Sunday, September 1, 2013

கிருஷ்ணன் சிறப்புகள் கூன் நிமிர்ந்த அதிசயம்!

கூன் நிமிர்ந்த அதிசயம்! ராமாயண காவியத்தில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக வருவாள் ஒரு கூனி. கிருஷ்ணாவதாரத்திலும் ஒரு கூனி உண்டு. ஆனால் இந்த கூனி நல்லவள். ஒரு முறை கிருஷ்ணரும், அவரது சகோதரர் பலராமரும் கம்சனின் அரண்மனைக்கு வரும்போது வழியில் கம்சனின் பணிப்பெண்ணாக வளைந்த கூனுடன் நின்று கொண்டிருதாள் அந்த கூனி.

திருவத்திரை என்னும் பெயர் கொண்ட அவள், கிருஷ்ணரையும், பலராமரையும் கனிவுடன் உபசரித்தாள். அவளது பணிவைக் கண்டு மகிழ்ந்த கிருஷ்ணர், அவளது கூன் உடலை அழகான உடல் அமைப்பாக்கி அருள் புரிந்தார்.

No comments:

Post a Comment