Wednesday, February 6, 2013

துறவு

துறவு




இந்த யுகத்தில், துறவறம் என்பதற்கு இல்லற துறவறமே சிறந்ததாகும். கிண்டலாய் சொன்னால், எல்லோரும் துறவி ஆகி விட்டால், பிறகு அவர்களுக்கு யார் தான் சோறு போடுவது. ஒரு இல்லறத்தை துறந்த துறவியை எடுத்துக் கொள்வோம். அத் துறவியானவர் காட்டிற்க்கோ, அல்லது ஒரு மடத்திலே சேர்ந்து துறவறம் பூண்டு தியானம், யோகம் முதலியவற்றால் ஞான நிலையை அடைந்தால் அது பெரும்பாலும் தன்னோடு முடிந்து விடுகிறது. அது தன்னுடய முக்தி நிலைக்கு கொண்டு செல்லும். பிறருக்கும் உபதேசம் செய்வார். இதில் இவர் தனக்கும் சமுதாயத்திற்கும் செய்த தொண்டில் மிக அதிக பங்கு, அவருக்கே அதிகம் இருக்கும். அனால்,

ஒரு இல்லறதுறவி,அதாவது சம்சார யுகத்தில் இருந்து கொண்டே துறவறம் மேற்கொள்வது, அவரால் இந்த சமுதாயத்திற்கே தொண்டின் பங்கு அதிகம். ஒரு கணவன் மனைவி குடும்பத்தில் இல்லற துறவறம் மேற்கொண்டால் அந்த குடும்பத்திலே இன்பம் நிறைந்து இருக்கும். இதில் துறவறம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் உணர்ச்சியின் வழியில் செல்லாமல், அறிவின் வழியில் செல்வது. நல்லறம் செய்வது. தர்மத்தை செய்வது. ஆசைகளை ஒழிக்க வேண்டாம்/முடியாது, "ஆசைகளை சீரமைப்பது". இதையே ஞான மார்க்கம் என்றும் பொருள் கொள்ளலாம். இதனால் விளைவது நல்லொழுக்கமே! அவர்கள் யாரை பார்த்தும் பொறாமை கொள்ளமாட்டார்கள், சினம் கொள்ள மாட்டார்கள், உள்ளத்தில் எப்பொழுதுமே மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். கணவன் மனைவி பண்பட்டு இருந்தால், பிறக்கும் குழந்தைகள் நன் மக்களாய் இருப்பார்கள். அவர்களால் சமுதாயத்திற்கே மிகப் பெரும் நன்மை உண்டு. அவர்கள் ஒழுக்கத்தின் மறு உருவமாய் இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் யாருடைய உடலுக்கும், மனதிற்கும் துன்பம் தர மாட்டார்கள், துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். ஆனந்தத்திலே பேரானந்தம் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வது தான். இதுவே பேரானந்தம்.

இதை காட்டிற்கு தான் சென்று பெறத்தேவையில்லை. இல்லறத்தில் இருந்தே தியானம், யோகம் முதலியவற்றின் உதவியால் நிச்சயம் இந்த நிலையை அடையலாம். கணவன் மனைவி சேர்ந்து செய்யும் தர்மமே சிறந்தது. இதற்காக தான் இறைவன் ஆணையும், பெண்ணையும் சேர்த்து படைத்திருக்கிறான். முதலில், ஒரு பெண்ணை பார்த்தால், தங்கையாகவோ, தாயாகவோ பாவிக்கும் மனநிலை வேண்டும். மக்களின் மனநிலையில் துறவி என்பவன் காவி உடுத்தி, கழுத்தில் மாலை அணித்து, சிரிக்காமல், எந்நேரமும் மந்திர ஜெபம் செய்து கொண்டே, பெண்ணை ஏறெடுத்து பார்க்காமல், சாந்தமாக இருப்பதையே நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில், ஒரு துறவியானவன், தன்னை சுற்றயுள்ள போலிகளை துறந்து, ஆசைகளை சீரமைத்து அறிவின் விழியில் நிற்பவனே யாவன். இதை T SHIRT , Jeans அணித்து கொண்டும் உணரலாம். புலன்கள் வழியில் வரும் இன்பம் நிலையற்றது என்பது புரியும். மகிழ்ச்சியிலே பெரிய மகிழ்ச்சி பிறருக்கு கொடுத்து உதவுவதில் தான் இருக்கிறது என்பது புரியும். இதையே கர்ம யோகம் என்றும் கூறலாம்

No comments:

Post a Comment