Saturday, June 14, 2014

கடவுளுக்கு உருவம் உண்டா? இல்லையா

ராமகிருஷ்ண பரமஹம்சரை காண பக்தர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அவர்கள் கேட்கும் விளக்கங்களுக்கு, தெளிவான பதில்களை அளித்து திருப்திப்படுத்துவார். ஒரு சமயம் ராமகிருஷ்ணரை பார்ப்பதற்காக நெடுந்தொலைவில் இருந்து பக்தர் ஒருவர் வந்திருந்தார்.

அந்த பக்தர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். 'சுவாமி! கடவுளுக்கு உருவம் உண்டா? இல்லையா?, உருவம் இருக்கிறது என்றால் எப்படி இருப்பார்?' என்று கேட்டார்.

அதற்கு ராமகிருஷ்ணர், 'இறைவன் உருவம் உடையவர், உருவம் இல்லாதவர் ஆகிய இரண்டு தன்மைகளிலும் காணப்படுகிறார். அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல.

அத்துடன் இறைவன் இன்ன உருவினன் என்று அவனை ஒரு கட்டுக்குள் அடக்க முடியாது. நீ என்னவாக இறைவனை பார்க்கிறாயோ, அவ்வாறே அவன் காட்சி தருகிறான்' என்று பதிலளித்தார்

1 comment: