Friday, October 25, 2013

பால் குடம் எடுப்பது ஏன்

பால் குடம் எடுப்பது ஏன்

பால்குடம் எடுப்பது ஏன் என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது.

"ஒருவன் பால் குடம் எடுக்கிறேன் என்று பிரார்த்தனை செய்துகொண்டு அதனை செய்கின்றபோது, குடத்தை சுத்தம் செய்வதுபோல, தனது மனதையும் சுத்தப்படுத்துகிறான். அதனை பக்தியுடன் தனது சிரசின் மீது வைத்துக்கொண்டு தன்னை மறந்த நிலையில் ஆலயத்துக்கு செல்கிறான்....

இதனை தத்துவரீதியாக பார்க்கிறபோது, குடம் என்றால் மனித சரீரம். கீழே போட்டால் குடம் உடைந்துவிடும். மனது கெட்டால் மனிதன் அழிந்து விடுவான்.

இப்படி பால்குடம் எடுக்கிற பக்தனுக்கு, ஆண்டவனுக்காக வேண்டிக்கொண்ட பிரார்த்தனை என்ற சத்தும், அதனை சுமப்பதால் ஏற்படும் சித்தும், அபிஷேகத்தால் ஏற்பட்ட திருப்தி என்ற ஆனந்தமும் கிடைக்கிறது. இது அவன் நினைத்துள்ள நல்ல எண்ணங்களை, நல்ல காரியங்களை நடத்தி வைத்துவிடுகிறது.

No comments:

Post a Comment