருளை பெற்றதனால் நிலத்தை வென்றவர் ஆனார்....
* இலங்கையில் வாலில் வைத்த தீயால் இலங்காதகனம் செய்ததனால் நெருப்பை வென்றவர் ஆனார்.
* வானத்தில் நீந்திடும் ஆற்றல் உடையவரானதால் ஆகாயத்தை வென்றவர் ஆனார்.

இப்படி ஐம்பூதங்களையும் அடக்கிய ஆஞ்சநேயர் ராமா என்ற இரண்டு எழுத்தில் அடங்கி விடுகிறார். அந்த ராம நாமத்தை யார் முழுமனத்தோடு சொல்கிறார்களோ அவர்களுக்கும் ஆஞ்சநேயர் அடங்கி விடுகிறார்.

No comments:

Post a Comment