அந்தக் காலத்தில் "அவரோஹிணி' என்ற குடை இருந்தது. இந்தக் குடை எதற்குப் பயன்பட்டது
தெரியுமா!
இப்போதைய ஆகாய விமானத்துக்கு அடிப்படை அந்தக்காலத்தில் நம் மண்ணில் இருந்த புஷ்பக விமானம். குபேரனிடம் இருந்த இந்த விமானத்தை ராவணன் பறித்துக் கொண்டதாகவும், சீதையை அதில் கடத்திச் சென்றதாகவும் ராமாயணம் கூறுகிறது. இன்றைய நிஜம் தான் நாளைய வரலாறு என்பது முக்காலமும் உண்மை. இன்று சுனாமி என்ற பெயரில் வருவது அக்காலத்தில் "பிரளயம்' எனப்பட்டது. இதை எப்படி நம்புகிறோமோ, அதே போல புஷ்பக விமானத்தையும் நம்பி தான் ஆக வேண்டும். ஏன்! நாத்திகர்கள் கூட சுவாரஸ்யமாகப் படிக்கும் சிலப்பதிகாரத்தின் முடிவில், கண்ணகியை வானவர்கள் புஷ்பக விமானத்தில் ஏற்றிச் சென்றதாக கதை முடிகிறது.
விமானத்தில் பழுது ஏற்பட்டாலோ, போருக்குச் செல்லும் போதோ, சாகசங்கள் செய்யவோ மேலிருந்து கீழே குதிக்க இப்போது "பாராசூட்' பயன்படுத்துகிறார்கள். இந்த பாராசூட்டின் அன்றையப் பெயர் தான் "அவரோஹிணி'. அகஸ்திய சம்ஹிதை என்ற நூலில், இந்தக் குடையின் பயன்பற்றியும், அன்று அது பயன்படுத்தப்பட்டது பற்றியும் தகவல் சொல்லியுள்ளார்கள்.
ப்ருஹத் சம்ஹிதை என்ற நூல் இருக்கிறது. இதில் ஒரு ஆச்சரியமான தகவல் என்ன தெரியுமா! இந்தக்காலத்தில் "பெரிசுகள்' எல்லாம் தங்கள் நரையை மறைக்க கருப்பு மை (டை) பூசிக்கொள்கிறார்களே! அதை தயாரிக்கும் முறை பற்றி சொல்லியுள்ளார்கள். அது மட்டுமல்ல! பொடுகை போக்கும் சீயக்காய் பற்றியும் இதில் தகவல் உண்டு. இப்போது அது தான் "ஷாம்பு' வாய் அவதாரம் எடுத்திருக்கிறது. எல்லாமே நம்மிடம் அன்று இருந்தது கலப்படமே இல்லாமல்! இன்று நம் "அறிவு முதிர்ச்சி'யின் பயனாய் என்ன நடக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள்

No comments:
Post a Comment