Tuesday, September 24, 2013


 
 
சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?

ஆன்மீகத்தின் பெயரால் உலகில் எத்தனையோ மார்க்கங்கள் உருவாகி விட்டன. சைவம், வைணவம், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், சமணம், பெளத்தம், சாங்கியம், சீக்கியம், கிறித்துவம்,இஸ்லாம், திபேத்தியம்... இப்படி எண்ணற்ற மார்க்கங்கள்

எது உண்மையான முக்தியைக் கொடுக்கும் ?...

ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையோரை குழப்பும் விசயம் இது.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்த்தால் இவற்றை இரண்டே இரண்டாக வகுத்து விடலாம்.
(1) இறைவனை உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளிமார்க்கம்,
(2) இறைவனை இல்லை என்று மறுக்கும் இருள்மார்க்கம்

உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளி மார்க்கத்தை சித்தாந்தம் என்று பொதுவாய் அழைக்கலாம்.

இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.

இந்த உடலை மெய் என்று போற்றுவது சித்தாந்தம்

இந்த உடலை பொய் என்று போற்றுவது வேதாந்தம்.

இந்த உலகம், சூரியன்,கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட அண்ட சராசரம் அனைத்தும் உண்மை என்கிறது சித்தாந்தம்.

அத்தனையும் உண்மையல்ல, மாயையே என்கிறது வேதாந்தம்.

அது என்னும் பிரம்மம் நீயாக இருக்கிறாய்! என்று உள்ளே காட்டுவது சித்தாந்தம்.

நீ அதுவாய் இருக்கிறாய் என்று வெளியே தேடச் சொல்வது வேதாந்தம்

’அவன் கால்பட்டு அழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே!’ என்று அருணாகிரிநாதப்பெருமான் பாடியதுபோல், ’கர்மவினையைக் கடவுள் நினைத்தால் கணப்பொழுதில் அழிக்கலாம்!‘ என்கிறது சித்தாந்தம்.

'கர்ம வினையை யாரலும் அழிக்கமுடியாது, அதை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்!’ என்பது வேதாந்தம்.

நாம் மனது வைத்தால் இந்த ஒரே பிறவியில் முயன்று முக்தி பெறலாம்! என்கிறது சித்தாந்தம்.

பல பிறவிகள் எடுத்துப் படிப்படியாய்த் தான் முக்தியை அடைய முடியும் !’ என்கிறது வேதாந்தம்.

உள்ளே கடவுளைப் பார்க்கலாம் என்கிறது சித்தாந்தம்.
‘உலகையே கடவுளாகப்பார்’ என்று உபதேசிக்கிறது வேதாந்தம்.

’தொண்டு செய்தால் கண்டு கொள்வார்கள் மகான்கள்!’ என்கிறது சித்தாந்தம்.

தொடர்ந்து கடும்பயிற்சிகள், தவ முயற்சிகள், கடும் வைராக்கியம்,கடும் ஒழுக்கம் தேவை என்கிறது வேதாந்தம்

No comments:

Post a Comment