Monday, May 16, 2016

உயிர்க்கொலை செய்து புலாலை உண்பது பாவம்

உடம்பும் உயிரும் சேர்ந்து செய்கின்ற பாவ புண்ணியங்கள் எதுவாயினும் சரி அவை தீவினைகளாயும் நல்வினைகளாயும் மாறி உயிரை சார்ந்து உயிரில் பதிந்துவிடும். உடல் அழியக்கூடியது, உயிர் அழியாதது. உடலின் இச்சைகளால் பொறிபுலன் இயக்கத்திற்கு வயப்பட்டு உடலின் வழி நுகர்வது உயிரே. ஆதலால் பாவ புண்ணியங்கள் உயிரைச் சார்கிறது. இறுதியில் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்ட உடல் அழிந்துவிடுகிறது.
உடலின் புலன் கவர்ச்சியினால் உடல் செய்த பாவமும் உயிரைச் சார்வதால் உயிர் மாசுபடுகிறது. உடலின் புலன் கவர்ச்சிக்கு ஆட்பட்டு சுவைக்காக உயிர்க்கொலை செய்து புலால் உண்டால், உடல் சுகத்திற்காக செய்த அந்த கொடும் கொலைப்பாவம் உடம்பை சார்வது இல்லை. அது என்றும் அழியாது உயிரினை சார்ந்துவிடுகிறது. கொலை பாதக பாவம் உயிரைச் சார்ந்துவிடுவதால் உயிரின் தூய்மை பாதிக்கப்பட்டு இழி பிறவியினை தோற்றுவிக்கிறது.
ஒரு ஜென்மத்தில் உடல் விருப்பத்திற்கு இணங்கி உயிர்க்கொலை செய்து புலால்தனை சுவைத்து உண்டு உயிர்க்கொலை செய்த பாவத்திற்கு ஆளானவன், அந்த பாவத்தின் வினை உயிரைச் சார்ந்து தொடர்ந்து உடல் அழிந்த பின்னரும் தொடர்ந்து உயிர்க்கொலை செய்து அதன் சடலத்தை உண்டு வாழ்வது பாவம் என்று அறியாமல் அதை இனிமையாகவும், சுவைத்தும் உண்ணுகின்ற கொடுமையான மனம் படைத்த வன்மனம் உடைய கொலை பாதக பாவச்சுமை உள்ள என்றுமே விடிவு பெறாத அறியாமையில் மூழ்கியுள்ள புலையர் குடும்பத்தினிலே பிறக்கச் செய்து ஒரு ஜென்மத்தில் கொலை செய்து உண்ட அந்த பாவியை மீண்டும் மீண்டும் பாவம் செய்ய தூண்டி என்றுமே விடிவு பெறமுடியாத பெரும் பாவ சுழலினிலே அகப்படச் செய்து அவனை ஒரு ஜென்மத்திலே கூட கடைத்தேறிட முடியாத வகையிலே செத்து செத்து பிழைக்க வைத்து மேலும் மேலும் இழிவான குடும்பத்திலே பிறக்க செய்தும் இழிவான தேகத்தையும் தந்து என்றும் மாறா கொடும் பாவத்தை சேர்க்கின்றது.
உயிர்க்கொலை செய்து புலாலை உண்பது பாவம் என்றே அறியாமல் செய்து பாவச்சுமைக்கு ஆளாயிருந்தாலும் குற்றமில்லை. இனியேனும் அந்த கொடும் பாதகச் செயலை செய்யாதிருக்க வேண்டுமாயின் ஜீவதயவே வடிவான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எவ்வுயிரையும் தம்முயிராய் எண்ணி எல்லா உயிரிடத்தும் அளவிலா அன்பு செலுத்தி “ஜீவதயவே ஞான வீட்டின் திறவுகோல்” என்பதை தாம் அறிந்து வெற்றி பெற்று ஒளிபொருந்திய ஞான தேகத்தை பெற்ற ஜீவகாருண்ய தலைவன், ஞான ஒளி பொருந்தியவனும் ஞானத்தலைவனும் சதகோடி சூர்ய பிரகாசமும் குளிர்ச்சி பொருந்தியவனுமான முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் திருவடிகளை பற்றினால் முருகனது அருள்கூடி பொல்லா கொலை பாதகத்திலிருந்து விடுபடலாம்.
ஆதலினாலே இனியேனும் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாதிருப்பது நலமே. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து மாதம் ஒருவருக்கேனும் அன்னதானம் செய்து தினம் தினம் மறவாது ஜீவகாருண்ய தலைவன் முருகன் திருவடிகளைப் பற்றி பூசித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள்.

2 comments:

  1. ஓரு உயிர்கு உணவு மற்றொரு உயிர் என்பது இயர்கையின் நியதி.

    அனைத்து தாவரங்களும் புலன் உணர்வுள்ள உயிரினங்களே.

    ஒரு செல் அமீபாவும் உயிரினமே.

    நம் ஒவ்வொரு சுவாசத்திலும் பல்லாயிரம் கோடிக்கணக்கான உயர்கள் மாண்டுபோகின்றன.

    மனிதன் பொதுவில் பெரும்பாண்மையில் அனைத்துண்ணி, எனவே மதத்தின் பெயரால் புனிதம் என்கின்ற போர்வையில் தனிமனித உணவு பழக்கத்தில் தலையிடலாகாது.

    ReplyDelete
  2. ஓரு உயிர்கு உணவு மற்றொரு உயிர் என்பது இயர்கையின் நியதி.

    அனைத்து தாவரங்களும் புலன் உணர்வுள்ள உயிரினங்களே.

    ஒரு செல் அமீபாவும் உயிரினமே.

    நம் ஒவ்வொரு சுவாசத்திலும் பல்லாயிரம் கோடிக்கணக்கான உயர்கள் மாண்டுபோகின்றன.

    மனிதன் பொதுவில் பெரும்பாண்மையில் அனைத்துண்ணி, எனவே மதத்தின் பெயரால் புனிதம் என்கின்ற போர்வையில் தனிமனித உணவு பழக்கத்தில் தலையிடலாகாது.

    ReplyDelete