அரிஸ்டாட்டிலிடம் குருகுலவாசம் செய்து, தத்துவம் படித்து வந்தான் சிறுவன் அலெக்ஸôண்டர்.
ஒருமுறை இருவரும் ஒரு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது....
ஆற்றைக் கடக்கும்போது, "ஆழமாக இருக்குமோ!' என குரு தயங்குவதைக் கவனித்தான். உடனே, ""குருவே, நான் முன்னால் செல்கிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள்'' என்று கூறிவிட்டு, ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
குரு பின் தொடர்ந்தார். ஆற்றில் குறைந்த நீரோட்டமிருந்ததால் இருவரும் எளிதாக அக்கரைக்கு சேர்ந்தனர்.
அப்படி வந்தவுடன் குரு கோபமாக, ""அலெக்ஸôண்டர், நீ மன்னன் மகன் என்ற மமதையைக் காட்டி விட்டாயே! குருவுக்குப் பின்னால்தானே சிஷ்யன் வரவேண்டும்?'' என்றார்.
""மன்னிக்க வேண்டும், குருவே! ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கி, நீங்கள் ஆற்றோடு போய்விட்டால், ஆயிரம் அலெக்ஸôண்டர் சேர்ந்தாலும் ஒரு அரிஸ்டாட்டிலை உருவாக்க முடியாது. ஆனால், இந்த அலெக்ஸôண்டர் ஆற்றோடு போய்விட்டால், உங்களால் ஆயிரம் அலெக்ஸôண்டர்களை உருவாக்க முடியுமே!'' என்றான்.
அரிஸ்டாட்டில் நெகிழ்ந்து போனார்
No comments:
Post a Comment