ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தமும் செய்து விட்டார்கள்.
அதன்பிறகு தான் அந்தப் பையன் ஒழுக்கக்கேடானவன், கடுமையான நோயுள்ளவன், அவர்கள்
குடும்பத்தில் ஒழுக்கக்குறைவானவர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தல் போன்ற பெரிய
காரணங்கள் தெரிய வருகிறது. அப்படியானால், நிச்சயித்த மாப்பிள்ளையை வேண்டாமென சொல்லி
விடலாமா என்று கேட்டால், ""தாராளமாக அவனை ஒதுக்கி விட்டு, வேறு மாப்பிள்ளை
தேடலாம்,'' என்கிறார் ராமபிரானின் குலகுருவான வசிஷ்டர். அதே நேரம், அந்த மணமகனிடம்
ஒரு ஒழுக்கக்கேடும் இல்லாமல், அழகில்லை, வேலை சரியில்லை. பணமில்லை என்ற காரணங்களைக்
காட்டி, நிச்சயதார்த்த்தை நிறுத்தினால் அது பாவம். இவற்றையெல்லாம் முன்கூட்டியே
நன்றாக விசாரித்திருக்க வேண்டும். இதே போல, மணமகளுக்கு கொடிய நோய் ஏதேனும்
இருந்தால், அதுபற்றி முன்கூட்டியே மணமகன் வீட்டாரிடம் தெரிவித்து விட வேண்டும். இதை
மறைத்து திருமணம் செய்து கொடுத்தால் அவர்களை நூறு தடவை சவுக்கால் அடித்தால் கூட
தவறில்லை என்று தர்மசாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது
No comments:
Post a Comment