இந்த அங்க அசைவுகளை மேற்கொள்வதன் மூலம்,உடலின் அத்தனை உள்ளுறுப்புக்களும், புத்துணர்வு அடைந்து, நோய் வருமுன் உடலைக் காப்பதோடு,நோய் வந்தால்,அதை குணப்படுத்தவும் செய்கின்றன.இந்த யோக சாதன முறைகளை அட்டாங்க யோகம் என்று வகைப்படுத்தி குறிப்பிடுவர்.அதாவது எட்டு வகையான யோக சாதன படித்தரங்கள் உள்ளன.
அதில் முக்கியமானவை யம, நியம, அனுஷ்டானம் என்பவை.யமம் என்றால் எவையெல்லாம் எமன் நம்மிடம் வரும் வழியோ அவைகளை செய்யாமல் இருப்பது.அதாவது செய்யக் கூடாதவைகளைச் செய்யாமல் இருப்பது.இதையே திருப்பாவையில் ஆண்டாள் தன் பாசுரத்தில் ''செய்யாதன செய்யோம்''
என்கிறார்.
நியமம் என்பது எவைகளெல்லாம் செய்யக்கூடியவைகளோ அவைகளை அனுதினமும் செய்வது.அனுஷ்டானம் என்பது செய்யக் கூடாதவைகளைச் செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடியவைகளைச் செய்வதுமான பழக்க,வழக்கங்களை பழக்கத்திற்கு கொண்டு வருவது.இதன்மூலம் உடலை நோயை அணுகவிடாது காத்து வந்துள்ளனர்.உடலை சுத்தப்படுத்தும் முறைகளான பிரணாயாமம், பஸ்தி, குடல் சுத்தம், உடல் சுத்தம் (குளியல்) , விரதங்கள்(குடலுக்கு வாரத்தில் ஒரு நாளோ இரு நாட்களோ, உண்ணாமல் நோன்பிருப்பது),
இதையே வட மொழியில் ''லங்கணம் பரம ஔஷதம்'' என்பார்கள்,அதாவது பட்டினியே சிறந்த மருந்து என்பார்கள்.
அட்டாங்க யோகத்தைப் போலவே பரதமும் விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.வலது பக்க செயல்பாடும் இடது பக்க செயல்பாடும் ஒன்றாக்கப்படுவதே இதன் சிறப்பு.
அதாவது வலது பாகம் சிவ பாகம், இடது பக்கம் சக்தி பாகம்.இவை ஒன்றாக இரு பக்கமும் இயக்கப்படும் போது மூளையில் உள்ள வெள்ளை நிறப் பொருளும்சாம்பல் நிறப் பொருளும் நன்கு இயக்கம் பெறுகின்றன.இதன் விளைவாக உடல் ஆரோக்கியம் சீர்பெறுகிறது.அதாவதுசீராக்கப்படுகிறது.
No comments:
Post a Comment