ஸ்தல விருட்சம் என்றால் அங்குதான் சுவாமியே உருவாகியிருப்பார். அந்த ஸ்தலம் உருவாகக் காரணமாக இருப்பதுதான் ஸ்தல விருட்சம். ஒரு சில இடங்களில் கடவுள் சுயம்புவாக இருந்தார். மக்களுக்கு தெரியாமல் இருந்தது. அதன் மீது காராம்பசு பால் சொரிந்தது. அங்கு போய் பார்த்தால் சுயம்பு லிங்கம் இருந்தது. அதன் அருகில் இருக்கும் மரம் தான் ஸ்தல விருட்சம்.ஸ்தல விருட்சத்தைச் சுற்றினால் கடவுளின் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றும் பலன் கிட்டும். வேதம் அறிந்தவர்கள், முக்கியமான சிலர்தானே கர்ப்பகிரகத்திற்குள் செல்ல முடியும். ஆனால் ஸ்தல விருட்சத்தை யார் வேண்டுமானாலும் சுற்ற இயலும். .எனவே பல கோயில்களில் ஸ்தல விருட்சத்திற்கு அருகே சித்தர் பீடம் அமைக்கப்பட்டிருக்கும். சித்தர்கள் அமர்ந்திருப்பதாக ஐதீகம். அங்குள்ள சித்தர்களை வைத்துத்தான் கோயிலின் சுவாமிக்கு சக்தி அதிகரிக்கும். எல்லா இடத்திலும் இறைவன் எப்போதும் இருக்க முடியாது என்பதால், கோயில்களில் சித்தர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அவர்களது தவத்தின் வலிமையால் கோயிலின் வலி¨மை கூடும். அவர்கள் தவம் செய்வதே இந்த ஸ்தல விருட்சத்தின் கீழ்தான். ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்ற நேசன் எதிர் நிற்றல் அறிது என்ற பாடல் உண்டு. அதாவது சிவஞான போதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஈசனையே எதிர்க்கலாம். ஈசனிடம் இருந்து வரம் பெற்று அருள் பாலிக்கும் சித்தர்களை எதிர்க்கக் கூடாது என்பது பொருள்.ஸ்தல விருட்சங்கள் என்பது இறைவனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருவோமே அதை விட அதிக சக்தி வாய்ந்தது ஸ்தல விருட்சமாகும்.
ஸ்தல விருட்சத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வரலாம். ஒரு முறை வந்தாலும் போதுமானதுதான்
No comments:
Post a Comment