Friday, October 23, 2015

பிரம்மகத்தி தோ­ஷம்

பிரம்மகத்தி தோ­ஷம் என்பது பற்றி பலரும் அறிந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் பிரம்மகத்தி தோ­ஷ­ம் என்பது மிகவும் பலமானது. அது நாட்டையே அழிக்கவல்லது.
எனவே பிரம்மகத்தி தோ­­ஷத்தில் இருந்து எங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்படியாயின் பிரம்மகத்தி தோ­ஷ­ம் எங்ஙனம் ஏற்படுகிறது என்ற கேள்வி இப்போது எழும்.
பூனூல் தரித்து வேத மந்திரங்கள் ஓதுகின்ற பிராமணோத்தமர்கள் குருவாக இருந்து இறை பரம்பொருளுக்கும் மானிடத்திற்குமான தொடர்பை ஏற்படுத்துபவர்கள்.
சிவப்பிராமணர்கள் சிவபூசை செய்து சிவசின்னங்களை தம் உடம்பில் அணிந்து சுத்த சைவர்களாக வாழுகின்றவர்கள். இதனாலேயே மும்மாரிகளில் ஒன்று வேதம் ஓதும் வேதியருக்கானது.
எனவே அந்தணச் சிவாச்சாரியார்கள் சிவாத்துவம் உடையவர்கள். அவர்களுடைய மனதை நோகடிப்பது, தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்குத் தீங்கிழைப்பது மகாபாவம். இவ்வாறாக அந்தணர்களை நிந்தனை செய்தலும் அவர்களைக் கொலை செய்வதற்கு ஒப்பான பாவத்தை இழைப்பதும் பிரம்மகத்தி தோ­­ஷத்தை உண்டு பண்ணும்.
யதார்த்த உலகில் விஞ்ஞானம் எத்துணை உச்சமடைந்திருந்தாலும் அதிசயமான-தெய்வீகமான சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இதில் ஒன்று கன்ம வினை என்பதாகும். கன்ம வினைப்பயன் என்பதை அறிந்திருப்பது மிகவும் அவசியமானது. கன்மா ஒருபோதும் எவரையும் விட்டு விடமாட்டாது. இந்த உடம்பு பிறப்பு எடுத்தாலும் இறப்பு நடப்பதும் எடுத்த சரீரத்தை விடுத்து அழிவற்ற ஆன்மா நகர்ந்து போவதும் இயல்பு.
இந்த இயல்பினிடையே எத்தனையோ இன்ப துன்பங்களை நம் வாழ்நாளில் சந்தித்து முடிக்கின்றோம். ஆக, மனித சமூகம் புண்ணிய பாவம் என்ற விடயம் பற்றி நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.
எமது தாயகத்தில் இன்று நடக்கின்ற அத்தனை பிறழ்வுகளுக்கும் அடிப்படைக்காரணம் புண்ணிய பாவம் பற்றிய நினைப்பின்மையாகும். நம் முன் னோர்களின் வாழ்வில் தர்மம் இருந்தது. நீதி, நேர்மை என்ற அறச் சிந்தனைகள் நடைமுறையில் இருந்தன.
இதற்கு அடிப்படைக்காரணம் புண்ணிய பாவம் என்ற இரு வினைக கோட்பாட்டை நம் முன்னோர்கள் முழுமையாக அறிந்தும் தெரிந்தும் நம்பியும் இருந்ததாலாகும்.
எனினும் இன்றைய சூழ்நிலையில் புத்திசாலித் தனம் என்ற பெயரால் பா காரியங்கள் நடந்தேறுகின்றன. என்றைக்கு எங்கள் இளம் சமூகம் புண்ணிய, பாவம் என்ற தருமம் உரைக்கும் தத்துவங்களை உணர்ந்து, ஏற்று அதன் வழி ஒழுகுகின் றார்களோ அன்றைக்கு எங்கள் மண்ணில் எங்கும் தர்மம், எதிலும் நீதி, எதிலும் நேர்மை என்ற அறத்துவம் பெருக்கெடுத்து ஆறாக ஓடும். அப்போது தமிழினத்தின் விடிவுதானாக ஏற்படும்.
எனினும் தர்மத்தை வாழவைக்க தர்மப் பிரபுக்கள் தோன்றி வழிகாட்ட வேண்டும். அப்போதுதான் மேற்கூறியவை சாத்தியமாகும்.
தர்மம் தழைக்க வேண்டுமாயின் நாட்டில் பாவ பழிகள், தோ­ங்கள் இல்லாது போவது அவசியம். 

No comments:

Post a Comment