குமணன் என்ற மன்னன் சிறந்த கொடையாளியாகத் திகழ்ந்தான். இவனது தம்பி அமணனோ பரம கஞ்சன். அண்ணனின் பெருந்தன்மையைப் பயன்படுத்திக் கொண்ட அவன், ஒருமுறை அரசாளும் உரிமையையே தானமாகக் கேட்டான். இன்முகத்துடன் ஆட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டு காட்டுக்குப் போய்விட்டான்.
அமணனின் ஆட்சி அலங்கோல ஆட்சியாக இருந்தது. வரிகளை அதிகமாக்கி மக்களைக் கசக்கிப் பிழிந்தான். கட்ட முடியாதவர்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தான். அவன் காலத்தில் நடக்காத அட்டூழியமே இல்லை. குமணன் அமணனிடம் ராஜ்யத்தைக் கொடுத்ததை அறியாத பெருஞ்சித்திரனார் என்ற புலவர் அவனிடம் தானம் கேட்டுச் சென்றார். குமணன் ஆட்சியில் இல்லை என்பதால் அமணனிடம் தன் குடும்ப வறுமை நிலையைச் சொல்லி, குழந்தைக்கு கூட பால் இல்லை என தானம் கேட்டார். அவன் அவரை விரட்டிவிட்டான்.
""குமணன் என நினைத்து இங்கு வந்தீரா! அவன் காட்டில் இருக்கிறான். அங்கே போய் கேளும்,'' என்றான்.
புலவரும் காட்டுக்குப் போனார். அவன் ஏதும் தர இயலாத நிலையில் உள்ளதைப் புரிந்துகொண்டார். குமணனோ தன்னால் ஏதும் கொடுக்க முடியவில்லையே என நினைத்து பாம்பு புற்றுக்குள் கையை விட்டான். அதில் இருந்த நாகம், ரத்தினம் ஒன்றை அவன் கையில் போட்டது. விலைமதிப்பற்ற அந்த ரத்தினத்தை புலவரிடம் கொடுத்தான் அவன்.
தகுதியற்றவர்களுக்கு தானம் செய்யக்கூடாது. அந்ததானம் கெட்ட வழிக்குத் தான் போகும். குறிப்பாக, இக்காலத்தில் வீதிகளில் தானம் பெறுபவர்கள் மாலையானதும் குடிக்கச் செல்கிறார்கள். ஏழை மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கு தானம் செய்யுங்கள். மனநிறைவு பெறுங்கள்.

No comments:
Post a Comment