ஒரு ஆசிரமத்தில் முனிவர் ஒருவர் தன் சீடர்களுக்கு தியானம், யோகா கற்றுக் கொடுத்தார்.
சாஸ்திரங்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களை வல்லவராக்கினார். அவரது குருகுலம் என்றால், இந்தக் காலத்தில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் கால்கடுக்க தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் காத்திருக்கிறார்களே! அதுபோல, மன்னர்களும், அமைச்சர்களும், பிரபுக்களும் இந்த முனிவரின் ஆஸ்ரம வாசலில், தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க காத்துக் கிடப்பார்கள். எல்லாருமே பணக்கார வீட்டுப் பிள்ளைகள். ஒரே ஒரு ஏழை மாணவனை மட்டும் தனக்கு வேண்டிய ஒருவர் சிபாரிசு செய்ததால் சேர்த்துக் கொண்ட முனிவர், அவனை கடைசி வரிசையில் உட்கார வைத்தார். அவனுக்கு பல வேலைகளைக் கொடுப்பார். ரொம்பவும் உதாசீனப்படுத்துவார்.
தேவலோக இந்திரன் ஒரு நாள் பார்வையிட வந்தான். முனிவருக்கு தன் பள்ளியை "விசிட்' செய்ய இந்திரனே சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டதில் ஏக மகிழ்ச்சி. இந்திரன் அவருக்கு ஒரு பெட்டியைக் கொடுத்தான்.
""சுவாமி! இதில் சில பொருட்கள் இருக்கின்றன. இதை ஒன்றாகப் பொருத்தினால், ஒரு அரிய பொருள் உங்களுக்கு கிடைக்கும்,'' என சொல்லிவிட்டு கிளம்பினான்.
முனிவர் அந்த பெட்டியை அவசர அவசரமாகப் பிரித்தார். ஏதோ விலை உயர்ந்த பொருள் இருக்குமென நினைத்தார். பெட்டியில் இருந்த பாகங்களை ஒன்று சேர்க்க முயற்சித்தார். ஒன்று முடியவில்லை. வேண்டாவெறுப்பாக வெளியில் கிளம்பினார்.
திரும்ப வந்து போது, ஒரு தங்கக்கலசத்தில் அமுதம் இருப்பதைப் பார்த்தார்.
""யார் இதைப் பொருத்தியது?'' என்றார்.
""நான் தான்'' என்றான் ஏழைச்சீடன்.
"" நான் ரொம்பக் கஷ்டப்பட்டும் இதைச் சேர்க்க முடியவில்லை. நீ எப்படி சேர்த்தாய்?'' என்றார் முனிவர். அவன் அப்பாவியாக,""சுவாமி! ஒருவனுக்கு கல்வி கற்றுக் கொடுக்குமளவு திறமை இருந்தால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்த மூளையும் வேண்டும்,'' என்றான்.
முனிவருக்கு முகத்தில் ஈயாடவில்லை.

No comments:
Post a Comment