புத்தருக்குள் நான் யார்? என்ற கேள்வி
எழுந்ததால் புத்த மதம் தோன்றியது. நரேன்தரனில் நான் யார் என்ற கேள்வி எழுந்ததால்
விவேகானந்தராக மாறி பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறினார். ரமண மகரிஷியும் அதே
கேள்வியால் சிறிய வயதில் துறவறம் பூண்டு ஏகாந்தத்தை தனக்குள் உணர்ந்தார். அந்த ஒரு
கேள்விக்கு விடை கிடைத்தால் தாயுமானவர் சிறிய வயதிலயே இறையுணர்வு பெற்றார்.
பிரபஞ்சத்தில் பூரணமான இறைநிலை மனிதனிடம் அறிவாய் இயங்கக்கண்டார்கள் ஞானிகள்.
சன்யாசம் என்பது நான் என்னும் அகந்தையின் அழிவின்றிவெளி விஷயங்களை மட்டும்
துறப்பதல்ல என்ற உணர்ந்து வழிகாட்டினார்கள். நான் என்பதை உடலாய் உணர்ந்தால்
துன்பந்தான் என்பதை மகரிஷி அவர்களும்,
"உடலை எனை நினைந்தேன் உணர்சிகள்
வருத்தின ஊடலில் உயிராய் நினைந்து
உணர்ந்து அறிவில் நிறைந்தன"
என்ற பாடலில் விளக்குகிறார். மனித உருவை உடலாய் பார்ப்பதால் எதிர்பார்ப்பு, வருத்தம், துக்கம், சோகம் முதலியன உருவாகின்றன. அதை அன்பும் கருணையும் நிறைந்த உயிராக சிவமாகபார்த்தால் பேரின்பம் தான்.
"நான் யார்" என்று ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் கொலை, பழி, பாவம் அற்றுப் போகும். மகரிஷி அவர்களின் கனவின்படி போரில்லா நல்லுலகம் உருவாகும். இந்தப் பாதையின் மூலமாக குறிகிய எண்ணங்கள் மாறிப் பரந்த மனப்பான்மை உருவாகிறது. இந்த நிலையான தெயவ்வதன்மை அல்லது பூரணத்துவம் தான் முழுமையான தன்உணர்வுள்ள நிலை. அளவிடமுடியாத ஆனந்தமும் அதுவே.
அதை திருமூலர் ஒரு பாடலில்,
நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும்
நான் என்றும் தான் என்றும் இரண்டில்லை என்பதை
நான் என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான் என்று நானும் நினைப் பொழிந்தேனே.......என்கிறார்

No comments:
Post a Comment