Sunday, January 10, 2016

இந்து மதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களும்… உண்மைகளும்

உலகத்தில் உள்ள மிக பழமையான மதங்களில் ஒன்றாக விளங்குகிறது இந்து மதம். இயற்கையாகவே, பல நூறாண்டுகளாக பல சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் அது ஆளாகியுள்ளது.


சில முறைகேடுகளுக்காக இந்த மதத்தை சிலர் தப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பண்பாட்டு மாற்றங்கள், ஜாதிகளின் மேலாதிக்கங்கள் போன்ற காரணங்களால் இது காலா காலமாக தொடர்ந்து வருகிறது. ஆனால் உண்மைக்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. 
உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்!!! உலகத்தில் மிக சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான மதங்களில் ஒன்றாக இந்து மதமும் கருதப்படுகிறது. இதனை நல்ல விதமாகவும், கெட்ட விதமாகவும், பலர் இதனை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் நம் மனதில் இந்து மதத்தைப் பற்றி தவறான எண்ணங்கள் குடி கொண்டிருக்கிறது. 
இந்த தவறான புரிதல் வளர்ந்ததற்கு, இந்து மதத்தின் சாரத்தை வேண்டுமென்றே அல்லது தெரியாமல் பதிவு செய்ய மறந்த மேற்கத்திய அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் ஒரு காரணமாக விளங்குகிறது. இந்து மதத்தை தங்களின் மேற்கத்திய புரிதலின் படி, சில கருத்துக்களை விவரிக்க அவர்கள் முயற்சித்ததால் தான் இது ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. இதனால் இந்து மதத்தைப் பற்றி பல விதமான குழப்பங்களும், தவறான புரிதல்களும் ஏற்பட்டுள்ளன. 
இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா? ஆனால் இந்து மதத்தையும், அதன் கருத்துக்களையும், அதன் முழு உளக்காட்சியின் வாயிலாக பார்க்கையில், இதுநாள் வரை நாம் நினைத்ததற்கு மாறாக, இந்து மதமே நமக்கு மொத்தமாக வித்தியாசமாக தெரியும்.

இந்து மதம் ஒரு மதமா? 
இந்து மதம் ஒரு மதமல்ல. அது வாழ்க்கைக்கான ஒரு பாதை. அது ஒரு தர்மம். உண்மையான கண்ணோட்டத்தில் பார்த்தால், தர்மம் என்பது மதமாகாது. உங்கள் செயல்களை ஆளும் சட்டமே தர்மம். 
தனிப்பட்ட ஒரு நபரால் மட்டும் இந்து மதம் பிரச்சாரம் செய்யப்படாததால், அதற்கென கோட்பாடுகள் கிடையாது. அதனால் அதனை ஏற்றுக் கொள்ளவோ அல்லது அதனை புகழ் பெறச் செய்யவோ, அதனை யாரும் பின்பற்ற தேவையில்லை. சொல்லப்போனால் சிந்து பகுதிக்கு குடி பெயர்ந்தவர்களையே இந்து என அழைக்கிறோம். சிந்து மக்களை பெர்சியர்கள் தான் இந்துக்கள் என அழைத்தார்கள். 
இந்து மதம் என்பது பல வித நம்பிக்கைகள், தத்துவ மற்றும் கலாச்சார எண்ணங்களின் கலவையாகும்.
இந்துக்களுக்கு 33 கோடி கடவுள்கள் இருக்கிறார்கள் 
இந்து மதத்தை பற்றிய மற்றொரு புகழ் பெற்ற தவறான புரிதல் இது. வேதங்கள் 33 ‘கோடி’ கடவுள்களை குறிக்கிறது. ‘கோடி’ என்ற வார்த்தை உச்சத்தை அல்லது சிறந்து விளங்குபவையை (உச்ச கோடி அல்லது நிம்ன கோடி) குறிப்பிடுகிறது. இங்கு கோடி என்றால் எண்ணிக்கை கோடியல்ல. 
அதனால் அதற்கு அர்த்தம் – நம்மிடம் வல்லமை படைத்த 33 கடவுள்கள் (8 வசு + 11 ருத்ரா + 12 ஆதித்யா + 2 ஆகாயம் மற்றும் பூமி = 33 கடவுள்கள்) இருக்கிறார்கள் என சமயத்திரு நூல்கள் கூறுகிறது.
இந்து மதம் ஜாதி அமைப்பை வாதாடுகிறது 
நாம் சொன்னதை போல் இந்து மதம் என்பது வாழ்க்கைக்கான வழியாகும். கண்டிப்பாக அது ஜாதி போன்ற பிரிவினையை உண்டாக்கும் அமைப்பிற்காக ஆதரிப்பதில்லை. பழங்கால வர்ணா அமைப்பின் படி தான் ஜாதிகள் உருவாயிற்று. 
அதன் படி, சமுதாயத்தில் தொழில் ரீதியான அடிப்படையில் தான் ஜாதிகள் பிரிக்கப்பட்டது. மேலாதிக்கத்தின் படி, ஒரு குறிப்பிட்ட வர்ணா வேகத்தை பெற தொடங்கியதும், ஜாதியில் உள்ள பிரிவினை அமைப்பு உருவாயிற்று. ஆரம்பித்த நாள் முதல் இவ்வகையான அமைப்பை இந்து மதம் ஒரு போதும் ஆதரித்ததில்லை.
உருவ வழிபாட்டை பரப்புகிறது இந்து மதம் 
உருவ வழிபாடு என்பது இந்து மதத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகும். கடவுளை உணர்வதற்கான கீழ் மட்ட அல்லது முதல் படியே உருவ வழிபாடு என வேதாந்தம் கருதுகிறது. தெய்வீகத்தின் பௌதிக வடிவமே சிலை. மனிதர்களை ஒருமுனைப்படுத்த இது உதவும். 
மேலும் கடவுளை உணர்வதற்கான அடுத்த கட்டத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும். உருவ வழிபாட்டில் ஈடுபடுவதால், மனதளவில் மந்திரம் ஜெபிக்கும் அடுத்த கட்டத்திற்கு ஒருவர் செல்கிறார். அப்படியே தெய்வீகத்தை உணரும் கடைசி நிலை வரை செல்கிறார். ஒரு முடிவு என்பதை குறிப்பதற்காகவே இந்த சிலைகள். சிலை என்பது பார்வைக்கு தென்படும் ஆதரவு; 
நமக்கு உதவும் கடவுளை ஒருமுனைப்படுத்தி வணங்க வேண்டும் என்பதை நினைவு கூறும் விதம்.
இந்துக்கள் பசு மாடுகளை வணங்குகிறார்கள்
இந்த உலகில், தாய்வழி மரபை கொண்ட உயிரினமாக மாடுகளை சித்தரித்துள்ளார் மகாபாரதத்தை எழுதிய வேத வியாச முனிவர். அதிக அளவிலான தியாகத்தை குறிக்கிறது பசு மாடு. தன்னால் முடிந்த அனைத்தையும் வாரி வழங்கி, அதற்கு கைமாறாக தண்ணீர் மற்றும் புற்களை மட்டுமே திரும்பி பெறும் உயிரினமாகவே இந்து மதத்தில் பசு பார்க்கப்படுகிறது. 
அது நமக்கு பால், வெண்ணெய், சீஸ், தயிர், மற்றும் இதர பால் பொருட்களை அளிக்கிறது. பசுமாடு என்பது நமக்கு பயனளிக்கும் உயிரினம் என்பதால், அதனை வழிபடும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. அதனை வழிபடுவதால், வருங்காலத்தில் அந்த இனம் எந்த ஒரு ஆபத்துமின்றி அழிந்து விடாமல் இருப்பதை நாம் உறுதி செய்கிறோம்.
கர்மா- அநுமானிக்கப்பட்ட கருத்து 
கர்மா என கூறப்படும் ஒவ்வொரு மனிதர்களின் செயல்களுக்கும், அதற்கு சரிசமமான எதிர் இயக்கம் இருக்கும் என கூறுவது அநுமானிக்கப்பட்ட கருத்தாகும். ஆனால் பலரும் கர்மாவின் கருத்தை உணர்ந்திருக்கிறார்கள். அது நம்மை வாழ்க்கை முழுவதும் எப்படி துரத்தும் என்பதையும் அறிந்திருக்கிறார்கள். அதனால் கர்மா என்பது அனைவரையும் சம்பந்தப்படுத்தக்கூடிய மிக முக்கியமான நடைமுறை கருத்தாகும்.

No comments:

Post a Comment