Thursday, May 29, 2014

விதுர நீதியில் சில முத்துக்கள்......


விதுர நீதியில் சில முத்துக்கள்......
அரசர் திருதராஷ்டிரர் பல சமயங்களில் விதுரரின் உபதேசங்களை கேட்டபார். அவர் கூறிய உபதேசங்கள் ......
*அரசே! யார் யாருக்கு தூக்கம் வராது தெரியுமா? பலசாலிகளின் பாதிப்பிற்குள்ளாகும் பலகீனர்கள், வாழக்கை சாதனங்கள் அற்றவர்கள், சொத்தை இழந்தவர்கள், காதலிப்பவர்கள் அல்லது காமுகர்கள், திருடர்கள் ஆகியோரால்தான் இரவில் சரியாக தூங்க முடியாது. இவர்கள் இரவில் உறக்கமின்மை என்ற நோய்க்கு ஆளானவர்கள்.
...
*அரசே, விண்ணுலகிற்கு நம்மை இட்டுச் செல்வதற்கு ஒரே ஒரு ஏணிதான் உண்டு. வேறு மாற்று ஏணி கிடையாது. கடலைக் கடக்க உதவும் படகைப்போல், உலகை கடந்து அமர வாழ்விற்கு இட்டுச் செல்லும் அந்த ஒரே ஏணி சத்தியம் (தர்மம்). இதை நீங்கள் உணரவில்லை.
*நேர்மை தான் தலைசிறந்த பண்பாகும். பொறுமைதான் அமைதிக்குத் தலைசிறந்த வழியாகும். முழுமையான அறிவுதான் பூரண திருப்தி தரும். பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பதுதான் மகிழ்ச்சிக்கான மார்க்கமாகும்.
*காமம், கோபம், பேராசை--- இந்த மூன்றும் நரகத்திற்கு வாயிலாக அமைந்துள்ளன. இவை நம் ஆத்மாவைக் களங்கப்படுத்தி விடுகின்றன. எனவே இவற்றை கைவிட வேண்டும்.
*புனித நதிகளில் நீராடினால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதற்கு சமமான அளவு புண்ணியம், எல்லா உயிரினங்களையும் சமமாகப் பார்ப்பதாலும் கிடைக்கும். ஆகவே சம நோக்கு தேவை.
*ஆற்றங்கரையில் மரங்கள் வெள்ளப் பெருக்கினால் வீழ்ந்துவிடும். அதுபோலவே, அறநெறியை அறிந்திருந்தும் மௌனமாக இருந்துவிடுபவர்களும், அறநெறி பற்றிச் சிந்தித்தும் கருத்தை வெளியிடாதவர்களும் அழிந்துபோவார்கள்.
*முதுமைத் தளர்ச்சி நமது அழகையும், ஆசை பொறுமையையும் சீர்குலைக்கும். சாவு உயிர் மூச்சை நிறுத்திவிடும். பொறாமை நன்னெறியில் செல்வதைத் தடுக்கும். கோபம் செல்வச் செழிப்பையும், தீயோர் நட்பு நமது நன்னடத்தையையும் பாதிக்கும். காமம் மான-அவமான உணர்வை மரத்துப் போகச் செய்யும். கர்வமோ நம்மிடமுள்ள அனைத்தையும் அழித்தொழித்துவிடும்.

No comments:

Post a Comment