துறவறம் எப்போது தேவை? மனைவி என்பவளது கடமை என்ன ? மனைவியை எப்போது துறப்பது ?இறைவனடியை எப்போது சேர்வது ?
நமது இந்திய தமிழ் வம்சாவளியினர் அவர்கள் வாழ்வியல் நிலையை மாணவம் (பிரமச்சரியம்),இல்வாழ்க்கை (கிருகஸ்தம்),காடுறைவு (வானப்ரஸ்தம்),துறவு (சந்நியாசம்) என மனிதனின் வாழ்க்கை நிலை நான்காகப் பிரித்து வாழ்ந்து வந்துள்ளனர் .ஆனால் இன்று அவ்வாறான வாழ்க்கை முறையையே தொலைத்துவிட்டோம்.
வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சியை தேடி குழந்தைகள் , அவர்களது தேவைகள் என்றும் , அவர்கள் பேரக் குழந்தைகள் என்றும் அவர்களைப் பார்த்துக் கொள்ள ஏதோ தாம்தான் நியமிக்கப்பட்டவர்கள் போல் நடந்தது கொண்டு , கடைசி வரை இறைவனை தொழுவதுமில்லை , நினைப்பதுமில்லாமல் ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து வாழ்க்கையை முடித்துவிடுகின்றனர். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் , இவர்கள் வாழும் வாழ்க்கையை , இதுதான் வாழ்க்கை, இது போல் வாழுங்கள் என்று அடுத்தவர்களுக்கு உபதேசிப்பதுதான் கொடுமை .
நந்தனார் தான் வாழும் சேரியிலுள்ள ஒரு சிலரை சிவன் கோவில் தரிசனம் செய்வோம் வாருங்கள் எனப் பாடல் பாடி அழைத்து கூட்டிக் கொண்டு சென்றார் .

திருப்புன்கூர் போய் அங்கே கோயிலில் தரிசனம் செய்ய முயற்சிக்க , லிங்கத்தை காண விடாமல் நந்தி மறைத்தது . அப்போது தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆலயத்துக்குள் நுழையை அனுமதி இல்லை .ஆதலால் அவர் இறைவனை வேண்டி விரும்பி கேட்க நந்தி விலகி லிங்கம் காட்சி அளித்தது . ( இந்தப் பாடலின் உட்பொருள் விளக்கம் வேறு உண்டு )
கோவிலுக்கு சென்று வந்த நந்தனாரையும் அவர் உடன் சென்ற அனைவரின் சம்பளத்தை அவர் வேலை பார்த்து வந்த அந்தணர் பிடித்துவிட , அவர்கள் நந்தனாரைச் சாடியதுடன் , சாதிக் கூட்டத்தில் நந்தனாரை சாதிக் கட்டுப்பாடு செய்து ஒதுக்கி வைத்து விட வேண்டும் என தீர்மானிக்கின்றனர் .
அப்போது அங்கிருந்த பெரியவர் .நான் சொன்னால் நந்தன் கேட்பான் என்று கூறி நந்தனாரிடம் ஏன் நந்தா இப்படி சிதம்பரம் ,சிதம்பரம் சொல்லிக் கொண்டு திருப்புனுகூருக்கு ,ஆட்களைக் கூட்டிக் கொண்டு அலைகிறாய் ? ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு எல்லோரையும் போல இருக்காமல் இப்படி அலைகிறாயே ? என்று கேட்கிறார் ?அதற்கு நந்தனார் பதில் சொல்கிறார்?

அது போலவே வாழ்வின் அடித்தளமாக அன்பை கூறியுள்ளனர் , நம் சைவ சமய மற்றும் தமிழ் வாழ்வியலாளர்கள் .
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு .
என்றார் வள்ளுவர் .
அதன் பொருளாவது அன்போடு பொருந்தி நின்ற உடலே உயிர்நிலையுள்ள உடம்பாகும் ; அன்பில்லாதவர் உடல் எலும்பைத்தோலால் மூடப்பெற்ற எலும்புக்கூடே ( உயிரற்ற சவம் ) ஆகும்.
அதற்கேற்றாற் போல் அன்புள்ள பெண்கள் நமது உயிர்த்துணை , அன்பில்லாத பெண்கள் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் உயிருக்கும் , அவர்களே , அவர்கள் உயிருக்கும் எமனாய் விளங்குவர். இதை தூக்கு தூக்கி என்ற படத்தில் விளக்கி இருப்பார்கள் .
நான்கு மகா வாக்கியங்கள் பொய் என நிரூபிக்கப் புறப்பட்டவனது வாழ்விலேயே அது நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டதுதான் இந்தக் கதை.

கொண்டு வந்தால்தான் தந்தை!!!
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்!!!
சீர் கொண்டு வந்தால் சகோதரி !!!
கொலையும் செய்வாள் பத்தினி !!!
உயிர் காப்பான் தோழன்!!!
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்!!!
சீர் கொண்டு வந்தால் சகோதரி !!!
கொலையும் செய்வாள் பத்தினி !!!
உயிர் காப்பான் தோழன்!!!
இதையே முருகன் ஔவையாரிடம் கொடியது என்ன என்று கேள்வியாகக் கேட்கும்போது அதற்கு
கொடியது கேட்கின் வரிவடிவேலோய் !
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும்
கொடிது இளமையில் வறுமை அதனினும்
கொடிது ஆற்றொணாக் கொடு நோய் அதனினும்
கொடிது அன்பிலாப் பெண்டிர் அதனினும்
கொடிது அவர் கையால் இன்புற உண்பதுதானே.
கொடியது என்னவென்று கேட்டால் வறுமை கொடியது, அதனினும் கொடியது இளமையில் வறுமை, அதனினும் கொடியது ஆற்ற முடியாத கொடிய நோய், அதனினும் கொடியது அன்பில்லாத பெண்கள் , அதனினும் கொடியது அவர் கையால் சாப்பிடுவதுதான்.

இருந்து முகம் திருத்தி ஈரோடு பெண் வாங்கி
விருந்து வந்தது என்று விளம்ப – வருந்திமிக
ஆடினாள் , பாடினாள் ,ஆடிப் பழ முறத்தால்
சாடினாள் ஓடோடித் தான்
கணவன் மனைவியின் முகம் சரி செய்து தடவி ,கூந்தலில் ஈர் ,பேன் பார்த்து , அவளை எவ்வளவு தூரம் சந்தோஷப்படுத்த முடியுமோ அவ்வளவு சந்தோஷப்படுத்தி , நம் வீட்டில் விருந்து சாப்பிட ஒரு அருந்தமிழ் மூதாட்டி ஔவைப்பாட்டி வந்துள்ளாள், என்று சொல்ல , கணவனை அந்த மனைவி பழைய முறம் ( பழைய சொழகு ) கொண்டு இங்கும் அங்கும் ஓட ஓட விரட்டி அடித்து , சாடினாள் .
பிறகு கணவன் தன் மனைவியை மிக , மிக கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பிறகு ஔவைப்பாட்டிக்கு விருந்திட ஒத்துக் கொள்கிறாள் . அதன் பின்னும் அவள் செயல்பாடு சரியில்லை . சாப்பாடோ கண் கொண்டு பார்க்க சகிக்கவில்லை .அதை அவள் பரிமாறிய விதமோ அதைவிட மோசமாக சரியில்லாமல் இருந்தது .

காணக் கண் கூசுதே கையெடுக்கநாணுதே!!!
மாணொக்க வாய் திறக்க மாட்டாதே :- வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லா ளிட்ட அமுது .
“கணவன் மீதும் , மற்றவர்கள் மீதும் அன்பு இல்லாதவள் இட்ட அமுதைக்(சாப்பாட்டை பார்க்க கண் கூசுமளவிற்கு மோசமாக இருக்கிறது ) சாப்பிட கை கூசுகிறது , வாய் திறந்து உண்ண மறுக்கிறது . அதைச் சாப்பிட நினைக்கும் போதே, ஐயோ என் எலும்பெல்லாம் பற்றி எரிகிறது ” என்று ஔவைப்பாட்டி பாடுகிறார்.

சண்டாளி , சூர்ப்பநகை தாடகையைப் போல் வடிவு
கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே ; – தொண்டா
செருப்படிதான்! செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பினிலே வீழ்ந்திடுத னேர்.
கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே ; – தொண்டா
செருப்படிதான்! செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பினிலே வீழ்ந்திடுத னேர்.
சண்டாளியைப் போல், சூர்ப்பநகையைப் போல் , தாடகைப் போல் குணங்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வடிவெடுத்தது போல் குணம் கொண்டவளை மனைவி என்று கொண்டாயே தொண்டா !!! உன் மனைவியிடம் செருப்படிதான் பெற்றாயே!நீ பெற்ற செல்லாத செல்வம் என்ன செல்வம் . நீ நெருப்பினிலே வீழ்வதற்கு சமம் இந்த மனைவியுடனான வாழ்வு .
பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம் ;- சற்றேனும்
ஏறு மாறாக இருப்பளே யாமாகிற்
கூறாமற் சன்னியாசங் கொள்.
எத்தாலும் கூடி இருக்கலாம் ;- சற்றேனும்
ஏறு மாறாக இருப்பளே யாமாகிற்
கூறாமற் சன்னியாசங் கொள்.
” கணவனுக்கு ஏற்ற பதிவிரதையான மனைவி அமைந்தால் எந்நாளும் கூடி வாழலாம் . அல்லாமல் சற்றேனும் மாறாக இப்படி அன்பில்லாதவளாக இருந்தால் சொல்லாமல் கொள்ளாமல் சன்னிசாகியாகிவிடு ” என்று கூறுகிறார் .’
“அத்தான் நீங்கள் கொலைகாரரா ?கொற்றவனைக் (மன்னனைக் ) கொன்றீர்களா ? கூறுங்கள் அத்தான் ?கூறுங்கள் அத்தான் ?”என்று கேட்கும் மனைவிக்கு ????
கணவன் சொல்வது ” ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான் ! அவள் இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தை கொன்றவன் நான் ? வாழத்தகுந்தவளை வாழாமல் வைத்துவிட்டு , பாழும் பரத்தையினால்(CALL GIRL , PROSTITUTE ) பண்புதனைக் கொன்றவன் நான் ! அந்தக் கொலைகளுக்கே ஆளாக இருந்துவிட்டேன் ! இனி எந்தக் கொலை செய்தாலும் என்னடி என் ஞானப் பெண்ணே!என்னடி என் ஞானப் பெண்ணே!
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே !!!அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே!!மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே !!! ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே !!ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே!!!ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே !!ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே!!!ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே !!!மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே !!!
” அத்தான் அத்தான் உங்கள் மீது கொடும் பழி வந்திருக்கிறதே ??என்மீது உண்மையான அன்பிருந்தால் அஞ்சாமல் உண்மையைச் சொல்லுங்கள்? யாருக்கும் அஞ்சாமல் உண்மையைச் சொல்லுங்கள் ?என்று கேட்கும் மனைவிக்கு.
அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே !அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே ! துன்பத்தைக் கட்டி சுமக்கத் துணிந்தவன் சொன்னாலுங் கேட்பானோ ஞானப்பெண்ணே ! சொன்னாலுங் கேட்பானோ ஞானப்பெண்ணே !ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே !!!மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே !!!
” அத்தான் உண்மையைக் கூற முடியாதபடி , அவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டீர்கள் ? “என்று கேட்கும் மனைவிக்கு.
தவறுக்கும் தவறான தவறைப் புரிந்துவிட்டு தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே !தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே ! தவறுக்கும் தவறான தவறைப் புரிந்துவிட்டு தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே !தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே ! பதறிப் பதறி நின்று கதறிப் புலம்பினாலும் பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே ! பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே !ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே !!!மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே !!! ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே !!ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே!!!
” உங்கள் கண்கள் எங்கே அத்தான் ?உங்கள் கண்கள் எங்கே அத்தான்?” என்று கேட்கும் மனைவிக்கு ????
கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி , மானே வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டி!!!!கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி , மானே வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டி!! பொருத்தமான துணை இருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும் போன பக்கம் போக விட்டேன் பார்வையை ?? பொருத்தமான துணை இருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும் போன பக்கம் போக விட்டேன் பார்வையை ?? அவன் பொறுத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை ? கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி , மானே வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டி!!
“கருணையே வடிவமான தெய்வமா உங்கள் கண்களைப் பறித்தது? ” என்று கேட்கும் மனைவிக்கு ????
எதிரில் வந்து கெடுக்கவில்லை , இதை எம்மிடம் கொடுக்கவில்லை . எதிரில் வந்து கெடுக்கவில்லை , இதை எம்மிடம் கொடுக்கவில்லை, எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை , அது என் தலையில் போட்டதடி பழியை ??கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி , மானே வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டி!!!
” நீதி நிலை பெற என் நெற்றியில் குங்குமம் திகழ உண்மையை கூறுங்கள் ?
” நீதி நிலை பெற என் நெற்றியில் குங்குமம் திகழ உண்மையை கூறுங்கள் ?
உங்கள் மனைவி கேட்கிறாள் ? என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறது அத்தான் ? ” என்று கேட்கும் மனைவிக்கு ????
சிங்காரங் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் , சம்சாரம் ஏதுக்கடி, மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை வாழ்த்துவதாகாதடி ?மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை வாழ்த்துவதாகாதடி ?தங்கம் மன்னிக்க கூடாதடி !!சிங்காரங் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் , சம்சாரம் ஏதுக்கடி, !??? “என்கிறார்.
கெட்டாலும் சன்னியாகலாம் .அனுபவித்து திகட்டினாலும் சன்னியாகலாம்.சந்நியாசி ஆகுபவனுக்கு நம் குடும்பத்தை பார்த்துக் கொள்ள இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை வேண்டும் .அது அளப்பரிய இறை நம்பிக்கை இருந்தால்தான் சாத்தியமாகும்…
நல்ல கட்டுரை...
ReplyDelete