ஒருவனுக்கு பெரியோர்களின் ஆசீர்வாதம் அவசியமா?
சத்குரு ஜக்கி வாசுதேவ் என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்:
''‘எல்லாம் நல்லதே நடக்கட்டும்’ என்று உங்களிடம் யாரேனும் சொன்னால், அது ஆசீர்வாதம் கிடையாது. அது ஒரு விருப்பம், ஒரு நல்ல எண்ணம். அவ்வளவுதான். ‘ஆசி’ என்பது எண்ணங்கள் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி. ஆசி என்பது நல்லதும் அல்ல; கெட்டதும் அல்ல. அது எரிபொருள். உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உதவும் வஸ்து அது. உதாரணத்திற்கு, உங்கள் காரில் எரிவாயு இல்லை. காரைத் தள்ளிக் கொண்டு போவது மிகவும் கடினம், அதோடு தாமதம் வேறு ஆகும். இதுவே யாரேனும் எரிபொருள் தந்து உதவினால், வெகு சுலபமாக, வெகு விரைவாக வேண்டிய இடத்திற்குச் சென்று விடலாம். ஆசி என்பது இந்த எரிவாயு போன்றது. அது வெறும் வாழ்த்தோ, எண்ணமோ, உணர்ச்சியோ அல்ல. அது சக்தி.'
No comments:
Post a Comment