ஆடி, மார்கழி மாதங்களில் சுபநிகழ்ச்சிகள் ஏன் செய்வதில்லை? வார நாட்களில் சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில்
சுபகாரியங்கள் செய்யக்கூடாது. இதுபோல நட்சத்திரங்கள் சிலவும் விலக்கத்தக்கன.
மாதங்களிலும் ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய நான்கு மாதங்களைத் தவிர மற்ற
மாதங்களில் சுபநிகழ்ச்சிகள் செய்யுமாறு சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரியன், சந்திரன்
போன்ற நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து சான்றோர்கள் இம்முறைகளை வகுத்துள்ளனர்.
இதன் காரணமாக மேற்படி நான்கு மாதங்களிலும் சுபநிகழ்ச்சிகள் செய்தால் எதிர்காலம்
நன்றாக இருப்பதில்லை என்று கணித்திருக்கிறார்கள். ஆனால், தற்போது மாசிமாதத்தில்
எல்லா சுபகாரியங்களும் செய்கிறார்கள்.
No comments:
Post a Comment