Thursday, March 6, 2014

சிறியவர் யார்?

சிறியவர் யார்?

ராமானுஜர் தம் முதிர்ந்த வயதில் ஏழுமலையான் தரிசனம் பெற திருப்பதிக்குச் சென்றார். மலை அடிவாரத்தை அடைந்த அவர். தமது பாதங்களை வைத்து திருமலையில் ஏறுவதை அபச்சாரமாகக் கருதி முழுங்கால் இட்டு குழந்தையைப் போல் தவழ்ந்தே மலை ஏறினார்.

மலையை அடைந்ததும் களைப்பால் சோர்ந்து ஒரு மரத்தடியில் இளைப்பாறினார். அப்போது கோயில் அர்ச்சகர் ஒருவர் கோயில் பிரசாதத்தையும் theerthathaiyum தம் தலையின்மீது சுமந்துகொண்டு வந்து, "சுவாமி இவற்றைச் சாப்பிட்டு களைப்பைப் போக்கிக் கொள்ளும்" என்று ராம...ானுஜரிடம் சொன்னார். அவரும் அதை வாங்கிச் சாப்பிட்டார்.

பின்னர் "ஐயோ பாவம்; எனக்காக இந்த வெய்யிலில் இவற்றை சுமந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். வேறு சிறுவர் யாரும் இதைச் சுமக்கக் கிடைக்கவில்லையா" என்று கேட்டார்.

அதற்கு அந்த அர்ச்சகர் "என்னைவிட சிறியவர் யாருமில்லையே" என்றார். வந்திருப்பது அந்த ஏழுமலையானே என்பதை அறிந்து கொண்ட ராமானுஜரும் அப்படியே வீழ்ந்து வணங்க, ஏழுமலையான் மறைந்து விட்டார்.

எத்தனையே மகான்கள்---இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்.

No comments:

Post a Comment