அண்டம், பேராண்டம்...
காயத்திரி மந்திரத்தை எல்லாப் பிராமணர்களும் மூச்சுப் பயிற்சியுடன் கூடிய பயிற்சியை சங்கற்பம் என்பார்கள் .அது விசுவாமித்திரரால் உருவாக்கப்பட்டது.விசு என்றால் ஆகாயம் .ஆகாயத்துக்கு மித்திரன் என்றால் நண்பன் என்று பொருள்.ஆகாயக் கூறான உயிர்க் கூறு இயற்கையில் உள்ளது போல் நம்முடலில் மிகுமானால் நம்முடலும் இயற்கை போல் அழியாமல் இருக்கும்.
அதாவது ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் செய்ய வேண்டும் என்பார்கள்.ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்தான் இருக்கிறது.அதாவது உயிர் பிரிந்த போது பழுதுள்ள மூன்று பூதங்களான ஆகாயம் உயிருடன் ஓடிவிடும் ,
வாசித்துக் கொண்டிருக்கும் காற்று பின்னால் ஓடிவிடும் , காற்றில்லாவிட்டால் நெருப்பு அணைந்துவிடும் , மண்ணும் , நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும்.
இயறகையில் விண்தான் இந்த பூமி , முதலான அனைத்துக் கோள்களையும் , அண்ட பேரண்டங்களையும் தாங்கி சரியான விதியில் சுழற்றுகின்றது. நம்மால் இரண்டு பந்துகளை ஒரு குடத்தில் போட்டு ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுழற்ற முடியுமா ? இத்தனை கோடி அண்டங்களையும் , பல கோடி பிரபஞ்சங்களையும் , பற்பல கோடிக் கோடி சூரியன்களையும் அத்துடன் சேர்ந்த பல கிரகங்களையும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுழற்றும் இந்த விண் என்ற பூதம் எவ்வளவு ஆற்றல் பெற்று மற்ற பூதங்களைவிட அளவில் பெரிதாய்த் திகழ்கிறது

No comments:
Post a Comment