சனி பகவான் பற்றிய தகவல் "
"என்னையே நீ பிடித்ததால் இனிமேல் உனக்கு "சனீஸ்வரன்" என்ற பெயர் வழங்கட்டும்" என்று "சிவபெருமான்" அருளினார். அன்று முதல் சனிபகவானுக்கு "சனீஸ்வரன்" என்று பெயர் வழங்கலாயிற்று
கிரகங்களில் ஈஸ்வரன் என்ற சிறப்புப் பெயருக்குக் காரணமாகி நிற்பவர்
"சனி"தான். பொதுவாக சனி என்றாலே, எல்லோரையும் ஆட்டி வைப்பவர் என்று பொருள். ஆனால் தன்னை யார் ஸ்ரத்தையோடு வழிபடுகிறார்களோ அவருக்கு அல்லது அவர்களுக்கு, கருணையை அள்ளித் தரும் வள்ளல் இவர்தான். சூரியன் சஞ்சிகை என்பவளை மணந்து வாழ்ந்து கொண்டு வந்தான். அவர்களுக்கு மநு, யமன், யமுனை என்று மூன்று
குழந்தைகள் பிறந்து வளர்ந்து வந்தன! ஒரு சமயம் சஞ்சிகைக்கு, சூரியனது வெப்பம் தாங்க முடியவில்லை. அதோடு அவளுக்கும் தவம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. இதற்காக சஞ்சிகை ஒரு ஏற்பாட்டை செய்தாள். சூரியனுக்கு தெரியாமல்தான் அவரை விட்டுவிலகவேண்டும் என்பதற்காக, தன் நிழலையே ஒரு பெண்ணாகச் செய்து, அவளை அங்கேயே விட்டுவிட்டு, தந்தையிடம் சென்று விட்டாள். அவளுடைய
நிழலில் தோன்றிய பெண்ணிற்கு "சாயாதேவி" என்று பெயர் அமைந்தது. சஞ்சிகையின் வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி தான் வேறு ஒருத்தி என்பதைத் தெரிவிக்காமலேயே சூரியனோடு வாழ்ந்து வந்தாள். அவளுக்கு சாவர்ணீ என்ற மனுவும், சனி பகவானும், பத்திரை என்ற பெண்ணும் பிறந்தனர். இந்தக் குழந்தைகள் பிறந்ததும், சாயாதேவிக்கும், சஞ்சிகையின் குழந்தைகள் மீது பாசமே ஏற்படவில்லை. யமனுக்கு கோபம்
வந்தது. தன்னை நேசிக்காத சாயாதேவியை உதைக்கப் போனான். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாயாதேவி, உன் கால் முறியட்டும் என்று சாபமிட்டாள். யமனுக்கு கால் ஒடிந்தது. இந்த செய்தி பின்னர் சூரியனுக்குத் தெரிய வந்தது. ஏன் இப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறாள், என்று விசாரித்த பொழுது, சாயாதேவி யார் என்பது தெரிந்தது. பிறகு சூரியன் சாயாதேவியையும் தன் மனைவியாக ஏற்றுக்
கொண்டான். தந்தையின் வீட்டில் தவம் புரிந்து கொண்டிருந்த சஞ்சிகையை அழைத்து வந்து இல்லறம் நடத்தி வந்தான். யமனது காலும் குணமாயிற்று. சூரியனுக்கும், சாயாதேவிக்கும் புதல்வனாக தோன்றியவர் சனி பகவான். இவர் பூலோகத்திற்கு வந்து காசிக்கு சென்று தன் பெயரால் ஒரு லிங்கத்தை நிறுவி, பூசை செய்து வந்ததினால் நவக்ரகங்களில் ஒருவராக சிறப்புப் பதவியை அடைந்தார் என்று சனி
பகவான் வரலாறு கூறுகிறது. சனிபகவான், ஒரு சமயம் தன் பெரிய தாயாரான சஞ்சிகையை கேவலமாக பேசினார். இதைக் கேட்ட யமன், கோபப்பட்டு சனி பகவானின் காலை உடைத்தார். சனி பகவான் ஒரு கால் ஊனமானார். சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் என்பதற்கு ஒரு கதை உண்டு. சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ஈடுபாடு. இல்லறத்தில் நாட்டமே இல்லை. இதை அறியாமல் அவருக்கு சித்திரதா என்பவர் தன் மகளை
சனிபகவானுக்கு மணம் செய்து வைத்தார். கல்யாணமான பின்பும் கூட தன் மனைவியை நேசிக்காமல் தவத்திலே ஈடுபட்டார் சனீஸ்வரன். ஒரு பெண்ணை எதற்காகத் திருமணம் செய்து கொண்டோம் என்பதை மறந்த சனிபகவானை எண்ணி எண்ணி விரக வேதனையால், அவன் மனைவி சபித்துவிட்டாள். "ஒரு பெண்ணின் ஆசையைப் புரிந்து கொள்ளாத நீங்கள், கணவர் என்ற முறையில் வாழத் தெரியாத நீங்கள், தவ வலிமையின் ஆனந்தம்
அடையாமல் போகட்டும் என்று சபித்த வார்த்தைகளால், சனிபகவான் நொந்து போனார். அன்று முதல் அவரது பார்வை வக்கிரமாக அமைந்துவிட்டது. மாற்றவே முடியவில்லை என்பது ஐதீகம். ஆகமங்களில், சனியினுடைய உருவம், உடை ஆகியவைப் பற்றிய செய்திகள் வருகின்றன. கரிய நிறமுடையவன். கரிய ஆடையை அணிபவன். ஒரு கால் முடவன். இருகரம் உடையவன். வலக்கரத்திலே தண்டமும், இடக்கரத்தில் வரதக் குறிப்பும்
உடையவன். பத்மபீடத்தில் வீற்றிருப்பவன். அட்ச மாலையை கொண்டு எட்டு குதிரைகள் பூட்டிய இரும்பு ரதத்தில் பவனி வருபவன். சனிபகவானுக்கு இருவகை மந்திரங்கள் உரியது. ஒன்று வேதம். இதற்கு ரிஷியாக இருப்பவர் இளிமிளி. அந்த மந்திரத்தின் பெயர் உஷ்ணிக் என்ற சந்தத்தில் அமைந்தது. மற்றொரு மந்திரம் காயத்ரி சந்தசைக் கொண்டது. அதற்கு ரிஷி - மித்ரரிஷி. நவக்ரக ஆராதனம் என்னும் நூலில்
சனிபகவான் வில்லைப்போல ஆசனத்தில் வீற்றிருப்பான். அழகு வாகனம் உடையவன். மேற்கு நோக்கி இருப்பான். நீல மேனி உடையவன். முடிதரித்தவன். சூலம், வில், வரதம், அபயம் கொண்டவன், மெல்ல நடப்பவன். கருஞ்சந்தனம் பூசுபவன். கருமலர், நீலமலர் மாலையை விரும்புகிறவன். கரு நிறக்குடை, கொடி கொண்டவன் என்று சனியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது. சனிக்கு, அதிதேவதை யமன். வலப்பக்கத்தில் இவனை
ஆவாகனம் செய்ய வேண்டும். இடப்பக்கத்தில் ப்ரத்யாதி தேவதையாகிய பிரஜாபதி இருப்பார். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, கெடுப்பவருமில்லை. தமிழ்நாட்டில்தான் சனிபகவானுக்கு காக்கையை வாகனமாக சொல்வது வழக்கம். வடநாட்டில் உள்ள த்யான சுலோகங்களில் சனி பகவானுக்கு கழுகை வாகனமாக குறிக்கின்றனர். சனி, மந்தன், பிணிமுகன், முதுமகன், முடவன், காரி என்ற வேறு பெயர்களும் உண்டு. தாமத
குணம் உண்டு. பிரியமான உலோகம் இரும்பு. மணி நீளம், தானியம் எள், மலர் கரும்குவளை, சுவை கசப்பு. காச்யப கோத்திரத்தை சேர்ந்தவர். சனியை வழிபட்டால், நீண்ட ஆயுளுடன் வாழலாம். சனி பகவானுக்கு ஜேஷ்டா, நீலா, மன்தா என்று மூன்று மனைவிகள் உண்டு. இவர்களில் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த மனைவி, நீலா. சனியின் குமாரன், குளிகன். குளிகை காலத்தில் எதைச் செய்தாலும், நன்கு பெருகும். ஆனால்
இறந்தவர்கள் உடலை மாத்திரம் எடுக்கக்கூடாது என்பது சாஸ்த்திரம். எல்லா கிரகங்களுக்கும் இல்லாத "ஈஸ்வரன்" என்ற அடைமொழி சனிக்கு மட்டுமே உண்டு. ஒரு சமயம் சிவபெருமானையே சனி பிடிக்கும் முறை வந்தது. சனியை தூரத்தில் கண்டதும் "இவன் கையில் பிடிபடக் கூடாது, நிஷ்டையில் அமரப் போகிறேன்" என்று பார்வதி தேவியிடம் கூறிவிட்டு, ஒரு குகையில் சென்று அதன் வாயிலை நன்றாக மூடிக்
கொண்டு நிஷ்டையில் அமர்ந்தார் சிவபெருமான். ஏழரை ஆண்டுகள் கழிந்தன. சிவபெருமான் தன் நிஷ்டையைக் கலைத்துவிட்டு எழுந்தார். சனி பகவானிடமிருந்து தான் தப்பி விட்டதை எண்ணி மகிழ்ந்தார். குகையின் வாயிற் கதவை திறந்தார். வெளியே வந்தவர், வாசலில் அமர்ந்திருந்த சனிபகவானைக் கண்டதும் வியப்படைந்தார். "வணக்கம். என் வேலை முடிந்துவிட்டது. போய் வருகிறேன்" என்று கூறி
அங்கிருந்து சனி பகவான் கிளம்ப முயன்றார். "எப்படி உன் கடமை முடிந்தது? நான் தான் உன் பிடியில் சிக்கவில்லையே?" என்றார் சிவபெருமான். "தாங்கள் பார்வதி தேவியை விட்டுப் பிரிந்து இந்த ஏழரை ஆண்டுகள் குகையிலே அடைந்து கிடக்கும்படி செய்தவனே அடியேன்தான். அதனால்தான் சொன்னேன், என் கடமை முடிந்து விட்டது" என்றார் சனிபகவான். சிவபெருமான் உண்மை இதுதான் என்பதை உணர்ந்து
"என்னையே நீ பிடித்ததால் இனிமேல் உனக்கு "சனீஸ்வரன்" என்ற பெயர் வழங்கட்டும்" என்று அருளினார். அன்று முதல் சனிபகவானுக்கு "சனீஸ்வரன்" என்று பெயர் வழங்கலாயிற்று. "காக த்வஜாய வித்மஹே, கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த: ப்ரசோதயாத்" என்கிற சனிபகவான் காயத்ரி மந்திரத்தை தினசரி பாராயணமாகக் கொள்ளலாம். சனிபகவான் அருள் நன்றாகவே கிட்டும். சனிபகவான் தானே விருப்பப்பட்டு பூசை
செய்த ஸ்தலங்கள் பல இந்தப் பூமியில் உண்டு. அவற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பது "திருநள்ளாறு". ஏழரை சனி என்பது, அவரவர் நட்சத்திரத்திற்கு சனிபகவான் 12ம் இடம், ஜென்மம், இரண்டாம் இடம் வரும் பொழுது ஏற்படுவது. உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற சந்தேகம், இடம்விட்டு இடம் மாறுதல், குடும்பத்தை விட்டுப் பிரிதல், உத்தியோகத்திலிருந்து விலக்கப்படுதல், பண நஷ்டம், தொழில்
நஷ்டம், இவைகள் ஏற்படும். சனீஸ்வரர் இருக்கும் கோயில்களில் முதன்மை பெற்றது, திருநள்ளாறு. இது காரைக்கால் ரயில் மார்க்கத்திலிருந்து தெற்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆதிபுரி, தர்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேச்வரம் என்ற பெயர்களும் இந்த ஸ்தலத்திற்கு உண்டு. நளமகாராஜா ஏழரை சனியில் பீடிக்கப்பட்டு துன்புற்றபோது, இங்கு வந்து நளதீர்த்தத்தில் நீராடி
சனிபகவானை பூசித்ததும், சனிபகவான் அவரைவிட்டு விலகியதாகச் சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், சரஸ்வதிதீர்த்தம், அகஸ்தியர்தீர்த்தம் ஆகியவை விசேஷமான தீர்த்தங்கள். திருநள்ளாரில் உள்ள நளதீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீ விநாயகரை வலம் வந்து குளத்தின் நடுவில் உள்ள நளமாகாராஜா குடும்பத்தை மரியாதையுடன் வணங்க வேண்டும். பிறகு குளத்தில்
இறங்கி முதலில் தலையில் கொஞ்சம் ஜலம் எடுத்து ப்ரோக்க்ஷணம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தகுந்த நபர்களை கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு, ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு கோயிலுக்குள் சென்று சனீஸ்வரனை வணங்கி பிரார்த்தனை செய்து கொள்வது நலம். ஜோதிட சாஸ்த்திரம், சனிபகவானை பற்றி கூறும் பொழுது, கீழ்நிலையைச் சேர்ந்தவர்கள் தங்க இடமாகக் கொண்டிருப்பான் என்கிறது. அலியாக
இருப்பவன். பஞ்ச பூதங்களில் காற்றாக வருபவன். மேற்கு திசைக்கு உரியவன். துலாம் உச்ச வீடு மகர கும்பங்கள் சொந்த வீடு. பூசம், அனுஷம், உத்தரட்டாதி என்ற மூன்று நட்சத்திரங்களுக்கு உரியவன். புதன், சுக்கிரன் நண்பர்கள். செவ்வாய், சந்திரன், சூரியன் - பகைவர்கள். இவனுக்கு ஒரு கால் கிடையாது. அதனால், மந்த நடை நடப்பான். அற்புதமான பராக்கிரம சாலியான இவன், சிவபெருமானது கருணைக்கு
எதையும் செய்யக் கூடியவன். நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்கும் காரணமானவன். வறுமை, கஷ்டம், நோய், அவமரியாதை இதற்கு மூல காரணமாக இருப்பவன். சனி பலமாக இருந்தால் தியாகிகளாகவும், தேசத் தலைவர்களாகவும் மாற முடியும்.உலக அறிவில், வெளி நாட்டு மொழிகளில் பாண்டித்தியம் அடைய உதவுவதும் சனி. இரும்புக்கு காரகன். நல்லெண்ணெய் நாயகன். கருப்பு தானியங்களின் பிரதிநிதி.
இயந்திரங்களை கற்க, ஓட்ட திறனளிப்பவன். விவசாயம் செழிக்க சனி கருணை காட்ட வேண்டும். உடலில் நரம்பு இவன். கொடிய மனம் உடையவன். கல் நெஞ்சன். வாதம், பித்தம், கபம் மூன்றில், வாதமாக இருப்பவன். தாமச குணத்தோன், ரத்தினங்களில் நீலமாக இருப்பவன். காடு, மலைகளுக்கு உரியவன். ஜோதிட சாஸ்த்திரத்தில், எண் கணிதத்தில் "8"ம் எண்ணை சனீஸ்வரனுக்கு கொடுத்திருக்கிறார்கள். வியாதிகள்
நீங்கவும், கடன் தொல்லை ஒழியவும், துர்தேவதைகளால் ஆபத்து நீங்கவும் சௌந்தர்யலஹரியில் உள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லலாம். "த்வயா ஹ்ருத்வா:வாமம் வபு ராபரி திருப் தேந மநஸா ஸரீரார்த்தம் சம்போ ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத்! ததா ஹித் வத்ரூபம் சகல மருணாபம் த்ரிநயனநம் குசாப்யா மாநம்ரம் குடில சசி சூடால முகுடம்!" "ஓம் சமக்நிரக் நிபிச்கரச் சன்ன ஸ்தபது சூர்யா: சம்வாதோ வாதவரப
அபச்ரித: ஸ்வாஹா!" என்கிற மந்திரத்தைச் சொல்லி ஹோமம செய்தால் ஒருவருக்கு இருக்கின்ற கஷ்டங்கள் விலகும், கஷ்டங்கள் வராது, நன்மைகள் கூடும்.

Good message for everyone
ReplyDelete