Sunday, October 11, 2015

''லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தனயாம்

''லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தனயாம்
ரங்க தாமேஸ்வரீம்
தாஸீபூத ஸமஸ்த தேவ வனிதாம்
லோகைக தீபாங்குராம்'
என்கிற ஸ்லோகத்தைச் சொல்லிப் பிரார்த்திக்கிறோம்.
பெண்கள் கல்யாணம் வரை பிறந்த வீட்டில் இருப்பார்கள். கல்யாணத்துக்குப் பிறகு புகுந்தவீடே, அவர்களுடைய வீடாகிவிடும். தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் வேண்டுமானால், பிறந்த வீட்டுக்கு வந்து சீர்பெற்றுச் செல்லலாம். இப்படி மஹாலக்ஷ்மிக்கு பிறந்த வீடு திருப்பாற்கடலாகவும், புகுந்த வீடு வைகுண்டமாகவும் இருந்தாலும், அவள் எப்போதும் நிரந்தரமாக இருப்பது எங்கே தெரியுமா? ரங்கத்தில்தான்! அதனால்தான் 'ரங்க தாமேஸ்வரீம்' என்று அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
தீபத்தின் ஒளியானது தன்னை மட்டும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றி இருப்பவற்றையும் வெளிப்படுத்துகிறது. அதுபோல்தான் மஹாலக்ஷ்மியும்! தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுடன், தன்னைச் சரண் அடைந்தவர்களையும் சிறப்புறச் செய்வாள்! அவளுடைய திருவடிகளைப் பற்றிக்கொள்ள யாருடைய சிபாரிசும் தேவையில்லை
-நன்றி, வேளுக்குடி கிருஷ்ண சுவாமிகள்.

No comments:

Post a Comment