சிவனை வணங்கும் போது, ஊனெல்லாம் உருகி, கண்ணீர் பெருகுவதாக திருநாவுக்கரசர்,
திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற தெய்வப்புலவர்களெல்லாம்
பாடியுள்ளனர். இறைவனிடம் நம் கோரிக்கையை வைக்கும் போது மனமுருகி பிரார்த்திக்க
வேண்டும். நமக்கு ஏதேனும் நோய் வந்தால், அதன் வேதனை தாளாமல், ""கடவுளே! என்
வியாதியை குணமாக்கமாட்டாயா?'' என உருகி கண்ணீர் சிந்தி வேண்டுவோம். அதுபோல், நமக்கு
ஏதேனும் பொருள் கிடைத்து இன்பமாக இருக்கும் வேளையில் கூட, ""இப்படி ஒரு பாக்கியத்தை
தந்தாயே,'' என கண்ணீர் சிந்தி வணங்க வேண்டும்.
No comments:
Post a Comment