Sunday, January 10, 2016

தெரிந்து கொள்வோம் ....

தெரிந்து கொள்வோம் ......
பொய் பேசினால் தோஷம் வரும். நம்மையறியாமலேயே பாவங்கள் சேரும். எப்படிப் பாவங்கள் சேரும் தெரியுமா? பஞ்சமகா பாதகங்கள் பெரிது என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கெல்லாம் கூடப் பரிகாரம் உண்டு; கழுவாய் உண்டு என்கிறது புறநானூறு.
வேதம்வல்ல அந்தணர்களைக் கொல்லக்கூடாது; பெண் கொலை புரிவது பாவம்; குழந்தைகளை அழிப்பது கொடும் பாவம். ஆனால் இந்தப் பாவங்களையெல்லாம் விடக் கொடுமையானது பொய் சொல்வது என்கிறது திருப்பனந்தாள் புராணம்.
"பொன்ற வான்அந்தணர் பெண் புதல்வரைக்
கொன்ற பாதகத்தில் கொடும் பொய்..."
என்பது செஞ்சடை வேதிய தேசிகர் வாக்கு.

1 comment:

  1. ஜயா வணக்கம் எனக்கு ஆன்மீக விடயத்தில் பல சந்தேங்கள் உள்ளன. உங்களிடமிருந்து பதிலை எதிர்பாக்கின்றேன் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி என்ன?

    ReplyDelete