Sunday, September 1, 2013

கிருஷ்ணன் தலையை மயிலிறகு அழகு செய்கிறது இது எப்படி ஏற்பட்டது தெரியுமா?

கிருஷ்ணன் தலையை மயிலிறகு அழகு செய்கிறது. இந்த அலங்காரம் அவனுக்கு எப்படி ஏற்பட்டது தெரியுமா? கம்சனின் கொடுமை காரணமாக கிருஷ்ணருடைய பெற்றோர் சிறையில் வாடநேரிடுகிறது.

தங்கத்தொட்டிலில் இட்டு சீராட்டப்பட வேண்டிய ராஜ குழந்தை மூங்கில் கூடையில் கிடத்தப்பட்டு கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறான். இதனால் ஆயர்பாடி புழுதியில் விளையாட வேண்டியவனாகிறான். ஆனால் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது. 

அவன் புதுப்புது உத்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டான். இதனால் கண்ணனை கவுரவிக்க விரும்பினார்கள். ஆயர்பாடி சிறுவர்கள். உடனே அங்கே சுற்றித்திரிந்த மயிலைப்பிடித்தார்கள்.

அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். அன்று முதல் கிருஷ்ணனின் திருமுடியில் மயிலிறகு நீங்காத இடம் பிடித்தது

No comments:

Post a Comment