Sunday, January 10, 2016

சபரி மலை பக்தர்களுக்கு கருப்பு ஆடை ஏன்?

சபரிமலைக்கு மாலை அணிகின்றவர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலையிட்டுக் கொள்வதும் ஏன், வேறு ஏதேனும் நிறம் கொண்ட மாலை அணிவதால் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படுமோ என்று பக்தர்கள் கேள்வி எழுப்புவதுண்டு.
ஆச்சாரங்கள் எப்போதும் விஞ்ஞானத்துடன் பின்னி பிணைந்திருப்பவை. அதனை அனுசரித்து செயல்பட்டால் மட்டுமே பலனும் கிடைக்கும். சபரிமலைக்கு செல்லும்போது சில பிரதான ஆசாரங்களை கடைபிடித்தாக வேண்டும். அது இல்லாமல் போனால் சாதாரண மலையேறுவது போன்றாகிவிடும்.
கறுப்பு ஆடை அணிந்து ஐயப்ப மந்திரங்களை உச்சரித்தால் உடன் பலன் உண்டாகும். மனிதருள் சாதகமான மற்றும் பாதகமான சக்திகள் உள்ளன. இதனை தேவ, அசுர குணங்கள் என்று கூறுவர். மனிதரில் பாதகம் எனப்படும் எதிர்மறையான சிந்தனைகள் மாறி மனசாந்தியும், சமாதானமும் கிடைக்க ஜெபம் நல்லதாகும்.
ஜெபிக்கும்போது கறுப்பு ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலை அணிவதும் ஜெபத்தின் சக்தியை அதிகரிக்க செய்யும். ருத்ராட்ச மாலை அணியும்போது 108, 64, 54, 48 என்ற அடிப்படையில் அதன் எண்ணிக்கை இருக்க வேண்டும். ருத்ராட்ச மாலை அணியும் முன்னர் சிவன் கோயிலிலோ, ஐயப்பன் கோயிலிலோ பூஜை செய்து அணிய வேண்டும்.

No comments:

Post a Comment