Sunday, January 10, 2016

விரதத்தை மனைவி மட்டுமே அனுஷ்டிக்க வேண்டுமா?

இன்றைய உலகில் மனிதர்களுக்குள் எத்தனையோ பிரச்சினைகள்  ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் கணவன், மனைவி உறவு சார்ந்த விஷயமாகும்.கணவன், மனைவி உறவு மேம்பட ஆன்மிக ரீதியாக எத்தனையோ விதமான பரிகார விரத முறைகள் கூறப்படுகின்றன.உதாரணமாக குழந்தை இல்லாதோர் குறிப்பிட்ட விரதம் இருக்க வேண்டும் என்றால். கணவன்,மனைவி இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்.குழந்தை
பிறப்பில் கணவன், மனைவி இருவருக்குமே பங்கு உள்ளது. அப்படி இருக்க விரதம்
போன்றவைகளில் கணவன் ஒதுங்கி இருக்க மனைவி மட்டுமே அதிகாலை நீராடி பூஜை
செய்து விரதம் இருக்கின்றனர். இப்படி விரதம் இருப்பதால் அந்த விரதம்
முழுமையான பலனை தந்து விடாது.அலுவலக பணிகள், தொழில் ரீதியான
பிரச்சினைகள் என்று இது போல விரதங்களை ஆண்கள் பெரும்பாலும்
அனுஷ்டிப்பதில்லை. இருமணம் இணைந்து திருமண பந்தத்தில் இணைவது அனைத்திலும்
மனைவியுடன் இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே. வரலட்சுமி விரதம், கேதார
கெளரி விரதம் என விரதங்களில் பெண்கள்தான் அதிகம் இறை வழிபாடுகளில்
ஈடுபடுகின்றனர்.இந்த விரதங்களை ஆண்களும் அனுஷ்டிப்பதால் இறையருள்தான் கிடைக்குமே தவிர அதனால் எதுவும் தவறு நிகழ்ந்து விடபோவதில்லை.அவரவர்
குடும்ப பிரச்சினைகளுக்கு கடவுள் வழிபாடு, விரதம், பரிகாரம் போன்றவைகளை
இருவரும் இணைந்து செய்வதே சிறப்பளிக்கும். கடவுளின் ஆசியை முழுமையாக
பெற்றுத்தரும்.

No comments:

Post a Comment