Thursday, February 7, 2013

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் இரவு 12 மணிக்கு புத்தாண்டு வழிபாடு செய்கிறார்களே, சரியா?

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் இரவு 12 மணிக்கு புத்தாண்டு வழிபாடு செய்கிறார்களே, சரியா?
திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அரசு தனியார் நிர்வாகம் என எல்லாமே ஆங்கில மாதக் கணக்குப்படிதானே செயல்படுகிறது! எனவே ஆங்கில வருடம் என்பது இன்றைய காலத்தில் உலகளாவிய மக்கள் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. அவரவர் மதசமய சம்பிரதாயப்படி ஆண்டுகள் பலவாக பிரிந்திருந்தாலும், புத்தாண்டு தினத்தை வெவ்வேறாகக் கொண்டாடினாலும் பொது நிர்வாகம் என்பது ஆங்கில வருடம் தானே! அதன் துவக்க தினத்தில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தினால் எல்லோருக்கும் நன்மை தான். உற்சவ காலங்களிலும், வழிபாட்டு தினங்களிலும் இரவு அர்த்தயாம பூஜை தாமதமாகச் செய்யப்படுவது சாஸ்திர சம்மதம் தான்.

1 comment:

  1. மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என்பதை எடுத்துரைத்தமை பாராட்டுக்குரியது.
    சங்கர.இராமசாமி,winmaniram49@gmail.com

    ReplyDelete