Sunday, March 2, 2014

மனம் ஓயாதிருக்க, பணியை நீயாக மேற்கோள்

குரு ஒருவரிடம் வந்த இளைஞன் ஒருவன், ஐயா! எனக்கு அடிக்கடி தீய எண்ணங்கள் தோன்றுகின்றன. நான் அவற்றை விட்டு விலக முயற்சிக்கிறேன். முடியவில்லை! என்றான். அவன் பேச்சிலிருந்தே அந்தக் கிராமத்தில் அவன் வேலை எதுவும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொண்டார் குரு. சரி! பக்கத்துக் கிராமத்துக்குச் சென்று நான் சொல்பவரை சந்திக்கவும். இரண்டு வாரங்களுக்குப் பின் என்னை வந்து பார்! என்று சொல்லி அனுப்பிவைத்தார். குறிப்பிட...்ட காலத்துக்குப் பிறகு வந்த இளைஞன் உற்சாகமானவனாகத் தெரிந்தான். என்ன நடந்தது? என்று கேட்டார், குரு நீங்கள் சொல்லி அனுப்பியவரிடம் போய்ச் சேர்ந்த நிமிடத்திலிருந்தே ஏகப்பட்ட வேலைகள். மாற்றி மாற்றி அடுத்தடுத்து வேலைகள் கொடுத்துக் கொண்டேயிருந்தார். நானும் <உற்சாகமாக எல்லா வேலைகளையும் செய்துகொண்டே வந்தேன். சோம்பியிருக்கவில்லை. அதனால் என் மனதில் எவ்வித தீய எண்ணமும் தோன்றவேயில்லை! என்று சந்தோஷமாகச் சொன்னான். குரு புன்னகையுடன், ஓய்வு கொண்ட மனதில்தான் ஒட்டடைபடியும். மனம் ஓயாதிருக்க, பணியை நீயாக மேற்கோள். அது எல்லோருக்கும் நன்மைத்தரக் கூடியதாக இருந்தால் உன் மேன்மை சிறக்கும்! என்றார்.

1 comment:

  1. அருமையான பதிவுகள். மிக்க நன்றி.

    ReplyDelete