சனிப் பிரதோஷத்துக்கு அப்படி என்ன தனிச் சிறப்பு?
ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளான இந்திரன் தன் இந்திர பதவியையும் செல்வங்கள் அனைத்தையும் இழக்க நேரிட்டது. இழந்த பதவியையும் செல்வங்களையும் திரும்பப் பெற ஸ்ரீமகாவிஷ்ணு விடம் முறையிட்டான். அவருடைய ஆக்ஞைப்படி தேவர்கள் பாற்கடலைக் கடைந்ததும், அதில் இருந்து அமிர்தம் தோன்றியதும் பலருக்கும் தெரிந்ததுதான். ஒரு நன்மை நடக்கவேண்டுமானால், அதற்கு முன் பல சோதனைகளும் தோன்றுவது இயல்பு. அதன்படி, பாற்கடலில் அமிர்தம் தோன்றுவதற்கு முன், மிகக் கடுமையான ஆலகால விஷம் தோன்றியது.
அதன் வீரியத்தைத் தாங்கமாட்டாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டுப் புலம்ப, சிவனார் அந்த ஆலகால விஷத்தைத் தாம் ஏற்றுக்கொண்டார். பின்னர், தேவர்கள் போற்றித் துதிக்க, நந்திதேவரின் இரு கொம்பு களுக்கு மத்தியில் நின்று ஆனந்த நடனம் புரிந்தார் சிவன். இது நடைபெற்றது ஒரு சனிக்கிழமை நாளில்தான்! பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையில் உள்ள நேரம் ஆகும்.
ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச திரயோதசி, சுக்லபட்ச திரயோதசி என இரண்டு பிரதோஷங்கள் சிவாலயங்களில் கொண்டாடப்படுகின்றன. ஈசன் ஆலகாலம் உண்டது ஒரு சனிக்கிழமை திரயோதசி என்பதால், இன்றைய சனிப் பிரதோஷம் மகா பிரதோஷம் என்று தனிச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

No comments:
Post a Comment