Sunday, December 22, 2013

மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது

மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது ---பகவத் கீதையின் தியான யோகம்.
 
மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பது பற்றி பரந்தானமன் அர்ஜூன்னுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியான யோகமாகும்.
1. சகல காரியங்களுக்கும்- இன்பத்திற்கும் துன்பத்திறகும் நன்மைக்கும் தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்ச்த்திற்கும், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.
2.மனத்தின் அலைகளே உடம்பைச்செலுத்துகின்றன.
3.பகுத்தறிவையும் னம் ஆக்ரமித்துக்கொண்டு வழி நடத்துகிறது.
4.கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான்ந கொலைகாரனை ஞானி...யாக்குவதும்மனம்தான்.
5.இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்கள் அழித்துவிடுகின்றன.
6.உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக்கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.
கடிவாளம் இல்லாத இந்த மனக்குதிரையை அடக்குவது எப்படி?”
1.எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனதின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.
2.பற்றறுப்பது; சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.
3.நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்ற முடிவுக்கு வருவது.
4.ஜன்னத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டி வைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டு கொள்வது.
5.காலையில் இருந்து மாலைவரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.
(பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் ‘ஞானி’ யானது இப்படித்தான்.
தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்வனின் திருப்புகழைப் பாடியதும், இப்படித்தான்.)

No comments:

Post a Comment