கற்பூரதீப ஆராதனை
கோவில்களில் தெய்வங்களுக்கு கற்பூர தீப ஆராதனை செய்வதைப் பார்த்து இருப்பீர்கள். இது ஏன் தெரியுமா?
கோவில் மூலஸ்தானத்தின் கருவறையானது காற்று, ஒளி எளிதில் உட்புக முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கும். அதனால் அங்கு ஒருவிதமான இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.
நடை திறந்து திரை விலகி மணி ஓசையுடன் தீபாராதனை நடைபெறும்போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப்பிளம்பான இறைவனை நாம் காணலாம்.
இதேபோல் அலைபாயும் நம் உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான். அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடி இருக்கும். அந்த இருள் அகன்றால்தான் நம் உள் மனதில் உள்ள இறைவனைக் காண முடியும். இதையே கற்பூர தீப ஆராதனை உணர்த்துகிறது.

No comments:
Post a Comment