Tuesday, February 1, 2011

படுக்கையில் இருந்து ஏன் வலதுபக்கம் திரும்பி எழ வேண்டும்?

படுக்கையில் இருந்து ஏன் வலதுபக்கம் திரும்பி எழ வேண்டும்?

எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் "இவன் இடது பக்கமாக எழுந்தானோ" என்று கூறுவதுண்டு.
இதிலிருந்து இடதுபக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறு இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
மேலே கூறப்பட்டதைப் பெரியவர்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொண்டு கூறுவதில்லை என்றாலும் வலது பக்கமாகத் திரும்பிப் படுக்கையில் இருந்து எழ வேண்டும் என்பது மிக முக்கியமானது.
நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை மேல் நாட்டவர் இப்பொழுது அங்கீகரித்து இருக்கின்றனர்.
காரணம்:
நம் உடலை இரு காந்த வளையங்கள் சுற்றி வருகின்றன. இவையில் முதலாவது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்த வளையம் இடப்பக்கத்திலிருந்து முன்பாகம் வழியாக வலப்பக்கத்துக்கும் வலப்பக்கத்திலிருந்து பின்பாகம் வழியாக இடப்பக்கத்திற்கும் வலம் வருகின்றது. காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்தவளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல் திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலதுபக்கம் திரும்பி எழும்போது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பதை நவீன மின்னியல் ஒப்புக்கொள்கின்றது.





No comments:

Post a Comment