சனீஸ்வர விரதம்
நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஜாதகத்தில் சனி நல்ல நிலைலிருந்து கோசாரத்திலும் நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனீஸ்வரனை சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு.
கன்னி மாதத்தில் (புரட்டாதி மாதம்) கன்னிகாவிருக்ஷம் வியாபகமாகிய தினம் புரட்டாசி மாத முதற் சனி, இத்தினதில் சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான்என்பது புராணம். இதனால் புரட்டாதி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.
ஒவ்வொரு சனிக்கிழமையிலும் விரமிருக்க முடியாதவர்கள், புரட்டாதிச்சனி நாட்களில் விசேஷமாக விரதம் அனுஷ்டிப்பர்.
சனிஸ்வரனுக்குறிய தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம், எனவே கரியபட்டினைஅவனுக்கு சாத்துதலும், எள்ளுச்சாதம் நிவேதனம் செய்தலும், காகத்திற்கு உணவிடுதலும் சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய காரியங்களாகும். உணவிலே நல்லெண்ணை மற்றும் எள்ளுப்பதார்த்தங்கள் சேர்த்தல் நன்று.
இத்தினத்திலே எள்ளு, கறுப்புத்துணி, நல்லெண்ணை முதலியவற்றை தானம் செய்வதால் சனி தோஷத்தை நீக்கலாம். செப்பு பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு தமது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்தல் வேண்டும்.
ஏனைய விரதங்களுக்கு எண்ணை முழுக்கு விலக்கப்பட்ட ஒன்று. ஆனால் சனிஸ்வர விரதத்திற்கு எண்ணெய் தேய்து நீராடல் வேண்டும்.
கறுப்புத் துணியில் எள்ளுப்பொட்டலம் கட்டி அதனை சிறிய மண்சட்டியில் (சிட்டி) வைத்து நல்லெண்ணை விட்டு அதனைத் தீபமாக ஏற்றி சனிதோஷத்திற்கு பரிகாரம் செய்யலாம்.இதனை சிவனாலயங்களில் செய்வது மிகச் சிறப்பாகும்
புரட்டாதிச் சனி விரதம்
புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகள் அனைத்தும் சனீஸ்வரபகவானுக்கு மிகவும் உகந்த தினமாகும். கிரகங்களில் ஈஸ்வரர் எனும் பட்டத்தினை சிவபெருமானிடம் இருந்து பெற்றவர் சனீஸ்வரபகவான் ஆவார்.
ஒவ்வொரு வார சனிவிரதத்திலும் மேலாக புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் விரதமிருப்பது உத்தமமானது. துன்பங்கள் தீரவும், வறுமை நீங்கவும், தொழில் சிறக்கவும் சனிக்கிழமைகளில் விரதமிருப்பது சாலச்சிறந்தது. ஜாதகத்தில் சனி நீசமாக இருந்தாலும், அட்டமத்துச்சனியாக இருந்தாலும், ஏழரைச்சனியாக இருந்தாலும் சனிபகவானை விரதமிருந்து எள்ளெண்ணையில் தீபமேற்றி எள்தானம் செய்து, கருநீலப்பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சனிதோஷம் குறையும்.
முக்காலமும் அறிந்து கொள்ளும் ஞானத்தைத் தரும் வல்லமை படைத்தவர் சனீஸ்வரன் ஆவார். கடகம், சிங்கம், கன்னி இராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை நாட்டுச்சனியும், மகர இராசியில் பிறந்தவர்களுக்கு ஜென்மத்துச்சனியும் நடைபெறுகின்றது. இவர்கள் தவறாது சனீஸ்வரபகவானுக்கு எள்ளெண்ணைய் தீபம் ஏற்றி, இவர்கள் கைகளால் சனீஸ்வரபகவானுக்கு நீர் ஊற்றி, அர்ச்சனை செய்து வழிபடல் வேண்டும்.
No comments:
Post a Comment